உண்மையான ஈஸ்டர் முத்திரை 61-0402 1.அதிகாலை சூரியோத ஆராதனையில், சகோதரன் நெவில் அவர்கள் மிகவும் கவனிக்க வேண்டிய ஒரு செய்தியை ஈஸ்டர் ஆராதனையில் எங்களுக்கு சொற்பொழிவாற்றினார். 2 இப்பொழுது இங்கே உட்காருவதற்கான நம்முடைய இருக்கைக்குரிய எண்ணிக்கையோ மிகவும் குறைவாயிருக்கிறபடியால், நிற்க வேண்டுமென்பது வருத்தந்தருகிறதாயுள்ளது என்பதை நான் அறிவேன். எனவே அவர்களால் ஜனங்களை ஞானஸ்நானங்கொடுக்கும் இடத்தில் அமர்த்தும்படியாக இங்கே பின்னால் திறந்துவிடக் கூடுமா என்று அவர்கள் சற்று முன்னர் என்னிடம் கேட்டனர். அப்பொழுது நானோ, “அது அவர்களுக்கான மிக நல்ல ஓர் இடமாகவே இருக்கிறது” என்று கூறினேன். அது அவர்களுக்கான மிக நல்ல ஓர் இடமாகவே இருந்தது. எனவே அவர்கள்…ஆகையால் அவர்கள் இன்னும் ஒரு சில நிமிடங்களில் திரைகளை இழுத்துவிடப் போகிறார்கள்…அப்பொழுது அவர்கள் கிட்டத்தட்ட அந்த ஓரத்தைச் சுற்றிலுமே நிற்கப் போகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் நிற்பார்களா அல்லது இல்லையா என்பதை நான் அறியேன், ஏனென்றால் அது முழுவதுமே தண்ணீரால் நிரம்பியிருப்பதை நான் காண்கிறேன். ஆகையால் அவர்கள் ஏறத்தாழ ஒரு பலகையின் அருகில் நிற்க வேண்டியதாயிருக்கும். ஆனால் அவர்களில் சிலர் அதற்கு இப்பொழுதே ஆயத்தமாகிக் கொண்டிருப்பதை நான் காண்கிறேன், ஆகையால் அவர்கள் அநேகமாக இன்னும் ஒரு சில நிமிடங்களில் அதை திறந்துவிடுவார்கள். 3 இப்பொழுது ஈஸ்டர் நம்மெல்லோருக்குமான ஒரு மகத்தான நாளாயிருக்கிறது. நாம் மிக நன்றாகவே ஈஸ்டரை விரும்புகிறோம். இப்பொழுது இந்த நிலைமையின் காரணத்தால், நாங்கள் உங்களை நீண்ட நேரம் பிடித்து வைத்துக்கொள்ள முயற்சிக்கப்போவதில்லை. 4 ஆனால் நான் இப்பொழுது ஒன்று அல்லது இரண்டு அறிவிப்புகளைக் கூற விரும்புகிறேன். அதாவது நகரத்திற்கு புறம்பேயிருந்து வந்துள்ள ஜனங்களாகிய உங்களுக்கு இப்பொழுது நம்முடைய—நம்முடைய ஆராதனைகள் அடுத்த ஞாயிறன்றேத் துவங்குகிறது. அவைகள் இல்லினாய்ஸ், புஃளூமிங்டனில் உள்ள மெத்தோடிஸ்டு கல்லூரி மைதானத்தில் அங்கேத் துவங்குகின்றன. அவைகள் இந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரையிலும் நடைபெறும். அதன்பின்னர் ஊழியர்களுக்கான சிற்றுண்டி வேளையில் ஒரு கூட்டம் இருக்கும். அதன்பின்ன்னர் ஒரு நாள் காலையில் நான் கல்லூரியிலே மாணவர் குழுவிடம் பேச வேண்டியிருக்கிறது, அங்கேயும் ஒரு காலை சிற்றுண்டி இருக்கும் என்றே நான் கேள்விப்பட்டுள்ளேன். 5 அதன்பின்னர் அந்த வாரத்தைத் தொடர்ந்து, அதற்குப் பிறகு, அதாவது இருபத்தி மூன்று தொடங்கிக் கடைசி ஞாயிறு வரையிருக்கும். இல்லையென்றால் அது என்ன? [சகோதரன் நெவில், “சகோதரரே, அங்கே அதன்மேல் ஒரு துண்டுச் சீட்டு உள்ளதே” என்கிறார்…ஆசி.] ஓ, ஆமாம். நல்லது, அது ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் அதைக் குறித்து அறிவார்கள். [“நான் அதை அறிவித்துவிட்டேன்.”] ஆம் ஐயா, அது அருமையாயும், நன்றாயுமுள்ளது. இப்பொழுது அங்கே இருந்து வருகிற ஒரு…அதாவது கடந்த இரவு நான் கேள்விப்பட்டபடி அது சிக்காகோவில் நடைபெறுவதாயுள்ளது. அவர்களால் லேன்டெக் அரங்கத்தை எடுத்து ஏற்பாடு செய்ய முடியவில்லை. ஆகையால் அந்த லேன்டெக் அரங்கத்திலிருந்து கிட்டத்தட்ட பத்து நிமிட நேரத்திற்கு வண்டியோட்டிச் சென்றால் ஓர் அரங்கம் இருக்குமாம். நான் கேள்விப்பட்டபடி அது மற்றொரு அரங்கமாம். எனவே சந்தேகத்திற்கு இடமின்றி அவர்கள் அநேகமாகக் கூட்டம் எங்கே நடைபெறும் என்பதை உங்களுக்குச் சுட்டிக்காட்ட அங்கே சில அடையாளப் பலகைகளை வைத்திருப்பார்கள். அதன்பின்னரே, நாங்கள் பிரட்டிஷ் கொலம்பியாவிற்குச் செல்கிறோம். அப்பொழுது அது ஜூலை மாதம் ஒன்று முதல் நான்கு வரை ஃபிளாரிடா, மியாமியில் நடைபெறும். 6 ஆகையால் அப்பொழுது அது கிட்டதட்ட ஒரு பெரிய கூடாரக் கூட்டமாயிருக்குமா என்று வியப்பாயுள்ளது. அது—அது வரும்போது, முடிந்த அளவு நீங்கள் எல்லோருமே உண்மையாகவே ஒரு கூட்டத்திற்காகத் தலைநகரான வாஷிங்டன் DC-யில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அது என்னுடைய முதல் கூடாரக் கூட்டமாயிருக்கும். கர்த்தர் அங்கே கூட்டத்தில் உள்ள அந்தச் சிறு இடத்தில் என்னை அவர் சந்திப்பதாக வாக்களித்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதாவது அவர்கள் அதை இப்பொழுது திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் எங்களை அழைத்து, எங்களிடமே கூறினர். அங்குள்ள வர்த்தக புருஷர்கள், அதாவது அவர்கள் நாங்கள் பேசின இடத்திலேயே அவைகூடும் மன்றத்தை எடுத்து ஏற்பாடு செய்வார்கள் அல்லது ஒரு பெரிய கூடாரத்தை அமைப்பார்கள். அவர், “பெரிய கூடாரம்” என்று கூறினவுடனே, ஏதோ ஒன்று ஒருவிதத்தில் முன் பதிவு செய்யப்பட்டது. ஒருகால் அங்கே உள்ள மாமன்றக் கூடாரத்திலேயே கூட்டம் இருக்கலாம். ஆகையால் அது மிக, மிக அருமையாயிருக்கிறது. எனவே நாம் அதைக் குறித்துப் பார்க்கலாம். பரிசுத்த ஆவியானவர் அந்தவிதமாக வழி நடத்துகிற காரணத்தால், பின்னர் சற்றுக் கழித்து உங்களை அறிந்து கொள்ளும்படிச் செய்வோம். 7 இப்பொழுது, சிலர் இங்கே சில சிறு குழந்தைகளை வைத்திருக்கிறார்கள், அவர்கள் கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்ய வேண்டுமென்று பட்டிணத்திற்கு வெளியிலிருந்து வந்திருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது, இது, அநேக ஜனங்கள் அவைகளுக்கு தெளிக்கிறார்கள். அது முற்றிலும் சரியாகக் காணப்படலாம். நான் அதற்கு விரோதமாக ஒன்றையும் கூறவில்லை. ஆயினும் தெளிப்பது என்பது குழந்தைக்கோ அல்லது பெரியவருக்கோ, வேதப்பிரகாரமானதாயிருக்கவில்லை. புரிகின்றதா? தெளிப்பு என்பதே முதலாவது கத்தோலிக்க சபையினரால் தெரிந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட திருச்சபை சம்பந்தமான ஒரு முறைமையாகும். அதன்பின்னர் கத்தோலிக்க கொள்கையை மறுத்த பிராட்டஸ்டெண்டுகளினூடாக ஒப்புவிக்கப்பட்டது. ஆனால் தெளித்தலைக் குறித்து பெரியவர்களுக்கானாலும் அல்லது குழந்தைகளுக்கானாலும் அதைக் குறித்த வேதவாக்கியமேக் கிடையாது. நம்மேல் முடிந்தளவு நெருக்கமாக, வேதவாக்கியத்தோடு நாம் தரித்திருக்க விரும்புகின்ற காரணத்தால், வேதத்தில் அவர்கள் சிறு பிள்ளைகளை நம்முடைய கர்த்தரிடத்தில் கொண்டுவந்தபோது, அவர் அவர்களைத் தூக்கி, தன்னுடைய கரங்களில் அவர்களைப் பற்றிப் பிடித்து, அவர்களை ஆசீர்வதித்து “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்” என்றார். இப்பொழுது அதைத்தான் நாம் செய்ய முயற்சித்துக்கொண்டிருக்கிறோம். அந்த வழியில் கர்த்தருடைய கட்டளைகளைப் பின்பற்றுகிறோம். நாம் சபையின் மூப்பர்களை அழைத்துக் கொண்டு வந்து, நாம் சுற்றி நின்று, கர்த்தருக்கென்று பிள்ளைகளைப் பிரதிஷ்டை செய்கிறோம். 8 நம்முடைய இசைப்பேழையை இசைப்பவர், “அவர்களை உள்ளேக் கொண்டு வாருங்கள்” என்ற நம்முடைய பாடலுக்கு இசை இசைப்பாரேயானால், அப்பொழுது சிறு பிள்ளைகளை வைத்துள்ள அந்தத் தாய்மார்கள் முன்னால் வந்து நிற்க, சகோதரன் நெவில் அவர்களும் மற்றும் சில மூப்பர்களும் இங்கே என்னோடு நிற்க அவர்கள் வருவார்களானால், அப்பொழுது நாங்கள் இந்தச் சிறு பிள்ளைகளைக கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்வோம். அவர்களை உள்ளேக் கொண்டு வாருங்கள், அவர்களை உள்ளேக் கொண்டு வாருங்கள், பாவக் களங்களிலிருந்து அவர்களை உள்ளேக் கொண்டு வாருங்கள்; அவர்களை உள்ளேக் கொண்டு வாருங்கள், அவர்களை உள்ளேக் கொண்டு வாருங்கள், சிறு பிள்ளைகளை இயேசுவண்டைக் கொண்டு வாருங்கள். 9 இப்பொழுது, தாய்மார்கள் தங்களுடைய சிறு பிள்ளைகளைக் கர்த்தருக்கு பிரதிஷ்டை செய்வது வெறுமென ஒரு முறைமையாயிருக்கிறது. இந்த ஈஸ்டர் காலையில், இந்த அதிகாலை வேளையிலும், உயிர்த்தெழுதலின் நேரத்திலும் ஒரு ஞானஸ்நான அல்லது ஒரு பிரதிஷ்டை என்பதற்கு இது என்ன ஓர் அற்புதமான நேரமாயுள்ளது. மீதமுள்ளோர் துவங்குகையில், நாம் அதை மீண்டும் பாடுவோமாக. அவர்களை உள்ளேக் கொண்டு வாருங்கள், அவர்களை உள்ளேக் கொண்டு வாருங்கள், பாவக் களங்களிலிருந்து அவர்களை உள்ளேக் கொண்டு வாருங்கள்.; அவர்களை உள்ளேக் கொண்டு வாருங்கள், அவர்களை உள்ளேக் கொண்டு வாருங்கள், சிறு பிள்ளைகளை இயேசுவண்டைக் கொண்டு வாருங்கள். 10 இப்பொழுது நண்பர்களே, நான் அவர்களை அறிவேன், அவைகள் ஒவ்வொன்றுமே உலகத்தில் மிகவும் அழகான குழந்தைகளாயிருக்கின்றன. நான் அதை அறிவேன். அதைக் குறித்து எந்தக் காரியத்தையும் இதற்கு மேலாகக் கூற நான் அறியேன். அது உண்மை. அந்தவிதமாகத் தான் நீங்கள் உணர வேண்டும். 11 அவர்கள் தேவன் உங்களுக்கு வளர்க்கும் பொறுப்பினை அளித்துள்ள சிறு பொக்கிஷங்களாயிருக்கின்றன. நான் எப்பொழுதுமே கூறியிருக்கிறேன். நான் இந்த விதமான ஒரு வார்த்தையைத் தாய்மார்களுக்குக் கூறிவருவதுண்டு. மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான் என்று எழுதப்பட்ட நான்கு சுவிசேஷங்களை நாம் அறிவோம். ஆனால் எழுதப்படாத ஐந்தாம் சுவிசேஷம் ஒன்று உண்டு. அது தாயாயிருக்கிறது. அவர்கள் மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவானுடைய போதனையைப் பெற்றுக்கொள்ளும் முன்பே அவள் தாயினுடையப் போதனையைப் பெற்றுக்கொள்கிறாள். ஆகையால் தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக இந்தப் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்புகள் தகப்பன்மார்களாகிய உங்கள் மேலும், தாய்மார்களாகிய உங்கள் மேலும் வைக்கப்பட்டுள்ளன. அதுவே உங்களுடைய இருதயத்தின் வாஞ்சையாயிருக்கிறது என்றும் நான் நிச்சயம் நம்புகிறேன். 12 நாம் அவர்களை ஜெபத்தில் தேவனண்டை உயர்த்தி, கிறிஸ்துவுக்கு உங்கள் குழந்தைகளைப் பிரதிஷ்டை செய்வோம். மூப்பர்களும் நானும் முன்னால் வரவிருக்கிறோம். நீங்கள் எங்களுக்கு வெறுமென பெயர்களைக் கூறுங்கள். இப்பொழுது இந்தப் பணியில்…என்னுடைய மனைவி என்னைக் குறித்து ஒருவிதமான பொறாமைக் கொள்கிறாள் என்பதை நான் அறிவேன். 13 லைசா ஆன் மிட்ச்சுவல்! ஓ, லைசா ஆன் மிட்ச்சுவல், எவரேனும் ஒருவருடைய கரங்களுக்கான ஒரு பொக்கிஷம். நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. 14 பரலோகப் பிதாவே, உம்முடைய ஊழியக்காரர்களாயிருக்கின்ற காரணத்தால், நாங்கள் இந்தக் குட்டி லைசா ஆன் மிட்ச்சுவலை கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் உம்மண்டை உயர்த்துகிறோம். நாங்கள் அவளை பிரதிஷ்டை செய்து, தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக அவளுடைய ஜீவியத்தை உரிமை கோருகிறோம். அவள் ஜீவித்து, வளர்ந்து, தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு ஓர் அற்புதமான நபராய் இருப்பாளாக. நாங்கள் எங்களுடைய ஆண்டவரால் கட்டளையிடப்பட்டிருக்கிறபடியால் இதைச் செய்கிறோம். நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. 15 H. A., E. J. ஜூனியர். E. J. ஜூனியர், அவர் ஒரு சிறு தூக்கத்தில் இருந்து கொண்டிருக்கையில், நாம் நம்முடையத் தலைகளை வணங்குவோமாக. 16 எங்களுடையப் பரலோகப் பிதாவே, இந்தக் குட்டி நபரை உம்மண்டை உயர்த்துகிறோம். இயேசுவானவர் வரத்தாமதிப்பாரேயானால், நீர் இவனை ஒரு தேவனுடைய மகத்தான ஊழியக்காரனாக உருவாக்கும் என்று ஜெபிக்கிறோம். அந்தத் தாய் அவனை உம்மண்டை அளிக்கிறார். நாங்களோ நீர் அவனையும், அவன் பிறந்து வந்துள்ள இல்லத்தையும் ஆசீர்வதிக்க வேண்டும் என்று கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் அவனை அளிக்கிறோம். நாங்கள் அவனை இயேசு கிறிஸ்துவிற்கு பிரதிஷ்டை செய்கின்ற காரணத்தால், அவன் தேவனுடைய மகிமைக்கென்று வளர்க்கப்படுவானாக. ஆமென். சகோதரியே, தேவன் உங்களையும், உங்களுடைய சிறுபிள்ளையையும், ஆசீர்வதிப்பாராக. நான் அந்தப் பணியினைக் குறித்து ஒருவிதமான ஜாக்கிரதையுள்ளவனாய் இருக்கிறேன், ஏனென்றால் நான் சிறு பிள்ளைகளுக்கு வருத்தம் உண்டுபண்ணிவிடுவேனோ என்று எப்பொழுதுமே பயப்படுவதுண்டு. 17 இந்தவிதமாக நீங்கள் கொடுக்கட்டும்…இதைப் போன்ற ஒரு குட்டி நபரைச் சற்றுப் பாருங்கள். இது ஒரு குட்டி நபர். பெயர் என்ன? தெபொராள் மேயர்ஸ். குட்டி தெபொராள் மேயர்ஸ், இக்காலையில் அவள் பிரகாசமான கண்களை உடையவளாயிருக்கிறாள். நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. 18 பரலோகப் பிதாவே, நாங்கள் உம்மண்டை குட்டி தெபொராள் மேயர்ஸ் என்பவளைக் கொண்டு வருகிறோம், இந்தக் குழந்தையின் மீது உம்முடைய ஆசீர்வாதங்கள் இருக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். சிறு பிள்ளைகளை ஆசீர்வதித்து, “அவர்கள் என்னிடத்தில் வருவதற்கு இடங்கொடுங்கள்” என்று கூறின எங்களுடைய கர்த்தராகிய இயேசுவின் நினைவினைப் போற்றும் வகையில், தகப்பனும், தாயும் இப்பொழுது இவளை அளிக்கையில், நாங்கள் இவளை கர்த்தருக்கென்று பிரதிஷ்டை செய்கையில், உம்முடைய ஆசீர்வாதங்கள் இந்தக் குழந்தையின்மேல் இருக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். நாங்கள் குட்டி தெபொராளை ஒரு சேவைபுரியும் ஜீவியத்திற்காக இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்மண்டை ஒப்புவிக்கிறோம். ஆமென். 19 இப்பொழுது இந்த மற்ற குட்டி நபர்களில் எந்த ஒன்று? சரி, ஐயா. இப்பொழுது, இந்த வாலிப குட்டி நபர்; சாராள் ரூத், குட்டி சாராள் ரூத் வீலர், வீலர். இனியவள். 20 எங்களுடையப் பரலோகப் பிதாவே, நாங்கள் எங்களுடையக் கரங்களில் கொடுக்கப்பட்டிருக்கிற இந்த அன்புக்குரிய குழந்தையைப் பிரதிஷ்டைக்காக உம்மண்டைக் கொண்டுவருகிறோம். நாங்கள் வணங்கின தலைகளோடும், இருதயங்களோடும் நின்று அவளுக்காக நன்றி செலுத்தி, உம்முடைய சேவைக்கான ஒரு ஜீவியத்திற்கென்று அவளுடைய ஜீவியத்தை நீர் ஆசீர்வதிக்க வேண்டுமென்று ஜெபிக்கிறோம். நாங்கள் அவளை உம்மிடத்தில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஒப்புவிக்கிறோம். ஆமென். தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது இது முற்று பெற்றுவிட்டது. அவள், “வேறேதேனும் உண்டா?” என்று கூறுவதுபோல என்னைத் திரும்பிப் பார்த்தாள். சரி. 21 ஓர் இனிமையான குட்டிப் பெண், இப்பொழுதும் உன்னுடைய பெயர் என்ன? மீகா ஹங்ரைன். இது என்ன ஓர் இனிமையானக் குட்டியாய் இருக்கிறது. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? அவள் எல்லாவற்றிலும் போதிய திறமையுள்ளவளாயும், இப்பொழுது இங்கே மேலே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ளவும் விரும்புகிறாள். நாம் நம்முடையத் தலைகளைத் தாழ்த்துவோமாக. 22 எங்களுடையப் பரலோகப் பிதாவே, நாங்கள் இந்த ஈஸ்டர் காலையில் இந்த அழகான சிறு குழந்தையை உம்மிடம் ஒப்புவிக்கிறோம். சிறு பிள்ளைகளை உம்மிடம் கொண்டு வருகிறோம். நாங்கள் இவளை சேவை புரியும் ஒரு ஜீவியத்திற்காக கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பிரதிஷ்டை செய்கிறோம். கூடுமனால், கர்த்தருடைய வருகைமட்டும் இவள் நீண்டகாலமாய் ஜீவிக்கும்படியாய் அருள் செய்யும் கர்த்தாவே. நாங்கள் அவளை உம்மிடத்தில் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிரதிஷ்டை செய்கையில்,…உமக்கென்று ஒரு சேவையை அவள் செய்யும்படி உருவாக்கும். ஆமென். 23 அவளுடைய பெயர் என்ன? ஓ, மெலின்டா, குட்டி மெலின்டா ஹங்ரைன், மெலின்டா, அவர்கள்—அவர்கள் உன்னை இந்த விதமாய் பார்க்க விரும்புகிறார்கள். நீ—நீ அழகாயிருக்கிறாய். என்னே! நாம் நம்முடையத் தலைகளை வணங்குவோமாக. 24 பிதாவாகிய தேவனே, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் இந்தக் குட்டிப் பெண்ணை உம்மிடத்தில் ஒப்புவிக்கிறோம். நாங்கள் அவளை உமக்கென்று பிரதிஷ்டை செய்கிறோம். அவளுடைய ஜீவியமானது உமக்காக சேவைபுரியும் ஒரு ஜீவியமாயிருக்கவும், நீர் அவளைக் காப்பாற்ற வேண்டுமென்றும், உமக்கு சேவை புரியும் உம்முடைய ஊழியக்காரிகளில் ஒருவளாக்கி, அதைச் செய்ய அவள் பிறந்திருக்கின்றபடியால், கர்த்தாவே அதைச் செய்யும்படியாக அவளைப் பாதுகாத்துக்கொள்ளும் என்றே ஜெபிக்கிறோம். நாங்கள் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அவளை இந்தப் பிரதிஷ்டையில் உம்மிடம் ஒப்புவிக்கிறோம். ஆமென். 25 இந்த எல்லாக் குட்டிப் பெண்பிள்ளைகளுமே!…இப்பொழுது நாம் பார்ப்போமாக…இது, ஓ, இங்கே, இந்த ஒருவர் இருக்கிறார். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? இந்தக் காலையில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? இப்பொழுது அவளுடைய பெயர் என்ன? ஜேன்…ஜேமி லைன் டால்டன். 26 எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் இந்த இனிமையான குட்டி பெண்ணை உம்மண்டைக்கு கொண்டுவருகிறோம். நீர் அவளை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். கர்த்தாவே, நீர் இந்தப் பிள்ளைகளுடைய வீடுகளை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். அவர்கள் உமக்காக சேவைபுரியும் ஒரு ஜீவியத்திற்கென்று தேவனுடைய போதனையில் வளர்க்கப்படுவார்களாக. நாங்கள் அவளை தேவனுக்கென்று தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிரதிஷ்டை செய்கையில், இந்தக் குட்டிச் செல்லப் பிள்ளையை நாங்கள் உம்மண்டை ஒப்புவிக்கிறோம். ஆமென். உங்களுடைய சிறு குழந்தை இனிமையாய் இருக்கிறது. 27 நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நல்லது, இப்பொழுது, உன்னால் கிட்டத்தட்ட என்னை அப்படியே பற்றிப் பிடித்துக்கொள்ள முடிகிறது. உன்னால் பற்றிப் பிடித்துக்கொள்ள முடியவில்லையா? அவளுடைய பெயர் என்ன? தெரேசா காபர்ட். இங்கே நோக்கிப் பாருங்கள். தெரேசா, அவள் ஓர் அழகானக் குட்டியாயிருக்கவில்லையா? இந்தச் சிறு குழந்தைகள் எல்லோருமே அப்பேர்பட்ட அழகான குழந்தைகளாய் இருக்கிறார்கள். 28 எங்களுடையப் பரலோகப் பிதாவே, நாங்கள் இந்தச் செல்லப் பிள்ளையான சிறு பெண்ணை, அதாவது அவளுடைய அன்பார்ந்தவர்கள் எங்களுக்கு அளித்திருக்கிற இவளை உம்மண்டை ஒப்புவிக்கிறோம். நாங்கள் உம்மண்டை இந்தப் பிள்ளையைப் பிடித்திருக்கையில், நாங்கள் அவளை தேவனுக்கென்று சேவை புரியும் ஒரு ஜீவியத்திற்காக உம்மண்டை ஒப்புவிக்கிறோம். நாங்கள் தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் தேவனுடைய சேவைக்கென்று அவளைப் பிரதிஷ்டை செய்கிறோம். ஆமென். 29 சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நாங்கள் ஜெபிக்கையில் உங்களுடைய சிறுமியையும் ஆசீர்வதிப்பாராக. சிறிய நீலநிறக் கண்கள்; பழுப்பு நிறக் கண்கள். அவளுடைய பெயர் என்ன? சிந்தியாள், குட்டி சிந்தியாள், சிந்தியாள், இங்கேப் பார். அவைகள் அழகான குட்டிக் கண்கள். 30 எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் இந்தக் காலையில் இந்தக் குட்டிப் பெண்ணை உம்மண்டை ஒப்புவிக்கிறோம். அவள் நீண்டகாலம் ஜீவிப்பாளாக. அவள் உம்முடைய ஊழியக்காரியாக இருப்பாளாக. அன்பார்ந்தவர்கள் அவளைப் பிரதிஷ்டைக்காக என்னுடையக் கரங்களில் கொடுத்திருக்கிறார்கள். நான் அதை மூப்பர்களுக்கு முன்பாகக் கொண்டுவந்து, அதைத் தேவனுக்கு முன்பாக வைத்து, தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவனுடைய ஊழியத்திற்கென்று பிரதிஷ்டை செய்கிறேன், ஆமென். 31 இப்பொழுது, இதுவும் ஒருவிதமான மிகச் சிறிய ஒன்றாயுள்ளது. இப்பொழுது மேடா, இந்த ஒன்றை இங்கே பற்றிப் பிடிக்க நீ மேலே இருந்திருக்க வேண்டும். நான் எப்பொழுதுமே இவர்களை இறுக்கி முறுக்கிடுவேனோ என்று பயப்படுகிறேன். ஜேம்ஸ், ஜேம்ஸ் பிளிஸ். அவன் மிகவும் ஞானமாய் காணப்படுகிற குட்டி நபராய் இருக்கிறான். அவன் அவ்வாறில்லையா? அதுதான். 32 எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் இந்தக் குட்டி ஜேம்ஸை உம்மிடம் ஒப்புவிக்கிறோம். வேதாகமத்தில் இவன் பெயரைப் போன்றே வருகின்ற யாக்கோபைப் போல இவன் இருப்பானாக. அவன் கர்த்தருடைய ஊழிய ஆலோசனையில் ஞானத்தைக் காண்பித்தான் என்பதில் சந்தேகமேயில்லை. உமக்கு சேவை புரியும் ஒரு ஜீவியமாக இருக்க நீர் இவனை ஆசீர்வதியும் என்று நான் ஜெபிக்கிறேன். இவன் வளர்ந்து வருகிற இல்லத்தையும் ஆசீர்வதியும். இவன் தேவனுடையப் போதனையில் வளர்க்கப்படுவானாக. நாங்கள் இவனை தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவனுடைய ஊழியத்திற்கென்று பிரதிஷ்டை செய்கிறோம். ஆமென். 33 நான் நிச்சயமாக நேசிக்கிறேன்…இந்தக் குட்டிப் பெண்ணின் பெயர்? தேனே, இங்கே மேலே வா. ஹூ? டாமி பெளரன்…ஓ, குட்டி டாமி பெள்ரன். இவளுடைய தாயும், தகப்பனும் இந்தக் காலையில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர். மற்றொரு அழகான குட்டிப் பெண். நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. 34 பிதாவே, நாங்கள் இந்தச் சிறு குழந்தையை உம்மிடம் கொண்டு வருகிறோம். நீர் உம்முடைய பூமிக்குரிய யாத்திரையில் இருந்தபோது, தாய்மார்கள் இவர்களை உம்மண்டை கொண்டு வந்தது போன்ற ஒரு காரியமாய் இது இருப்பதை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். கர்த்தாவே, நாங்கள் இவளை உமக்கு பிரதிஷ்டை செய்கிறோம். இவளுடைய தகப்பனும், தாயும் இங்கே இக்காலையில் அந்த விலையேறப்பெற்ற கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர் என்பதை நான் அறிந்து கொண்டேன். ஆகையால் இவளுடைய இல்லம் சரியானதாயிருக்கும். எனவே நாங்கள் இவளை அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவனுடைய ஊழியத்திற்காக அவருக்கு பிரதிஷ்டை செய்கையில், நீர் அவளை ஆசீர்வதித்து, ஒரு சேவை புரியும் ஜீவியத்தை அவளுக்கு அருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஆமென். 35 உங்களுக்கு நன்றி. ஓ, காத்திருங்கள், நான் வருந்துகிறேன், நான் இதைக் காணவில்லை. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நல்லது, என்னே ஓர் அருமையான மனிதன். என்னால் உங்களை பிடித்துக்கொள்ள, பிடித்துக்கொள்ள முடியுமா? அருமை. இவனுடைய பெயர் என்ன? டானி ஜான்சன், டானி வில்லியம் ஜான்சன். ஓ, என்னே, இவனும்கூட ஒரு பிரசங்கியைப் போன்றேக் காணப்படுகிறான். இவன் அவ்வாறு காணப்படவில்லையா? 36 பரலோகப் பிதாவே, நாங்கள் இந்தக் குட்டிப் பையனை உம்மிடத்தில் கொண்டு வருகிறோம். இது என்ன என்பதைக் குறித்து அறிந்து கொள்ள இவன் மிகவும் சிறு குழந்தையாயிருக்கலாம். ஆனால் கீழ் நோக்கிப் பார்த்து, இந்தக் காரியத்தை அறிந்திருக்கிற ஒரு தேவன் பரலோகத்தில் உண்டு. கர்த்தாவே, தாயானவள் இவனை எங்களுடையக் கரங்களில் வைக்கையில், நாங்கள் இவனை உம்மண்டை ஒப்புவிக்கிறோம். நாங்கள் விசுவாசத்தினால் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வந்து, தேவனுடையக் கிருபைக்கு ஒரு வெற்றிச் சின்னமாக இவனை உரிமைக்கோரி, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவனுக்கென்று இவனை பிரதிஷ்டை செய்கிறோம். ஆமென். அருமையானவனே, உன்னை ஆசீர்வதிக்கிறேன். 37 நாம் எல்லோரையும் பிரதிஷ்டை செய்துவிட்டோமா? இப்பொழுது, இங்கே என்ன ஓர் அழகான சிறு பெண் வருகிறாள்…நீ மிகவும் அழகு வாய்ந்த சிறு உடையையும், சிறு தொப்பியையும் அணிந்திருக்கிறாய். அட்லர், அட்லர், எலன் கெயில் அல்டர், என்ன ஓர் அழகான சிறு பெண். 38 எங்களுடையப் பரலோகப் பிதாவே, நான் இந்த இல்லப் பொக்கிஷத்தை, உலகத்திற்கு வந்துள்ள ஒரு குட்டிப் பெண்ணை உம்மண்டைப் பிடித்திருக்கிறேன். இந்தப் பொல்லாத நாட்களில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்து, உமக்கு ஊழியம் செய்வதற்காக பிரதிஷ்டை செய்யப்பட இவளை அன்பார்ந்தவர்கள் முன் கொண்டு வருகின்றனர். நாங்கள் இந்தக் குழந்தையினுடைய ஜீவியத்தை தேவனுக்கான ஒரு வெற்றிச் சின்னமாக உரிமை கோருகிறோம். நாங்கள் தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவனுடைய சேவைக்கென்று இவளை பிரதிஷ்டை செய்கிறோம். ஆமென். தேனே உன்னை ஆசீர்வதிக்கிறேன். 39 இதோ ஒரு சிறு பிரசங்கியரான பையன், அவர்கள் இருவருமே. அவர்கள் இரட்டைக் குழந்தைகளா? ஐந்து மற்றும் எட்டு, இந்த ஒருவருடைய பெயர் என்ன? ஜானி, வெர்ஜினியாவில் உள்ள ரிச்மண்டிலிருந்து, ரிச்மண்டிலிருந்து வருகிறார். உன்னுடைய முகம் எனக்கு நினைவிற்கு வந்ததை நான் எண்ணிப் பார்த்தேன். கர்த்தர் பிரசன்னமாயிருந்தபோது, நாம் ஒன்று சேர்ந்து ஒரு நேர்முகப் பேட்டியைக் கண்டோம். உன்னை என்னால் நினைவிற்கு கொண்டுவர முடியவில்லை. உன்னுடைய முகத்தை நான் அறிந்திருந்தேன். நீ யாராயிருந்தாய் என்று என்னால் கூற முடியவில்லை. சரி. நல்லது, இவன் சரியான இல்லத்தில் தோன்றியுள்ளான் என்பதை நான் அறிவேன். இவனுடைய பெயர் ஜான், ஜானி. 40 எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் இந்தச் சிறு பையன் ஜானியை உம்மண்டைக் கொண்டுவருகிறோம். நாங்கள் எங்களுடைய கரங்களை அவன் மீது வைக்கிறோம். ஏனென்றால், அதுவோ நீர் அதைச் செய்தவிதமாய் உள்ளது. நீர் உம்முடைய கரங்களை அவர்கள் மீது வைத்தீர். எனவே நாங்கள் இவனை ஆசீர்வதித்து, தேவனுடையக் கிருபையின் ஒரு வெற்றிச் சின்னமாக இவனுடைய ஜீவியத்தை உரிமைக்கோரி, இவனை தேவனுடைய சேவைக்கென்று தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிரதிஷ்டை செய்கிறோம். ஆமென். சிறு பையனே உன்னை ஆசீர்வதிக்கிறேன். 41 லூயிஸ், இது லூயிஸ். பரலோகப் பிதாவே, நாங்கள் இந்தச் சிறு பையன் லூயிஸை உம்மண்டைக் கொண்டு வருகிறோம். தகப்பனாரோ தேவனுடைய வீட்டில் சேவை புரிவதற்கென பிரதிஷ்டை செய்வதற்காகவே இவனை முன்னேக் கொண்டு வருகிறார். 42 கடந்த நாட்களைக் குறித்து நாங்கள் நினைக்கையில், அன்னாள் தேவாலயத்திற்குள் சென்று ஜெபித்துக்கொண்டிருந்தபோது, தேவன் அவளுக்கு ஒரு குழந்தையை அளித்தார். அவளோ அந்தக் குழந்தையை திரும்பவும், அவனைத் தேவனண்டைக்கே கொண்டு வந்தாள். அதைத்தான் இந்த ஜனங்கள் இன்றைக்கு செய்கின்றனர்; அவர்களுடைய சிறு பிள்ளைகளைத், தங்களுடையப் பொக்கிஷங்களை, அவர்களை பிரதிஷ்டை செய்ய உள்ளே கொண்டு வருகிறார்கள். பிதாவே தீர்க்கதரிசியோ அவனை ஏற்றுக்கொண்டு, அந்தச் சிறு நபரை வளர்த்தான். அவனும் ஒரு தீர்க்கதரிசியானான். இப்பொழுது, நாங்கள் இந்தக் காலையில் குட்டி லூயிஸை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய சேவைக்கென்று பிரதிஷ்டை செய்கிறோம். ஆமென். மகனே, உன்னை ஆசீர்வதிக்கிறேன். நிச்சயமாகவே இக்காலையில் வெர்ஜினியாவில் உள்ள ரிச்மண்ட் என்ற இடத்திலிருந்து இங்கு வந்துள்ள உன்னைக் காண்பது நலமாயுள்ளது. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. 43 இப்பொழுது, நாம் பார்போம், இது அதுவா? சரி. ஓ, இது அந்தக் குட்டி நபர்கள்! உங்களுக்குத் தெரியாது, நான், நாம் இந்தக் காலையில் அநேக சிறு மிஷினெரிகளையும், பிரசங்கிகளையும் பிரதிஷ்டை செய்திருக்கலாம். நமக்குத் தெரியாது. அவை யாவுமே சர்வ வல்லவருடைய கரங்களில் உள்ளது. 44 நான் இங்கே கூடாரத்திலே இன்றிரவு நடைபெறவுள்ள ஆராதனைகளை அறிவிக்க விரும்புகிறேன். ஓர் இராபோஜன ஆராதனையும் இருக்கும். நீங்கள் ஒருபோதும் எங்களுடைய இராபோஜன ஆராதனைகள் ஒன்றில் பங்குபெறாமலிருந்தால், நாங்கள் பாதங் கழுவுதலையுங் கூடக் கடைப்பிடிக்கிறோம். 45 இப்பொழுதோ ஜெபிக்கும்படியாக சில உருமால்கள் இங்கே எனக்காக வைக்கப்பட்டுள்ளன. ஒன்று இங்கு சபையில் உள்ள நம்முடைய சகோதரன், சகோதரன் கிரிம்ஸ்லே அவர்களுக்குச் சொந்தமானது. இவைகள் யாருடையவைகளென்று எனக்குத் தெரியாது. நாம் இவைகளை உலகத்தைச் சுற்றிலும் உள்ள ஆயிரக்கணக்கானவர்களுக்கு அனுப்புகிறோம். இப்பொழுது நாம்…நான் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கத் துவங்கினப் பிறகு அவைகளுக்காக நான் ஜெபிக்க விரும்புகிறேன். 46 நான் ஈஸ்டர் செய்தியைக் குறித்த சிறு தொடர்ச்சியின் பேரில் சற்று நேரம் முதலில் பேச விரும்புகிறேன். இப்பொழுது நாம் தேவனுடைய வார்த்தையை அணுகுவதற்கு முன்னர், நாம் ஜெபத்தின் மூலம் அவரை அணுகுவோமாக. 47 எங்கள் பரலோகப் பிதாவே, நாங்கள் இந்த மகிமையான காலைக்காக இந்தக் காலையில் எங்கள் இருதயங்களில் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்து, தம்முடைய சபைக்கு திரும்பவும், தன்னையே என்றென்றைக்கும் உயிரோடிருக்கிறவராக அளித்தபோது, அது உயிர்த்தெழுதலையும், எங்களுடைய மார்க்கத்தின் முத்திரையிடப்பட்ட நிரூபணத்தையும் சுட்டிக்காட்டுகிறதற்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நாங்கள் இன்னமும் உயிர்த்தெழுந்த ஒரு கிறிஸ்துவின் சீஷர்களோடு மகிழ்ந்து ஐக்கியங்கொள்வதற்கு மிகுந்த சந்தோஷப்படுகிறோம். கர்த்தாவே, இங்கே இரட்சிக்கப்படாமலிருக்கிற ஒவ்வொரு நபரும் அவரைத் தங்களுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் வரையில் அவருடைய பிரசன்னம் இந்தக் கட்டிடத்தில் இக்காலையில் அவ்வளவாய் உணரப்பட வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். அவருடைய ஆவியினால் நிரப்பப்படாமலிருக்கிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியானவர் அவர்கள் மேல் முடிவுற்ற கிரியை செய்யும் நாளாய் இது இருப்பதாக. அவர் வியாதியஸ்தரை சுகப்படுத்தினத் தம்முடைய மகத்தான பாவநிவிர்த்தியில், அவர் ஜனங்களண்டை நெருங்கி வரும்படியாக அந்த விசுவாசமானது உயர்த்தப்பட்டு, கர்த்தாவே, அது அவிசுவாசத்தின் மீது அதிகாரம் செலுத்த, அதன் காரணமாக வியாதியஸ்தரும், பாதிக்கப்பட்டோரும் நன்கு சுகமடைந்து இங்கிருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்றே நாங்கள் வேண்டிக் கொள்கிறோம். கர்த்தாவே, நீர் உம்முடைய உயிர்த்தெழுதலின் வார்த்தையை விளக்கிக் கூற பொறுப்பெடுத்துள்ள ஒருவரை இப்பொழுதே ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். தேவனே எங்குமுள்ள ஊழியக்காரர்கள் யாவரையும், உம்முடைய பிள்ளைகளையும், தேசத்தினூடாகவும், உலகத்தினூடாகவும் உள்ள உம்முடைய ஊழியர்களையும் ஆசீர்வதியும். 48 கர்த்தராகிய இயேசுவே சீக்கிரமாய் வாரும், ஏனென்றால் நாங்கள் ஆகாயத்தில் மேகங்கள் மிதப்பதைக் காண்கிறோம். மேல்நோக்கிச் செல்லும் ஒரு மகத்தான காரியம் உண்டு என்பதை நாங்கள் அறிவோம். உம்முடைய ஜனங்களை செயல்பட ஆயத்தமாக்கும். ஓ, அவர்கள் சத்தியம் என்னும் பட்டயத்தை எடுத்து, சர்வாயுதவர்க்கத்தை தரிப்பித்து, தலைச்சீராவை தரித்து, சுவிசேஷத்தினால் தங்களைத் தொடுத்துக் கொண்டு, எல்லாக் காரியங்களுக்கு மேலாக விசுவாசம் என்னும் கேடகத்தை எடுத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்வார்களாக. இதை அருளும் கர்த்தாவே, ஏனென்றால், யுத்த புகைமேகங்கள் தாழ்வாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இன்றைக்கு இப்பொழுதே எங்களை ஆசீர்வதியும், ஏனென்றால் அது சீக்கிரம் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம், எங்களுக்கு தெரிந்தமட்டில், நாங்கள் சீக்கிரத்தில் இயேசுவைக் காண்போம் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். நாங்கள் செல்ல ஆயத்தமாய் இருக்க வேண்டும் என்றே நாங்கள் ஜெபிக்கிறோம். எங்கள் இருதயங்களை நாங்கள் ஆயத்தப்படுத்தி, அதை முடிவாக்க, எல்லாவற்றிலும் அதை இன்றைய காலை ஆராதனையில் ஒழுங்குப்படுத்திக்கொள்ளுவோமாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உம்முடைய வார்த்தையினூடாக எங்களிடத்தில் பேசும். உம்முடைய வசனமே சத்தியமாயிருக்கிறது. ஆமென். 49 இப்பொழுது நீங்கள் வேதவாக்கியங்களை என்னோடு வாசிக்க விரும்பினால், லூக்கா 24-ம் அதிகாரத்திற்குத் திருப்புங்கள். நான் இங்கே அதிலிருந்து சற்று நீளமான பகுதியை வாசிக்க விரும்புகிறேன். கர்த்தருக்குச் சித்தமானால், நான் ஒரு சில நிமிடங்கள் பேச விரும்பும் அடிப்படையின் பின்னனியை அதிலிருந்து எடுக்க விரும்புகிறேன். இப்பொழுது, உங்களுக்கு விருப்பமானால் இது உஷ்ணமாயிருந்தால், நான் யூகிக்கிறேன் அல்லது என்னவாயிருந்தாலும், நீங்கள் உங்களால் முடிந்த அளவிற்கு உங்களை நீங்களே செளகரியப்படுத்திக் கொள்ளுங்கள். நான் கூடுமானவரைத் துரிதமாக முடித்துவிடுவேன். 50 நாங்கள் இதைக் கூற விரும்புகிறோம். அதாவது நாங்கள் நிச்சயமாகவே இங்கு வருவதற்குரிய உங்களுடையப் பற்றுறுதியைப் பாராட்டுகிறோம். சுவிசேஷமானது தன்னுடையக் கவர்ச்சியை இழந்துவிட்டது என்று ஜனங்கள் கூற முயற்சிக்கிறபோதிலும், ஜனங்கள் தேசத்தைக் கடந்து வந்து, கர்த்தருடைய ஓர் ஆராதனைக்காக தங்களடைய கைக் கால்கள் வலித்துக் கொண்டிருக்க ஓர் இடத்தில் நிற்கும்போது, அது தேவனைக் காண தங்களுடைய இருதயத்தில், இன்னமும் வாஞ்சைக் கொண்டிருக்கிற ஜனங்கள் உண்டு என்றும், தேவன் அப்படிப்பட்ட ஜனங்களை உடையவராயிருக்கிறார் என்பதையுமே இன்னமும் காண்பிக்கிறது. அதே சம்யத்தில் சுவிசேஷமானது அதனுடைய எளிமையில், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் போன்றே அவ்வளவு எளிமையாய் இருக்கிறது. அதே சமயத்தில் கிறிஸ்துவின் சுவிசேஷம் எப்போதும் பூமியை வந்தடைந்துள்ள வல்லமையிலேயே மிகவும் மகத்தானதாய் உள்ளது. சுவிசேஷமானது வார்த்தையாய் மாத்திரமல்லாமல், பரிசுத்த ஆவியின் வல்லமையும், கிரியைகளினூடானதுமாயிருக்கிறது. நாம் இப்பொழுது பரி. லூக்கா 24-ம் அதிகாரத்தில் 36 வது வசனத்திலிருந்து வாசிக்கையில் அவர் இந்தக் காரியங்களை நமக்கு அருளுவாராக. இவைகளைக் குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான் தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள். என்னைத் தொட்டுப் பாருங்கள், நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி. தம்முடைய கைகளையும், கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்; புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கைகளையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து, அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேற வேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார். அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி: எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள். என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார். பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டு போய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார். அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பி வந்து, நாடோறும் தேவலாயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக் கொண்டிருந்தார்கள். ஆமென். இப்பொழுது நான் இதை ஒரு பாடப்பகுதியாக அழைக்க வேண்டுமானால், நான் அதை “உண்மையான ஈஸ்டர் முத்திரை” என்று பொருள் கொள்ள விரும்புகிறேன். 51 ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு முன்னர், இங்கே நியு ஆல்பனிக்கு கீழே உள்ள ஒரு சிறு பட்டணமான ஜார்ஜ்டவுனுக்கு செல்லும் பாதையில் நான் இருந்தபோது, அப்பேர்ப்பட்ட ஒரு காரியத்தைக் குறித்து எண்ணிப்பார்க்க எண்ணம் எனக்கு உண்டானது. அங்கே பையன்கள் வீதியிலே நின்றுகொண்டு, ஈஸ்டர் முத்திரைகளுக்காக காணிக்கை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது நான் ஈஸ்டர் முத்திரையைக் குறித்து சிந்திக்கத் துவங்கினேன். எனவே நான், “ஈஸ்டர் முத்திரை என்றால் என்ன? நிச்சயமாகவே, இந்தப் பையன்கள் ஓர் ஈஸ்டர் முத்திரைக்களுக்காக காணிக்கை எடுத்துக்கொண்டிருப்பதைக் காட்டிலும் அது அதிகமாக பொருள்படுகிறதே” என்று எண்ணினேன். மேலும் நான், “இப்பேர்பட்ட முத்திரைகளோடு அவர்கள் என்னச் செய்கிறார்கள் என்றும், அவர்களுக்காக, இல்லை அவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட பங்களிப்பைப் கொண்டு என்ன செய்கிறார்கள்?” என்றும் எண்ணிப்பார்த்தேன். அவர்கள் உண்மையிலேயே இந்த முத்திரைகளைக் கடிதங்கள் மேலும், மற்றக் காரியங்கள் மேலும் இடுகின்றனர். இது அவர்களுக்கான ஓர் இலவச காணிக்கையாக உள்ளது. அது மருத்துவமையில் எலும்புருக்கி நோய் போன்றவைகளால் பாதிக்கப்பட்ட ஜனங்களுக்கு செலவு செய்யவும், அவர்கள் மரித்துப்போகின்ற வரையில் மருத்துவமனையிலே தங்கியிருக்கும்படி செலவு செய்யவுமே இவைகள் அனுப்படுகின்றன. நானோ, “நிச்சயமாகவே, ஓர் ஈஸ்டரின் முத்திரையானது, ஈஸ்டர் அதைப் பார்க்கிலும் அதிகமான ஒரு காரியமாய் இருக்கிறதே. அது ஒரு நபரை ஒரு மருத்துவமனையில் வைத்து, அவனை செள்கரியமாக பராமரிப்பதைக் காட்டிலும் மேலான ஒரு காரியத்தை பொருட்படுத்துவதாகுமே” என்பதை எண்ணிப்பார்த்தேன். அது மிகவும் அருமையானதாய் இருக்கிறது; நான் அதற்கு எதிராக ஒன்றையும் கூறவில்லை. அதை, தேவன் அவர்களை ஆசீர்வதிப்பாராக; அது ஓர் அற்புதமான காரியமாய் இருக்கிறது. ஆனால் இன்னமும், அது அதைப் பார்க்கிலும் சற்று மேலாகச் செல்ல வேண்டும் என்பது போன்று அது தென்படுகிறது. அதாவது ஈஸ்டர் கிறிஸ்தவ சபைக்கும், நம்முடைய கிறிஸ்தவ சுதந்தரத்திற்கும், உயிர்தெழுதலின் முத்திரைக்கும் மிக அதிகப் பொருள் கொண்டதாய் காணப்பட்டுக் கொண்டிருக்கிறது. எப்படி ஒரு சிறு தபால் தலையைப் போன்றது அதனுடைய ஸ்தானத்தை எடுத்துக்கொள்ள முடியும்? அது எடுத்துக் கொள்ள முடியாதே. ஆகையால் நான், “ஈஸ்டர் முத்திரை என்னவாயிருந்தது?” என்று அதன்பேரில் சிந்திக்கத் துவங்கினேன். அந்தவிதமாகத்தான் நான் இந்தக் காலையில் ஈஸ்டர் முத்திரையின் பேரில் பேசுவதைக் குறித்த இந்தக் கருத்தினை வெளிக்கொண்டு வந்தேன். 52 இப்பொழுது ஈஸ்டர், மற்றும் முத்திரைகள் முதலியன வேதாகமம் முழுவதுமே இருந்து வருகிறது. நாம் அவைகளைக் கண்டறிகிறோம். அவைகள் வேதாகமத்தைப் போன்றே அவ்வளவு பழமையானவைகளாயிருக்கின்றதையும், முன்னமே ஏதேன் தோட்டத்திலிருந்தே இருப்பதையும் நாம் கண்டறிகிறோம். ஆகையால் நாம் எந்தக் காரியத்தையாவது, நாம் வேதாகமத்தில் எங்காவது கண்டறிய வேண்டுமாயின், அப்பொழுது ஆதியாகமத்திற்குத் திரும்பிச் செல்கிறோம். அவையாவுமே ஆதியாகமத்தில்தான் துவங்கின. 53 அதன்பின்னர் நான் என்னுடைய சிந்தையில் கொண்டிருந்த ஈஸ்டர் முத்திரையை, அதை சிந்தித்துக் கொண்டிருந்தேன். பின்னர் ஏன் அது புறக்கணிக்கப்பட்டது என்றும், ஜனங்கள் எப்படி அதை மறுக்க மனமுடையவர்களாயிருக்கிறார்கள் என்றும் நான் வியப்புற்றேன். அது ஏன் அவ்வளவாக இகழப்பட்டது? அப்படியானால் அது எப்பொழுதும் இகழப்படுகிறதில்லையே என்றும், எல்லா ஜனங்களும் அதை இகழுகிறதில்லை என்பதையுங் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். 54 ஆனால் தேவன் ஒரு வழியை உண்டுபண்ணியிருக்கிறார். அதாவது மனிதன் ஒரு தீர்மானத்தை எடுக்கப் பலவந்தம்பண்ணப்படுகின்ற ஒரு நிலைமைக்குள்ளாக அவன் வைக்கப்பட்டிருக்கிறான். மனிதனால் ஒரு தீர்மானம் செய்யாமல் பூமியின் மேல் வாழ முடியாது. தேவன் இந்த செயல்முறையை அவனுக்கு பலவந்தம்பண்ணுகிறார். அவன் ஒரு தீர்மானத்தைச் செய்ய வேண்டும். நீங்கள் பள்ளிப்பருவத்தைக் குறித்து ஒரு தீர்மானத்தைச் செய்ய வேண்டிய ஒரு நேரம் உண்டு. நீங்கள் யாரை மணந்து கொள்வீர்கள் என்பதைக் குறித்து ஒரு தீர்மானத்தைச் செய்ய வேண்டும். நீங்கள் பல்வேறுபட்டக் காரியங்களைக் குறித்து தீர்மானங்களைச் செய்ய வேண்டும். 55 ஆனால் ஏதேன் தோட்டத்தில், அங்கே அவர்கள் இரண்டே பையன்களை மாத்திரமே உடையவர்களாயிருந்தனர். அப்பொழுது மனிதன் மேல் ஒரு தீர்மானம் செய்ய வேண்டிய தீர்மானம் பலவந்தம்பண்ணப்பட்டது. அது அவனுடைய உண்மையான நிறத்தைக் காண்பிக்கவும், அவன் என்னவாயிருக்கிறான் என்றும், அவனுடைய உட்புறத்தில் அவன் என்னவாயிருக்கிறான் என்றும் காண்பிக்கவே செய்யப்பட்டது என்று நான் கருதுகிறேன். இப்பொழுதும் அந்த நேரம் வந்துவிட்டது என்பதை நாம் கண்டறிகிறோம், காயீனுக்கும் ஆபலுக்குமிடையே, அந்தத் தீர்மானம் பலவந்தம்பண்ணப்பட வேண்டியதாயிருந்தது. ஏனென்றால் அது ஆராதனையின் நேரத்தில் உண்டாயிருந்ததாயிருந்தது. ஒவ்வொரு பையனும் தேவனுக்கு ஓர் ஆராதனைச் செய்ய ஒரு வழியை தருவித்திருந்தனர். 56 நீங்கள் கவனிப்பீர்களேயானால், சரியானதற்கும் தவறானதற்கும் இடையே வெறுமென ஒரு சிறு மூச்சளவு நேர வித்தியாசமேயிருந்தது. சரியானதற்கும் தவறானதற்குமிடையே, அதாவது தவறானதோ இந்தக் கடைசி நாட்களில் சரியானதிற்கு மிகவும் நெருக்கமாயிருக்கும் என்றும், அது கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் என்றே தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருக்கிறது. 57 இப்பொழுது பையன்கள், அவர்கள் தங்களுடையப் பீடங்களண்டை வந்தபோது, ஆராதனை செய்தனர். இப்பொழுது எத்தனை பீடங்களில் இந்தக் காலையில், சபைகளில் உள்ள பீடங்களின்மேல் அழகான மலர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அது சரிதான். நான் அதற்கு எதிராக ஒன்றையுங் கூறவில்லை. ஆனால் பீடத்தின் மேல் சில மலர்களை வைப்பது அல்லது—அல்லது ஓர் அழகான சபை அல்லது அருமையான அலங்கரிப்பு அல்லது அதைப்போன்ற ஏதோ ஒரு காரியமானது ஆராதனையின் முடிவைப் பற்றியதாய் இருப்பது போன்று அது தென்படுகிறது. அது அதனுடைய முடிவாகத் தென்படுகிறது. 58 அது ஏறக்குறைய அந்தவிதமாகவே காயீனோடிருந்தது, ஏனென்றால் அவன் நிலத்தின் கனிகளைக் கொண்டுவந்து, தேவனுக்குத் தன்னுடைய ஆராதனையைச் செய்தான். அது புறக்கணிக்கப்பட்டது. ஏனென்றால் அவன் சரியாக வரவில்லை, தேவன் அவன் வரும்படி நியமித்திருந்த பிழையற்ற வழியில் அவன் வரவில்லை. ஆனாலும் அவன் தன்னுடையக் காணிக்கையைச் செலுத்தினான், தன்னுடைய சகோதரனைப் போலவே மதசம்மந்தமான ஒவ்வொரு காரியத்தையும் செய்தான். ஆனாலும் அவன் புறக்கணிக்கப்பட்டான். அவன் ஆவிக்குரியபிரகாரமான பட்சத்தில் புறக்கணிக்கப்பட்ட காரணத்தால், அப்பொழுது அது அவனுக்குள்ளிருந்து ஒரு பொறாமை எழும்புதவற்குக் காரணமாயிற்று, ஏனென்றால் அவன் பேராசைப் பிடித்தவனாயிருந்தான். 59 அதுதான் மனிதனுக்குள் இருக்கிறது, அவனால் தான் என்னவாயிருந்து கொண்டிருக்கிறான் என்பதற்கு உதவ முடிகிறதில்லை. ஏனென்றால் அவன் அந்த நிலைமையில் பிறந்திருக்கிறான். மனிதன் பரலோகத்தில் ஒரு பாவியாக ஒரு பாவியின் மூலம் சுட்டிக்காட்டப்படுகிறான். கொஞ்சங்காலத்திற்கு முன்னர் நான் அதன்பேரில் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது யாரோ ஒருவர் “அப்படியானால் அது நீதியல்லவே. நான் ஒரு மனிதனுடைய கீழ்ப்படியாமையினாலே சுட்டிக்காட்டப்பட வேண்டியவனாயிருந்தால், அப்பொழுது எனக்கு ஒரு சந்தர்ப்பமும் கிடைக்கவில்லையே” என்றார். அப்பொழுது நான், “அது உண்மைதான், ஏனென்றால் நீங்கள் ஒரு பாவியாக பிறந்திருக்கிறீர்களே. ஆனால் நீங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றீர்கள். நீங்கள் பிரதிநிதித்துவத்தின் மூலம் ஆக்கினைத் தீர்ப்புக்கேதுவாக ஆக்கினைக்குட்படுத்தப்படுகின்றீர்கள்” என்றேன். 60 நல்லது, அப்படியானால் அது மிகவும் கொடூரமாய் காணப்படுகிறதே. ஆனால் அதை மற்றொரு பக்கத்தில் திருப்பிப் பார்த்தால், அப்பொழுது நாம்—நாம் பிரதிநிதித்துவத்தின் மூலம் நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறோம். எங்கே ஒருவர் நம்மை மரணத்திற்கு சுட்டிக்காட்டினாரோ, அங்கே மற்றொருவர் நித்திய ஜீவனுக்கு நம்மைச் சுட்டிக் காட்டினார். ஆகையால் அது நம்மைத் திரும்பவும் மீண்டுமாக சிங்காசனத்திற்கு முன்பாக முன்னிலைப்படுத்துகிறது. ஒவ்வொரு மானிடனும் நம்முடைய தெரிந்து கொள்ளுதலைச் செய்ய அதே இடத்திற்கு மீண்டும் திரும்பி வருகிறோம். 61 ஆனால் அந்தப் பொறாமையே எப்பொழுதும் இருந்து வருகிறது, சரியானது மற்றும் தவறானது, அதாவது தவறானது சரியானதை வென்று வீழ்த்த முயற்சிக்கிறது. அது ஏதேனில் துவங்கினது, அது காலங்களினூடாக வந்துள்ளது, அது தேசிய விவகாரங்களில் நுழைந்து கொள்ளுமளவிற்கு வந்துவிட்டது. அது சபையினுடைய விவகாரங்களுக்குள்ளாக வந்துள்ளது. அது இல்லற வாழ்க்கைக்குள்ளாக வந்துள்ளது. பொறாமை ஆளுகை செய்ய அல்லது அழிக்க முயற்சிக்கிறது. அது அடக்கியாண்டு, வெளியேத் தள்ள முயற்சிக்கிறது. நாம் அந்தக் காரியம் எங்கும் கிரியை செய்வதைக் காண்கிறோம். அது எப்பொழுதுமே அதேக் காரியமாய் இருந்து வருகிறது. அது உதறித்தள்ள அல்லது எல்லையை மீற முயற்சிக்கிறது. 62 பழைய ஏற்பாட்டினூடாக, முன்னர் தேவன் தீர்க்கதரிசிகளின் நாட்களில், நான் இங்கே அவர்கள் அநேகரைக் குறித்து எழுதி வைத்துள்ளேன், ஆனால் அதைக் குறித்துப் பேச எனக்கு நேரம் இருக்காது. ஆனால் தேவன் பண்டையத் தீர்க்கதரிசிகளின் நாட்களில், அவர் ஏதேன் தோட்டத்தில் செய்ததுபோலவே, ஒவ்வொரு காரியத்தின் மத்தியிலும், உண்மையான தேவனுடைய சத்தம், உண்மையான தேவனுடைய ஆராதனை தீர்த்தொதுக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டு, ஏதேன் தோட்டத்தில் கொல்லப்பட்டபோது, பேராசையினாலும், பொறாமையினாலும் தேவனுடைய சத்தமானது அமைதிப்படுத்தப்பட்டது. அது சபையில் அது முதற்கொண்டே அந்தவிதமாகவே இருந்து வருகிறது. அது உண்மையான தேவனுடைய சத்தத்தை அமைதிப்படுத்த முயற்சிக்கிறது. 63 ஆனால் நீங்கள் கவனிப்பீர்களேயானால், ஆபேலினுடைய சத்தமானது மரணத்தில் அமைதியாக்கப்பட்டவுடனே, தேவன் அவனுடைய ஸ்தானத்தில் சேத்தை எழுப்பினார். அது உயிர்த்தெழுதல் வரும் வரையிலான ஒரு மாற்றீடு செய்கையாய் அல்லது ஒரு முன்னதான ஈஸ்டராய், ஒரு முன்னதான உயிர்த்தெழுதலாயிருந்ததேயன்றி வேறொன்றாயும் இருந்ததில்லை. சற்று நேரம் அதற்குச் சென்று, பழைய ஏற்பாட்டினூடாக அது செல்வதைக் கண்டறிவோம். தீர்க்கதரிசிகள், தேவன் தம்முடைய சத்தத்தை தீர்க்கதரிசிகளைக்கொண்டு உயிரோடு காத்துக் கொண்டார். அவர்கள் தேவனுடைய வார்த்தையை உரைத்தனர்; அவர்களை இவர்கள் கல்லெறிந்தனர். அவர்கள் ஒருவரைக் கல்லெறிந்து கொன்றவுடனே, தேவன் மற்றொருவரை எழுப்புவார். அவர்கள் அந்த ஒருவரை கல்லெறிந்து சென்றவுடனே, தேவன் மற்றொருவரை எழுப்புவார். அவர் எப்பொழுதுமே தம்முடைய சாட்சியை உயிரோடு காத்துக்கொண்டு வருகிறார். ஏதேன் முதற்கொண்டே அவர் ஜனங்களுக்கு முன்பாக தம்முடைய சத்தத்தை உயிரோடு காத்துக்கொண்டு வருகிறார். 64 இப்பொழுது காயீன் தான் என்ன செய்திருந்தான் என்பதை அறிந்து கொண்டவுடனே, அவன் மீது ஓர் அடையாளம் போடப்பட்டதினால், தேவனிடத்திலிருந்து முத்திரையிடப்பட்டு, அவன் தேவனுடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டுப் போனான் என்ப்தை நாம் கண்டறிகிறோம். வேதமோ, “அவன் ஏதேன் தோட்டத்திலிருந்து, ஏதேனின் கிழக்கில், தோட்டத்தின் வாசல்களிலிருந்து புறப்பட்டுச் சென்றான்” என்று கூறியுள்ளது. அவன் முத்திரையிடப்பட்டு, அடையாளமிடப்பட்டு, புறப்பட்டுச் சென்றான், தேவனுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டுச் சென்றான். என்னே ஒரு காரியம்! 65 என்ன ஒரு மிகப்பெரிய காரியம், அந்தக் காயீன், பொறாமையின் காரணமாக, அவனுடைய சகோதரன் வந்த அதே பொருத்தமான சரியான வழியின் மூலம் தேவனண்டை ஒப்புரவாக வேண்டும் என்ற மனதில்லாதவனாயிருந்தான். தேவன் காயீனிடத்தில், “நீ ஆபேலைப் போன்றே ஆராதித்தால், நீ நன்றாகச் செய்வாய்” என்றார். 66 ஆனால் காயீன், “இதைத்தான் நான் சேர்த்து வைத்திருக்கிறேன். நான் வைத்துள்ளதோ, இதுதான். இதுதான். இதைத்தான் நான் அளிக்கிறேன். நீர் இதை ஏற்றுக் கொள்ளும் இல்லையென்றால் இதை விட்டுவிடும். இரண்டில் ஒன்றை நீர் செய்ய வேண்டும். அதற்கு உம்மையே ஏற்புடையதாக அமைத்துக் கொள்ளும்” என்றவாறேக் கூறினான். 67 இப்பொழுது சபை வாழ்க்கையிலும், மற்ற வாழ்க்கையிலும் ஜனங்களுடைய மனப்பான்மை எல்லா நேரத்திலுமே அந்தவிதமாகவே இருக்கிறது. “அப்படியானால்…” அவர்கள், “நான்…சபைக்குச் செல்கிறேன், நான்—நான்—நான் சபைக்கு உதவி செய்கிறேன், நான்—நான் இதைச் செய்கிறேன். தேவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையென்றாலும், என்னால் செய்ய முடிந்த மிகச் சிறந்தது அதுவே” என்று கூறுகிறார்கள். புரிகின்றதா? ஆனால் தேவன் கேட்கிறது இன்னமும் அதுவாயிருக்கவில்லையே. தேவனோ அதைக் கேட்கிறதில்லை. 68 தேவன் ஒரு—ஒரு அருளப்பட்ட வழியையேக் கேட்கிறார். அவர் ஒரு வழியை அருளுயிருக்கிறார். அவர் அருளியிருக்கிறதையே ஏற்றுக் கொள்ளும்படி அவர் உங்களை வேண்டுகிறார். பாருங்கள். என்ன செய்ய வேண்டும் என்றும், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்றும் அவருக்கு சொல்லும்படியான நம்முடைய உதவி அவருக்குத் தேவைப்படுகிறதில்லை. நாம் செய்ய வேண்டிய காரியங்களையும், நாம் அவைகளை எப்படி செய்ய வேண்டும் என்றும், நாம் அதைச் செய்வதற்கான வழியையும் அவர் ஒழுங்கு செய்திருக்கிறார். அதில் நம்முடைய கருத்துக்கள் அவருக்கு தேவைப்படுகிறதேயில்லை. எனவே நாம் அந்த வழியில் வரவேண்டியதில்லை. ஆனால் மனிதனோ எல்லாக் காலங்களினூடாகவும் அதைச் செய்ய தலைகீழான நிலையில் இருப்பதையே நாம் கண்டறிகிறோம். ஆனால் தேவனோ தம்முடைய சத்தத்தை அவருடைய தீர்க்கதரிசிகளைக் கொண்டு உயிரோடே காத்துக் கொண்டார், அவர் காலத்தினூடாக அதைச் செய்து வந்துள்ளார். நாம் இதை இன்றைக்கும் கண்டறிகிறோம். 69 நாம் அதை அரசியலில் கண்டறிகிறோம். நான் அரசியலைக் குறித்த சிலக் காரியங்களை இங்கே எழுதி வைத்திருக்கிறேன். அதாவது இந்த நாளிலும் கூட நாம் எங்கே இருக்கிறோம் என்றும், ஜனங்கள் அரசியலுக்காகத் தங்களுடையப் பிறப்புரிமைகளை எப்படி விற்றிருக்கிறார்கள் என்பதையும் நாம் கண்டறிகிறோம். நான் ஒரு வாரத்திற்கு முன்பு, ஞாயிற்றுக் கிழமையன்று யேசபேலும், ஆகாபும் என்பதன் பேரில் ஒஹையோவில் உள்ள மிடில் டவுனில் பேசினதைக் குறித்த அந்த ஒலி நாடாவை உங்களில் எவரேனும் பெற்றுக் கொள்ளாதிருந்தால், நீங்கள் அதை ஒரு முறை கேட்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எப்படியாய் அந்த தேசமானது, பேராசையின் காரணமாகவும், ஒரு சில கூடுதல் டாலர்கள் பணத்திற்காகவும், ஜனங்கள் மத்தியில் காணப்படும் அதிகமான புகழுக்காகவும், அவர்கள் கிறிஸ்துவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யூதாஸ் முப்பது வெள்ளிக் காசுகளுக்காக விற்றதுபோல முற்றிலுமாக விற்றுப்போட்டுவிட்டனர். ஓ, இன்றைக்கு இந்தத் தேசத்திற்கும், இந்த ஜனங்களுக்குமிடையேக் காணப்படுகிற அந்த நிலைமையினை எண்ணிப்பார்ப்பதற்கே அது ஒரு பேரச்சந்தரத்தக்க காரியமாய் இருக்கிறதே! அநேக ஆண்டுகளுக்கு முன்னர் அதை எண்ணிப் பார்க்கும்போது, அவர்கள் அதைப் போன்ற ஒரு காரியத்தை ஒருபோதும் செய்திருந்திருக்க மாட்டார்கள். ஆணால் இன்றைக்கோ அவர்கள் அவ்வளவு பேராசை கொண்டவர்களாயும், அதிக பணம் சம்பாதிக்க முயற்சித்துக் கொண்டு, கடுமையற்ற ஓய்வான நேரங்களைப் பெறவுமே முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது, அது கிறிஸ்தவ பண்பிற்கு மாறான போக்காயிருக்கிறது. 70 கிறிஸ்தவன் எளிமையான சுலபமானக் காரியங்களைக் கேட்கிறதில்லை. நாம்…இருப்பதில்லை…இன்றைக்கு கிறிஸ்தவ ஜனங்களுக்கிடையே அதிகப்படியான வாக்குத்தத்தங்கள் உண்டாக்கப்பட்டுள்ளன, அநேக ஊழியக்காரர்கள் ஜனங்களிடத்தில், “நீங்கள் கிறிஸ்துவண்டை வந்தால், உங்களுடைய எல்லாத் தொல்லைகளும் தீர்த்து வைக்கப்பட்டுவிடும்” என்ற ஒரு தவறானக் காரியத்தை வாக்களிக்கின்றனர். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் கிறிஸ்துவண்டை வரும்போது, அப்பொழுதே அவைகள் துவங்குகின்றன். அப்பொழுதுதான் நீங்கள் உங்கள் சீருடையை அணிந்து, ஒரு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, யுத்தக்களத்திற்குள் நுழைகின்றீர்கள். இந்தக் கிறிஸ்தவ, பாதையானது ஒரு பூ மெத்தை மலர்படுக்கை அல்ல. அது மரணத்தினால் உங்களுடைய ஆவியானது விடுதலையடையுமட்டும் நீங்கள் துவங்கின நேரம் முதற்கொண்டே ஒரு யுத்தமாயிருக்கிறது. நீங்கள் வன போஜனத்தில் இல்லை, நீங்கள் யுத்தகளங்களில் இருக்கிறீர்கள். ஆகையால் காரியங்கள் நமக்கு வாக்களிக்கப்பட்டிருக்கின்றன. 71 எனக்கு சில சமயங்களில் நேரிடுகிறது, நான் இதைக் கூற வெறுக்கிறேன். ஆனாலும் நான் அதை என்னுடைய இருதயத்திலிருந்து பொருட்படுத்திக் கூறுகிறேன். அதாவது நான் அவ்வளவாய் மிக நுட்பமாய் ஏமாற்றி மோசம்போக்கும் மார்க்கத்தையும் குறித்துக் கேள்விப்படும்போது, நான் குழப்பமடைந்தவனானேன். இன்றைக்கு ஒவ்வொரு காரியமும் ஏதோ ஒரு நுட்பமான ஏமாற்று மோசடியாகிவிட்டது. அது, அது மிக நுட்பமான முறையில் ஏமாற்றி மோசம்போக்கும் மனிதனாயிருக்கிறது. தொலைக்காட்சியானது வெற்று மனிதர்களினூடாகவும், ஒரு கூட்ட அர்த்தமற்ற, மிக நுட்பமான ஏமாற்று மோசடியான காரியங்களினூடாகவும் அதற்கு வழியைத் திறந்துள்ளது. ஓ! அவர்கள் இன்றைக்குத் தெய்வீக சுகமளித்தலுக்குள்ளாகவுங்கூட, மிக நுட்பமான ஏமாற்று மோசடியை சுகமளித்தலுக்குள்ளாகவும் கொண்டு வருகிறார்கள். இப்பொழுது தேவனோ அதைப் போன்ற அப்படிப்பட்டக் காரியங்களைக் கொண்டிருப்பதில்லை. அவர்கள் அநேக சமயங்களில் ஜனங்களை மேடைக்கு சந்தேகத்திற்கு இடமின்றி, வரம்பெற்ற மனிதனண்டைக்கு கொண்டுவருகிறார்கள். ஆனால் சுவிசேஷத்தின் தவறான புரிந்துகொள்ளுதலோடு, ஜனங்கள் மேல் எண்ணெயை வைத்து, ஜெபித்து, ஏதோக்கரியம் சம்பவித்து, அவர்கள் சுகமடையும் வரையில் அங்கேயே நின்று அவர்களைக் குலுக்குகிறார்கள். அந்த நபர் ஒருகால் பாவத்தில் ஜீவிக்கலாம். அவர்கள் திரும்பவும் வெளியேச் செல்ல, அது அவர்கள் மேல் மீண்டும் திரும்பி வருவதைக் கண்டறியலாம். ஒருக்கால் அவர்கள் அந்த நேரத்தில் உணர்ச்சிவசப்படுதலின் கீழ் இருந்திருக்கலாம். அவர்களை ஒன்றுகூட்டின தேவனுடைய விசுவாசம் அவர்களைக் குணமாக்கியிருக்கலாம். ஆனால் அவர்கள் அவிசுவாசிகளின் மத்தியில் செல்லும்போது, அது மீண்டும் திரும்பி வருகிறது. அப்பொழுது அது மீண்டும் அதைச் செய்யும். இன்றைக்கு நமக்கு தேவையாயிருப்பது என்னவென்றால், தெய்வீக சுகமளித்தலும், கிறிஸ்துவுக்கான தெளிவானத் தீர்மானங்களுமேயாகும். அது உண்மை. 72 லூத்தரன் சபை மற்றும் பெந்தேகோஸ்துகள் போன்றவர்களின் ஏற்பாட்டு ஆதரவோடு ஜெர்மனியில் நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு சுகமளிக்கும் ஆராதனையில், அங்கேயே தங்கியிருந்து வந்த ஒரு சகோதரனிடத்திலிருந்து, ஜெர்மனியில் உள்ள லூத்தரன் சங்க அமைப்பிலிருந்து எனக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தை அண்மையில் நான் வாசித்துக் கொண்டிருந்தேன். இந்தக் கடிதத்தின் பிரதியில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது. “அதாவது அவர், ‘நீர் அந்தத் தெய்வீக சுகமளித்தலைப் பிரசங்கிக்கிறீர். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், நீர் உம்முடைய கரங்களை அவர்கள் மேல் வைக்க, அவர்கள் ஏதோ ஒன்றை உணர்ந்து சுகமடைகின்றனர் என்பதாயுள்ளது’ என்றார். மேலும், அவர், நான் ‘நிச்சயமாகவே உம்மோடு வித்தியாசப்படுகிறேன்’ என்று கூறி, தொடர்ந்து அவர், ‘அப்படியானால் தெபொராள் ஸ்ட்டாஸ்கிளெவ் என்பவள் அங்கே மரித்தபோது, அந்தச் சிறுமியைக் குறித்து என்ன? ஒரு பரிபூரணமான, ஆரோக்கியமான குழந்தையாய் ஒரு நாள் இருந்தவள், அடுத்த ஒரு சில மணி நேரங்களில் அவள் மரித்தவளாய் படுத்துக்கொண்டிருந்தாளே. அப்பொழுது நீங்கள் யாவரும் அங்கே சென்றீர்கள். நீங்கள் ஜெபித்தீர்கள். நீங்கள் அவளை அசைத்தீர்கள், நீங்கள் அவளை அபிஷேகித்து மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் சுகமளித்தலுக்காகச் செய்தீர்கள். ஆயினும் அங்கே ஜீவனில்லாதிருந்தது. அந்தக் குழந்தை அங்கேயே கிடத்தப்பட்டிருந்ததே’ என்று கூறியிருந்தார். அதன் பின்னர், ‘அவர்கள் சகோதரன் பிரான்ஹாமுக்கு தந்தி அனுப்பினர்.’ ஆனால் அவரோ தேனிடத்திலிருந்து தெளிவான நல்ல தீர்மானத்தைப் பெற்றுக்கொள்ளும் வரையில் அவர் ஒரு காரியத்தையுங் கூறவேயில்லை. அதன்பின்னரே கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் கூறும்படியான வார்த்தையோடு வந்தார்’” என்று கூறி எழுதியிருந்தார். 73 இப்பொழுது அது தான் நமக்குத் தேவை, தேவனிடத்திலிருந்து ஒரு தெளிவான தீர்மானத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த விதமாகத்தான் நாம் வந்தாக வேண்டும். அந்தவிதமாகத்தான் நாம் “இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்” ஞானஸ்நானம்பண்ணப்படுகிறோம். அது தேவனுடைய வார்த்தையிலிருந்து வந்த ஒரு தெளிவான தீர்மானமாயிருக்கிறது. அந்தக் காரணத்தினால்தான் நாம் செய்கிற காரியங்களோடு நாம் தரித்திருக்கிறோம். ஏனென்றால் அவைகள் தேவனுடைய ஒழுங்குமுறைகளாய், தேவனுடைய சுவிசேஷமாய் இருக்கிறது. அது எழுதப்பட்ட விதமாகவே நாம் அதனோடு அப்படியே தரித்திருக்க வேண்டும். நீங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டாலும், வெறுக்கப்பட்டாலும், என்ன சம்பவித்தாலும் பொருட்படுத்த வேண்டியதில்லை, அது இதனோடு செய்யும்படியான எந்த ஒரு காரியத்தையும் உடையதாயிருக்கவில்லை. தேவன் தெளிவானத் தீர்மானங்களையே விரும்புகிறார். நீங்கள் துவக்கத்திலேயே தவறாயிருக்கிறீர்கள் என்று அறிந்து கொள்ளும்போது, உங்களால் எப்படி அதைச் செய்ய முடியும்? அப்பொழுது உங்களால் தேவனிடத்திலிருந்துத் தெளிவான ஒரு தீர்மானத்தைப் பெற்றுக்கொள்ள முடியாது. தேவனை சேவிப்பதற்கு உங்களுடைய இருதயம் அவரோடு சரியாயிருக்கவில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்கும்போது, தெய்வீக சுகமளித்தலுக்காக எப்படி நீங்கள் வந்து வேண்டிக்கொள்ள முடியும்? பாருங்கள், நீங்கள் திரும்பவும் வெளியேச் செல்ல விரும்பி, உலகத்தில் உள்ளக் காரியங்களையே செய்ய விரும்புகிறீர்கள். பாருங்கள். அந்தவிதமாயிருக்கும்போது நீங்கள் ஒருபோதும் சுகமடையவேமாட்டீர்கள். நீங்கள் தேவனுக்கு முன்பாக சுத்தமாக வந்து, உங்கள் ஜீவியத்தையும், இருதயத்தையும் தேவனண்டை பிரதிஷ்டை செய்ய வேண்டும். அப்பொழுதே தேவன் குணமாக்குவார். அப்பொழுது உங்களுடைய விசுவாசம் நங்கூரமிடப்பட்டிருக்கிறபடியால், அது நீடித்து நிலைத்திருக்கும். 74 இப்பொழுது அது, அதாவது சபை என்றிருந்தாலும், அரசியல் என்றிருந்தாலும், தேசிய விவகாரங்கள் என்றிருந்தாலும் அந்தப் பேராசை உள்ளே இருப்பதை நாம் கண்டறிகிறோம். ஒரு தேசமானது இப்பொழுது இங்கே ஆப்பிரிக்காவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நோக்கிப் பார்க்கிறது. பாருங்கள், பேராசையின் காரணமாகவே, அங்கே இப்பொழுது ஆப்பிரிக்காவில் என்ன சம்பவித்துள்ளது என்று நோக்குகிறது; அங்கு மாத்திரமின்றி, உலகம் முழுவதிலுமே, எல்லாவிடத்திலுமே அவ்வாறே உள்ளது, ஏனென்றால் மனிதன் யாரோ ஒருவராய் இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். அவர்கள், பூமியின் மேல் சரியாக அவர்கள் பெற்றுள்ள யாவுமே இதுவாகத்தான் உள்ளது. அதாவது அவர்கள் அந்தவிதமாகவே ஜீவிக்கிறார்கள். 75 நான் பெற்றிருந்த யாவுமே இதுவாகத்தான் இருப்பின், அப்பொழுது நான் ஒரு பரிதபிக்கத்தக்க நபராய் இருப்பேன். தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்தையே நான் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன். அங்கேதான் நாம் நம்முடைய பொக்கிஷங்களை, அந்தத் தீர்மானத்திற்காகவே வைத்திருக்கிறோம். 76 காயீனின் புத்திரர்கள் இல்லை சரியாகக் கூறினால் சாத்தானின் புத்திரர்கள், அவர்கள் சாத்தானின் புத்திரராயிருந்தனர். ஏனென்றால் காயீன் சாத்தானின் புத்திரனாக இருந்தான். ஆகையால் இன்றைக்கும் காயீனின் புத்திரர்கள் இருக்கிறார்கள். நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நீர் அதைக் குறித்து நிச்சயமுடையவராயிருக்கிறீரா?” என்று கேட்கலாம். ஆம். நான் நிச்சயமுடையவனாயிருக்கிறேன். நான் அதைக் குறித்து மாறாத நிச்சயமுடையவனாயிருக்கிறேன். ஏனென்றால்…கவனியுங்கள். 77 இயேசு, அவர் பூமியின் மேலிருந்தபோது, அவர் சரியாக மதத் தலைவர்களிடத்தில், அவர்களிடத்தில், “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசினால் உண்டானவர்கள்” என்றார். அதே சமயத்தில் அவர்கள் பக்தியுள்ளவர்களாயிருந்தனர். அவர்கள் மத சம்பந்தமானவர்களாய் இருந்தனர். அவர்கள் மேதைகளாயிருந்தனர், அவர்கள் பெரிய கட்டிடங்களை உடையவர்களாயிருந்தனர். அவர்கள் பெரிய சபைகளை உடையவர்களாயிருந்தனர். அவர்கள் மகத்தான பாண்டித்தியம் பெற்றவர்களையும், ஆசாரியத்துவத்தையும், கட்டளை நியமங்கள் போன்றவைகளைப் பெற்றவர்களையும் உடையவர்களாயிருந்தனர். ஆனாலும் அவர்கள் கிறிஸ்து யாராயிருந்தார் என்று அடையாளங்கண்டு கொள்ளுவதற்குத் தவறிப்போயிருந்தனர். அவர்கள் தங்களுடைய நாளைத் தெரிந்துகொள்ளத் தவறியிருந்தனர். 78 அவர்கள் அப்பொழுது செய்தது போன்றே, இப்பொழுதும் இவர்களும் அவ்வண்ணமேச் செய்கிறார்கள், சரியாக அதேக் காரியத்தைச் செய்கிறார்கள். அவர்கள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற நாளையும், தேவன் செய்து கொண்டிருக்கிறக் காரியங்களையும் உணர்ந்துகொள்ளத் தவறுகிறார்கள். இப்பொழுது நாம் காண்கிறோம், ஆகையால்…அந்த பக்தியான மதத்தலைவர்களால்… 79 இப்பொழுது இதோ அது உள்ளதே! அந்த நாளில் பக்தி வாய்ந்த மதத் தலைவர்கள் பிசாசின் புத்திரர்கள் என்று அழைக்கப்பட்டிருப்பார்களாயின், அந்தப் பிசாசே ஆதியில் அப்பொழுது காயீனை அவனுடைய சகோதரனைத் துன்பப்படுத்தி கொல்லுவதற்கு ஏவினவனாயிருந்தான் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். இயேசு கிறிஸ்துவைத் துன்பப்படுத்தி, அவரைக் கொலை செய்த அதே மதத்தலைவர்களால் அதேக் காரியம் சம்பவித்திருந்தது. அவர்கள் அங்கே ஏதேன் தோட்டத்தில் பலவந்தம்பண்ணப்பட்டது போலவே, அதேவிதமான ஒரு தீர்மானத்திற்கு இவர்களும் பலவந்தம் பண்ணப்பட்டனர். அவர்கள், “போனால் போகிறது, இதைக் குறித்து என்ன?” என்ற ஒரு தீர்மானத்தை எடுக்க பலவந்தம் பண்ணப்பட்டனர். காயீனின் புத்திரர்கள், சாத்தானின் புத்திரர்கள். நீங்களோ, “அது தேசங்களண்டைக்குச் செல்லுகிறதா?” என்று கேட்கலாம். 80 சாத்தான் இயேசுவானவரை சோதிப்பதற்காக மலையின் உச்சிக்குக் கொண்டு சென்றபோது, அவன் உலகத்தின் இராஜ்ஜியங்கள் எல்லாவற்றையும் அவருக்குக் காண்பித்தான். இப்பொழுது, அது இருந்த அனைத்துமாயும், இருக்கப்போகும் அனைத்துமாயும், உலகத்தின் எல்லா இராஜ்ஜியங்களுமாயிருந்தது. அப்பொழுது அவன், “இவைகள் என்னுடையவைகளாயிருக்கின்றன, நான் என்னவெல்லாம் விரும்புகிறேனோ அதை நான் அவர்களோடு செய்கிறேன். என்னால் அவர்களைச் சண்டையிடச் செய்ய முடியும், என்னால் அவர்களை இதைச் செய்ய அல்லது எதையும் செய்ய வைக்க முடியும்” என்றான். அவன் உலகத்தின் இராஜ்ஜியங்களை உரிமைக்கோரினான். ஆகையால்தான் அரசியலுக்குள்ளாக எவ்வளவு பேராசையும், சுயநலமும் உண்டாகிறது என்பதை நம்மால் காண முடிகிறது. புரிகிறதா? அதன்பின்னர் அது சபையில் எங்கே இருக்கிறது என்றும், சபைத் தலைவர்களிடத்தில் எங்கே இருக்கிறது என்றும், பேராசையும், சுயநலமும் சபைக்குள்ளாக எங்கிருந்து வருகிறது என்பதையும் நம்மால் காண முடியும். 81 இப்பொழுது அது ஏதேன் தோட்டத்தில் துவங்கின அதே பழைய பேராசை என்பதைக் கவனியுங்கள். அது ஒருவர் மேல் ஒரு மோசமான முத்திரையையும், மற்றவர்மேல் சரியான முத்திரையையும் போட்டது. அது நம்முடைய கர்த்தராகிய இயேசுவினின் காலங்களுக்குள்ளாக நேராக வருகிறது. அவர் இங்கே பூமியின்மேல் இருந்தபோது, “நீதி” என்றழைக்கப்பட்டிருந்த, நீதிமன்றங்களினால் அவருக்கு ஒரு வழக்கு விசாரனை அளிக்கப்பட்டது. அது என்னே ஓர் அநீதியான ஏளனமாய் இருந்தது! அவர்களால் அவருக்கு எதிராக ஒரு காரியத்தையும் கண்டறிய முடியாமலிருந்தது. அது அரசியல் பட்சமாய் இருந்தது. அவர்களால் ஒன்றையுமே அவருக்கு எதிராகக் கண்டறிய முடியாதிருந்தது. பிலாத்துவும்கூட, அவ்வளவாய், “நான் அவரில் யாதொரு குற்றத்தையும் காணேன்” என்று கூறினான். 82 அதன்பின்னர் சபை வருகிறது. இப்பொழுது அவர்கள் ஒரு தீர்மானத்தைச் செய்ய பலவந்தம்பண்ணப்படுகின்றனர். அரசியல் உலகம் அவரை விடுதலைபண்ணியிருந்த பிறகு, ஒத்துழைக்கும்படியான அதே ஆவியானது சபையில் இருந்தது. அது அரசியலில் இருந்ததாகும். சாத்தானோ தன்னுடைய யுத்தத்தில் இங்கே தோற்றுவிட்டால், அதைக் காண்பிக்க, அவன் இன்னமும் ஏதோ ஒரு காரியத்தை பயன்படுத்தத் தேவைக்கு ஆயத்தமாக வைத்திருந்தான். எனவே அவனால் சரியாக சபையினிடத்தில் திரும்பவும் வந்தடைய முடிந்தது. அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தனர், ஏனென்றால் அவர்கள் ஒரு தீர்மானம் செய்ய பலவந்தம் பண்ணப்பட்டிருந்தனர். ஆகையால் அவர்கள், “இயேசுவுக்குப் பதிலாக பரபாஸையே எங்களுக்கு விடுதலையாக்கும்” என்றார்கள். அவர்கள் அதை எப்படிச் செய்தனர் என்பது புரிகிறதா? அது இன்றைக்கும் நம்முடைய கண்களுக்கு முன்பாக சரியாக அதேக் காரியமாய் உள்ளது, அதேக்காரியமாய் இருந்தும் வருகிறது, எப்பொழுதும் அதேக் காரியமாய் இருக்கும், ஒரு தீர்மானம் செய்ய பலவந்தம்பண்னப்பட்டனரே! 83 இப்பொழுது, அவர்கள் அந்தத் தீர்மானத்தைப் பலவந்தப் படுத்தினபோது, பிலாத்து அவர்களை விடுவித்தபோது…சபைக்கு இயேசுவை விடுவித்தபோது, சபையானது அவரைச் சிலுவையில் அறையும்படியாய் ஒப்புக்கொடுத்திருந்தது என்பதை அவன் அறிந்திருந்தான், அவன் அவரை சபையினிடத்தில் திரும்பவும் விடுவித்திருந்தால், சபையானது அவரை சிலுவையில் அறையும் என்பதையும் அவன் தன் இருதயத்தில் அறிந்திருந்தான். ஆகையால் பிலாத்துவிற்கு சாக்குபோக்கினால் தண்டனை தவிர்க்கப்படவில்லையே! அவன் தண்ணீரை எடுத்து, தன்னுடைய கரங்களிலிருந்து கிறிஸ்துவின் இரத்தத்தைக் கழுவ முயன்றான். ஆனாலும் அவனால் அதைச் செய்ய முடியவில்லை. 84 அந்த நேரம் முதற்கொண்டே இங்கே ஸ்வீடனில் இல்லை சுவிட்சர்லாந்தில், சரியாகக் கூறினால், அங்கே பிலாத்து பின்னர் தன்னுடைய முடிவின் வருடத்தில் தன்னுடைய சிந்தையை இழந்துபோய், பித்து பிடித்துப்போய், ஒரு தண்ணீர் குழியில் மரிக்கும்படி தன்னை மூழ்கடித்துக் கொண்டான். மக்களால் ஆர்வமாக நம்பப்படும் ஒரு மரபுவழிக் கதை ஒன்று, “பிற்பகல் மூன்று மணிக்கு அந்தக் குளத்தின் அடியிலிருந்து நீலநிறமான தண்ணீர் மேலே வருகிறது” என்று கூறுகிறது. ஜனங்கள் அதை கவனித்துப்பார்க்கும்படி உலகம் முழுவதிலிருமிருந்து அங்கே கூடுகின்றனர். “எந்த மனிதனுடைய கரங்களிலிருந்தும் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை எந்தத் தண்ணீருமே கழுவ முடியாது என்பதை காண்பிக்கும்படியாக மூன்று மணியளவில் அந்த நீலநிறமான, கருநீலநிறமாய்க் காணப்படுகிற தண்ணீரானது எங்கோ அடியிலிருந்து மேலே வந்து, மேலே உள்ள தண்ணீரைக் கலக்கிவிட்டு, பின்னர் மீண்டும் கீழேச் செல்கிறதாம்.” எனவே அவன் குற்றமுள்ளவனாயிருக்கிறானே! 85 கிறிஸ்துவை உங்களுடையக் கரங்களில் கொண்டுள்ள ஒவ்வொரு மனிதனுக்குமே, அங்கிருந்து அதைக் கழுவக் கூடியது ஒன்றுமே கிடையாது. அதை செய்யக்கூடிய ஒரேக் காரியம், அதை ஏற்றுக்கொள்வதும், அதை விசுவாசிப்பதுமேயாகும். 86 சாத்தானின் புத்திரர்கள், காயீனின் புத்திரர்கள், தேவப் புத்திரர்களைத் துன்பப்படுத்தி, அவர்களை மரணத்திற்குட்படுத்தினர். அதைத்தான் அவர்கள் ஆபேலுக்குச் செய்தனர். அதைத்தான் அவர்கள் இயேசுவுக்குச் செய்தனர். அதைத்தான் அவர்கள் தீர்க்கதரிசிகளுக்குச் செய்தனர். அதுதான் மீண்டும் செய்யும்படியாக அவர்களுக்குள்ளாக உள்ளது. அவர்கள் அதைச் செய்யும்படியான பாதை திறக்கப்பட்டவுடனே அவர்கள் அதைச் செய்வார்கள். 87 நினைவிருக்கட்டும், நாம் ஒருவிதமாகச் சுற்றித் தலையிட்டு, சுற்றிலும் ஏமாற்றமடைந்து, ஜனங்களை சுவிசேஷத்தின் பாதையிலிருந்தும், சரித்திரத்தின் பாதையிலிருந்தும் விலகச் செய்துள்ளோம். அதுதான் சம்பவித்துள்ளது. இங்கே நாம் அதை மீண்டும், சரியாக இங்கே நம்முடையத் தேசத்திலேயே சந்தித்துள்ளோம். அதைக் குறித்து நம்மால் செய்ய முடிந்தது ஒன்றுமேயில்லை. ஆனால் நீங்களோ, “அப்படியானால், சகோதரன் பிரான்ஹாமே, அதற்கு எதிராகப் பேசுகிறதைக் குறித்த உம்முடைய காரணம் என்ன?” என்று கேட்கலாம். என்னால் பாவத்தை நிறுத்த முடியாது; ஆனால் என்னால் என்னுடைய சத்தத்தை அதற்கு எதிராக இட முடியும். நான் இப்பொழுது சரியாக அதைத்தான் பாவத்திற்கு எதிராகவும், தவறான காரியத்திற்கு எதிராகவும் செய்துகொண்டிருக்கிறேன். நாம் தவறு செய்திருக்கிறோம். நாம் சரியாக எதை விதைத்திருக்கிறோமோ அதையே அறுக்கப் போகிறோம். 88 மிடில்டவுனிலிருந்தபோது, அவர்களுக்கு ஒரு—ஒரு வழக்கு கேள்வி முறை இருந்தது. அப்பொழுது ஒரு பாதிரியாரையும், ஒரு பாப்டிஸ்டு பிரசங்கியாரையும், ஒரு பிரஸ்பிடேரியன் பிரசங்கியாரையும் அழைத்துக் கொண்டு வந்து ஒன்று சேர்ந்து இந்தப் பள்ளி நிதிநிலையைக் குறித்து கலந்து ஆலோசித்தனர். பிராட்டெஸ்டன்டுகள் கத்தோலிக்கர்களைப் போன்றே அதேவிதமான வரிகள் செலுத்தினர் என்பதைக் கத்தோலிக்கப் பாதிரியார் ஒப்புக்கொண்டு, இரண்டு பக்கத்திற்குமே நிதிகள் வழங்கபட வேண்டும் என்று கூறி, “ஒரு கத்தோலிக்கப் பள்ளியை, ஒரே பள்ளியாக உருவாக்க நாம் இதைச் செய்ய வேண்டியதாயிருக்கிறது” என்றார். ஓ, நிச்சயமாகவே, அந்தப் பிள்ளைகள் சிறுவராயிருக்கும்போது அவர்களை அழைத்து வந்து கத்தோலிக்கத்தை கற்றுத் தருவதற்காகவே. ஓ, ஓ, என்னே ஒரு காரியம்! 89 எப்படியாய் அங்கே ஜனங்கள் உட்கார்ந்து கொண்டு, அரசியலின் நிமித்தமாக இந்தக் காரியத்தைக் கொண்டு வந்திருக்கின்றனர். அது எப்படியென்றே எனக்கு புரியவில்லை. ஆனால் நாம் இங்கே சரியாக இந்த ஈஸ்டர் காலையில் இருக்கிறோம். அதேக் காரியத்தினால், அதேக் காரணத்தால் நாம் இந்த தேசத்திற்கு வந்து அமெரிக்கர்களானோம். அந்த யேசபேல் முறைமைக்கு எதிராக மார்க்க நீதியான சுதந்திரத்திற்காகவே வந்தோம். ஆனால் நாம் மீண்டும் திரும்பி வெள்ளை மாளிகையில் அங்கே மேடையில் அதையே தெரிந்தெடுக்கிறோம். அந்தக் காரியத்திலிருந்தே விடுதலையடைய வேண்டும் என்றே நாம் இங்கு வந்திருக்கிறோமே! ஓ, அது ஒரு—இப்பொழுது நாம் ஒரு மிகப்பெரிய நிலைமைக்குள்ளாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்; ஆவிக்குரிய பிரகாரமாக சபையானது அதை விற்றுப்போட்டதேக் காரணமாகும். 90 அவர்கள் உண்மையுள்ள ஆபேலுக்குச் செய்தது போன்றே, அவர்கள் அவரை மரணத்திற்குட்படுத்தி, அவரைக் கொன்றுபோட்டனர். ஏன் ஆபேல் கொல்லப்பட்டான்? பாவத்திலிருந்து மனிதனை மீட்டும்படியாகத் தெரிந்தெடுக்கப்பட்டத் தேவனுடைய உடன்பாடான வெளிப்பாட்டை அவன் தன்னுடைய இருதயத்தில் உடையவனாயிருந்த காரணத்தாலேயாகும். அந்தக் காரணத்தினால்தான் அவர்கள் இயேசுவையும் மரணத்திற்குட்படுத்தினர், ஏனென்றால் அவருக்குள் பாவத்தைக் குணப்படுத்த தெரிந்தெடுத்த தேவனுக்கான வெளிப்பாடு இருந்தது. அந்தக் காரணத்தினால்தான் இன்றைக்கு அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய உண்மையான சபைக்கு எதிராக இருக்கிறார்கள். ஏனென்றால் அது பாவத்திற்கான நிவாரணத்தைப் பிரசங்கிக்கிறது. அந்தக் காரியங்களே ஜனங்களை வித்தியாசமாக ஜீவிக்கச் செய்கிறது, வித்தியாசமாக செயல்படச் செய்கிறது. 91 இந்நாளில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற சபைக்குள்ளாக, நம்முடைய பெந்தேகோஸ்தே, குழுவினருக்குள்ளாக நாம் இதைச் சரியாக கொண்டுவரும்போது, அவர்கள் நேராகத் திரும்பிச் சென்று, எந்தக் காரியத்தைச் செய்வதிலிருந்து அவர்கள் விடுதலையாக்கப்பட்டிருந்தார்களோ அதேக் காரியத்தைச் செய்கிறார்கள். எங்கோ ஏதோ காரியம் தவறாயிருக்கிறது என்பதைக் காண்பிக்கும்படியாகச் செல்கிறது. ஒரு பாவ நிவாரணமாயிற்றே! அது மிகவும் சுலபமாக வருகிறது, அது ஓர் உண்மையான பெந்தேகோஸ்தே மார்க்கம் என்ற மாறுவேடத்தின் கீழ், அதைப் போன்றே அப்படியே நழுவி உள்ளேச் சென்றுவிட்டது. ஆனால் அது அந்த ஒருவிதமான பொருளை உறபத்தி செய்யவில்லையென்றால், அது அந்தவிதமான பொருட்களை உற்பத்தி செய்யவில்லையென்றால், அதனோடு எங்கோ ஏதோ காரியம் தவறாயிருக்கிறது. 92 எப்படி ஒரு பூசணிக்காய் கர்ப்பப்பூசணிக்காய்களை உற்பத்தி செய்ய முடியும்? அதுவோ அதனைச் செய்ய முடியாதே. எப்படி ஒரு திராட்சைக் கொடியானது பீச்மரக் கனிகளை உற்பத்தி செய்ய முடியுமா? அது அதனைச் செய்கிறதில்லையே, அது பீச் மரப்பழங்களை உற்பத்தி செய்து கொண்டிருந்தால், அப்பொழுது ஒரு திராட்சைக் கொடியில் பீச் மரத்தின் ஜீவன் உள்ளது என்பதாகும். 93 அந்தவிதமாகத்தான் இன்றைக்கு நாம் அறிந்து கொள்கிறோம். சபையானது, அது ஜீவனுள்ள தேவனுடைய சபையாய் இருக்கிறது என்று எவ்வளவுதான் அறிவித்துக் கொண்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை, அது பண்டைய—கால இரட்சிப்பைக் கொண்டு தேவனை உற்பத்தி செய்யவில்லையென்றால், தேவனுடைய ஓர் உண்மையான இரட்சிப்பிற்கு ஜனங்களைத் திரும்பக் கொண்டுவராமலிருந்தால், (அதை ஜனங்களுக்கு மத்தியில் காண்பிக்க, தேவன் அவர்களுக்கு மத்தியில் ஜீவிக்கிறார்) என்பதைக் காண்பிக்காமலிருந்தால், அப்பொழுது அது தவறான காரியமாயிருக்கிறது. கிறிஸ்துவானவர் அது—அது ஜீவனை உற்பத்தி செய்யும் என்றுக் கூறினதை அது உற்பத்தி செய்து கொண்டிருக்கவில்லை. 94 கிறிஸ்து கல்வாரியிலே மரித்தார். எப்படியாய் அவர் அந்தச் சிலுவையண்டைக்குச் சென்றார். நான் அண்மையில் இங்கே ஒரு சிறு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். அது ஏதோ ஒரு விதமான ஆராய்ச்சியின் பேரிலானதாயிருந்தது. இந்த ஆராய்ச்சியில் நான் மிகவும் திடுக்கிடச் செய்கிற ஏதோ ஒரு காரியத்தைக் கண்டேன். அப்பொழுது நான் அமர்ந்து, நான் அந்தப் புத்தகத்தை கீழே வைத்துவிட்டு, எழுந்து சற்று சுற்றும் முற்றும் நடந்துவிட்டு, மீண்டும் அமர்ந்து அதை வாசித்தேன். அப்பொழுது நான், ஓ, அது அவ்வண்ணமாய் உள்ளதே, அதாவது “இயேசுவானவர் சிலுவையில் அறையப்பட்ட இந்த அதே மலையின்மேல் ஆதாம் மரித்து, அடக்கம்பண்ணப்பட்டான். இயேசுவானவர் மரித்து, அடக்கம்பண்ணப்பட்ட அதே மலையின்மேல் ஆதாம் மரித்தான்: அவன் கொல்கொதாவில் மரித்து, கொல்கொதாவில் அடக்கம் பண்ணப்பட்டான். ஓ அது அவ்வண்ணமாய் உள்ளதோ?” என்று எண்ணிப்பார்த்தேன். அப்பொழுது நான், “அது சரியாயிருந்தாலும் அல்லது தவறாயிருந்தாலும், என்னே பொருத்தமாயுள்ளது” என்றே எண்ணிக் கொண்டேன். 95 அது சரியாயிருந்தது என்றே நாம் கூறுவோமாக. ஆகையால் முந்தின ஆதாம் மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, அதே சமயத்தில் அங்கேயே புழுதியில் இருக்கிறான். ஏனென்றால் அவன் உலகத்தையும், ஜனங்களையும் பாவத்திற்குச் சுட்டிக்காட்டினான். ஆனால் இரண்டாம் ஆதாமோ, பரலோகத்தின் தேவனாயிருந்து கொண்டு, அவர் கொல்கொதாவில் மரித்தபோது, அவரை அங்கே பற்றிப் பிடித்து வைத்துக்கொள்ள போதுமான பூமியானது அங்கில்லாதிருந்தது. எனவே அவர் மூன்றாம் நாளில் உயிரோடெழுந்து, என்றென்றைக்குமாய் உயிரோடிருக்கிறவராயிருக்கிறார். ஆனால் பாவ பிரச்சனையானது தீர்க்கப்பட்டாயிற்றே! 96 தேவன் பாவப் பிரச்சனையை கல்வாரியிலே தீர்த்தார், அங்குதான் கடன் செலுத்தப்பட்டாயிற்று. இந்த ஆதாம், இரண்டாம் ஆதாம் மரித்தபோது, அவர் மானிட வர்க்கத்திற்கான பாவக் கடனைச் செலுத்தினார். உலகமோ அவரை ஒரு கல்லறையில் வைத்து, அந்தக் கல்லறையில் அவரை முத்திரையிட்டது. 97 அவர்கள் இன்றைக்கும் அதையே செய்வார்கள். அவர்கள் இன்றைக்கு அதையேச் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் இதைத் தவறவிட நான் விரும்பவில்லை. உலகமானது கிறிஸ்துவைத் திரும்பவும் கல்லறையில் வைத்து மீண்டும் முத்திரையிடுவதற்கும், (எல்லா நேரத்திலும் இன்னும் மோசமான நிலையினை அடைவதற்குமே) முயற்சித்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் அந்நாட்களில் நடந்து, வியாதியஸ்தரை சுகப்படுத்தவும், பிசாசுகளைத் துரத்துவதற்கும் சீஷர்களுக்கு வல்லமை அளித்தவரை ஒரு சரித்திர பிரகாரமான தேவனாக்குவதற்கே முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். 98 ஆனால் அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் காயீன் செய்ததுபோல, அவன் ஆபேலை வெளியேற்றி ஒழித்துவிட எண்ணினது போல, அவரையும் வெளியேற்றி ஒழித்துவிட அவர்கள் எண்ணினவுடனே அவர்கள் அவரை ஒரு கல்லறையில் முத்திரையிட்டு, அங்கேயே அதிலேயே அவரை வைத்தனர். 99 இன்றைக்கும் அவர்கள் ஒரு கல்லறையில் கிறிஸ்துவை வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஓ, ஈஸ்டர் காலையானது என்ன செய்துவிட்டது! ஈஸ்டர் காலையானது அவர்களுடைய வேதசாஸ்திரம் முழுவதையும் அழித்துப்போட்டது. ஜனங்களுக்கான, இங்கே ஒரு சபைக்கான ஓர் ஈஸ்டர் காலையானது வந்தபோது, ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகள் கழித்தும் அது அவர்களுடைய வேத சாஸ்திரத்தை அழித்துப்போட்டது. அவர் மரித்துவிடவில்லை, அவர் என்றென்றைக்குமாய் உயிரோடிருக்கிறாரே! அவர்கள் அவரை எந்தக் கல்லறையிலுமே வைத்துவிட முடியாது. உங்களால் அவரை ஒரு மெத்தோடிஸ்டு கல்லறையில் அல்லது ஒரு பாப்டிஸ்டு கல்லறையில் அல்லது ஒரு பிரஸ்பிடேரியன் கல்லறையில் அல்லது எந்தக் கல்லறையில் வேண்டுமானாலும் வைத்துவிட முடியும். ஆனால் அவர்—அவரோ அந்தக் கல்லறையிலிருந்து எழுந்து, இன்றைக்கு உயிரோடிருக்கிறாரே! நான் ஒரு பாப்டிஸ்டு கல்லறையை உடையவனாயிருந்தேன், நீங்கள் ஒரு மெத்தோடிஸ்டு கல்லறையை உடையவராயிருந்திருக்கலாம். ஆனாலும் இயேசு ஒரு நாளில் அங்கிருந்து என்றென்றைக்குமாய் உயிரோடிருக்க, ஜீவிக்கும்படியான ஒரு நிகழ்கால தேவனாயிருக்க, ஒரு சரித்திரப்பிரகாரமான தேவனாயிருப்பதிலிருந்து எழுந்துவிட்டார். 100 அந்த ஈஸ்டர் காலையிலே ஏதோ காரியம் சம்பவித்தது. அது ஒரு முத்திரையாயிருந்தது, ஒரு திருப்தியாக்கப்பட்ட முத்திரையாயிருந்தது. அவர்கள் அவரைக் கொண்டுசென்று, கல்லறையில் அவரை வைத்தபோது, அதனுடைய உச்சியின்மேல் ஒரு ரோம முத்திரையை வைத்தனர். ஆனால் அந்த வேளை எழுந்தபோது, அந்த வேளையானது வந்தபோதோ, அவர் சற்று நேரம் அங்கே தரித்திருந்தார். அது உண்மை. அவர் அங்கே அந்த மூன்று இராப்பகல்களாகத் தரித்திருந்தார். ஆனால் வேதம் கூறின அந்தக் குறித்த நேரத்தில், அல்லேலூயா, அவர் “இந்தச் சரீரத்தை அழித்துப்போடுங்கள், மூன்றாம் நாளிலே நான் அதை எழுப்புவேன்!” என்று கூறினபோதான நேரத்தில், அப்பொழுது அந்த வேதவாக்கியத்தை ஒன்றுமே தடுக்க முடியாதிருந்தது. அது நிறைவேற வேண்டியதாயிற்றே! அந்த முத்திரையானது உடைக்கப்பட்டது. அவர், அதே இயேசுவானவர் என்றென்றைக்குமாய் மீண்டும் உயிரோடிருக்க எழும்பினாரே! 101 ஆயிரத்து தொள்ளாயிரத்திற்கு சற்று ஏறக்குறைவான ஆண்டுகளாக, அல்லது ஒருகால் ஆயிரத்து நானூறு அல்லது ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளாகவே சபைகள் அவரை முத்திரையிட்டு வைத்துள்ளன என்றே நான் உங்களுக்குக் கூறுவேன். ஆனால் அவர், “அது கடைசி நாட்களில் நிறைவேறும் என்று தேவன் உரைக்கிறார்” என்றார். அதைத் தடுத்து நிறுத்துவதற்கு ஒன்றுமே இருக்கப் போவதில்லையே! “சாயங்காலத்திலே வெளிச்சம் உண்டாகும். நான் செய்கிற கிரியைகளை நீங்களும் கூடச் செய்வீர்கள். சாயங்காலத்தில் வெளிச்சம் உண்டாகும்.!” நீங்கள் எத்தனை முத்திரைகளை அதன் மீது வைக்க முயற்சித்தாலும் எனக்குக் கவலையில்லை, தேவன் ஒவ்வொரு முத்திரையையும் உடைத்துப்போடுவார். அவர் கல்லறையின் முத்திரையை உடைத்துப்போட்டார். அவர் பாதாளத்தின் முத்திரையை உடைத்துப் போட்டார். அவர் மரணத்தின் முத்திரையை உடைத்துப்போட்டார். அவர் கல்லறையின் முத்திரையை உடைத்துப்போட்டு, என்றென்றைக்குமாய் உயிரோடிருக்கும்படி எழும்பி, அவர் தேவனாயிருந்தார் என்றும், இனிமேல் ஜனங்களிடத்திலிருந்து முத்திரையிடப்படவே முடியாது என்றும் காண்பிக்கும்படியாக, கல்லறையின் மேலும், மரணத்தின் மேலும், மனிதனால் உண்டாக்கப்பட்ட ஒவ்வொரு காரியத்தின் மேலும் வெற்றிச் சிறந்தார். என்றென்றைக்குமே தேவனாயிற்றே! அவரை ஒன்றுமே பிடித்து வைக்க முடியாது. கல்லறையானது போதிய ஆழங்கொண்டதாய் தோண்டப்பட்டிருக்க முடியவில்லை, பாதாளமும் போதிய உஷ்ணமுடையதாயிருக்க முடியவில்லை. ஓ, ஒன்றுமே அவரைப் பிடித்து வைக்க முடியாதிருந்ததே! அவர் ஒவ்வொரு முத்திரையையும் அந்த மகத்தான கிறிஸ்துமஸ் முத்திரையினால் இல்லை கிறிஸ்துமஸ் முத்திரையினால் அல்ல, ஆனால் அவர் முத்திரையிடப்பட்டிருந்த ஈஸ்டர் முத்திரையினால் உடைத்தார். அவர், “நான் தரித்துள்ள அதே முத்திரையை, நீங்களும்கூட அதற்காகவே தரித்துக்கொள்ளுவீர்கள். நான் தரித்துள்ள இந்த முத்திரையினால் நீங்கள் முத்திரையிடப்படும்போது, அதுவும் அதேக் காரியங்களைச் செய்யும். ஏனென்றால் நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்” என்றார். 102 நீங்கள் அதை எப்படித் தடுத்து நிறுத்தப் போகிறீர்கள்? நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அதைக் குறித்து ஜனங்களால் என்ன செய்ய முடியும்? நீங்கள்…நீங்கள் ஒரு தீர்மானத்திற்கு, அதைக் குறித்து என்ன செய்ய வேண்டும் என்ற உங்களுடையத் தீர்மானத்தைச் செய்யும்படி பலவந்தம்பண்ணப்படுகிறீர்கள். அது முற்றிலும் சரியே. 103 இப்பொழுது அவரை…எந்த முத்திரையுமே அவரை பிடித்து வைத்துக் கொள்ள முடியாதிருந்தது என்பதை நாம் கண்டறிகிறோம். அவர் வெளியே வருகிறார். தேவன் முத்திரையை உடைத்து, கல்லறையின் முத்திரையை உடைத்து, மரணத்தின் முத்திரையை உடைத்து, பாதாளத்தின் முத்திரையை உடைத்து, வெளிவந்து வெற்றிச்சிறந்தார். அது என்ன செய்தது? அந்த மகத்தான முத்திரை அவருடைய உட்புறத்தில் இருந்தது. அவர்களால் அந்தச் சரீரத்தை அழிக்க முடிந்தது. ஆனால் அவர்களால் அந்த முத்திரையை ஒருபோதும் அழிக்கவே முடியவில்லை. தேவன் சபைக்கு ஒரு முத்திரையைக் கொடுத்தார், அது ஒருபோதும் அழிக்கப்படவே முடியாது. அவர்கள் ஆபேலை அழித்தபோது, அவர் சேத்தை எழுப்பினார். அவர்கள் ஒரு தீர்க்கதரிசியை அழித்தபோது, அங்கே மற்றொருவர் எழும்பினார். அவர்கள் தொடர்ந்து அழித்துக் கொண்டேயிருந்தனர். ஆனால் தேவனோ அப்பொழுது அவர்களால் அழிக்க முடியாத ஏதோ ஒன்றை அவர்களுக்கு அளிக்கிறார். அது இயற்கைக்கு மேம்பட்ட ஆவியாய் இருக்கிறது. அது தாமே பரிசுத்த ஆவியாயிருக்கிறது. அது பிழையற்றதாயிருக்கிறது, அது அழியக் கூடாததாயிருக்கிறது. அது அழிக்கப்பட முடியாதே! அது தொடர்ந்து ஜீவித்துக் கொண்டே இருக்கும். ஏனென்றால் அவர் ஜீவிக்கிறார், நாம் அவரோடு ஜீவிக்கிறோம், ஏனென்றால் நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக முத்திரையிடப்பட்டிருக்கிறோம். ஆகையால் எப்பொழுதுமே அழிக்கப்பட வழியேக் கிடையாது, எந்த வழியுமே இல்லை, அழியவே முடியாது. ஆனால் நித்திய ஜீவனை உடையதாயிருக்கிறது. ஆமென். அவைகள் முதல்தரமான தேவனுடைய மகத்தான முத்திரைகளாயிற்றே. 104 அவர் மற்றொரு முத்திரையைக் கூட உடைத்ததைக் குறித்து இங்கே நான் பேச விரும்புகிறேன். அது யாத்திராகமத்தில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் வேதவாக்கியங்களை எடுத்துக்கூற எனக்கு நேரம் இருக்காது. ஆனால் அவர்…யாத்திராகமத்தில் அதைக் கண்டறிந்தோம். மனிதன் பாவம் செய்திருந்தது, தேவனுடைய பிரசன்னத்திலிருந்துத் தன்னை பிரித்துக்கொண்டு, அவன் தேவனிடத்தில் ஆராதிக்கும்படி வந்தபோது, அங்கே பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகாபரிசுத்த ஸ்தலத்திற்குமிடையே தொங்கின ஒரு திரை இருந்தது. மகாபரிசுத்த ஸ்தலத்திலே ஷெக்கினா மகிமை இருந்தது. அவர்களோ அங்கே உள்ளே செல்வதற்கு அனுமதிக்கப்படாதிருந்தனர். அதனை நோக்கிப் பார்க்கவுங்கூட அவர்கள் அனுமதிக்கப்படாதிருந்தனர். அங்கே உள்ளே செல்லுகிற ஒரு மனிதனோ வருடத்திற்கு ஒரு முறை அபிஷேகிக்கப்பட்டிருக்க வேண்டியதாயும், சரியாக உடை உடுத்தியிருக்க வேண்டியதாயும், அவன் மீது இரத்தம் இருக்க வேண்டியதாயும், இரத்தம் அவனுடைய கையில் இருக்க வேண்டியதாயும், கிருபாசனத்தில் தெளிக்கும்படியாக ஒரு தாலத்தில் இரத்தம் இருக்க வேண்டியதாயிருந்தது. அவன் தன்னுடையக் கோலை அங்கே உள்ளே ஒரு வருடம் விட்டுவிட்டு, தன்னுடையக் கோலை கொண்டுவராமலே வெளியே வருமளவிற்கு (கண்டறிய விட்டுவிடுதல்) ஷெக்கினா மகிமையானது அவ்வளவு மகத்தானதாயிருந்தது. பின்னர் அவன், திரும்பிச் செல்லும்போது, அது ஏற்கெனவே ஜீவனுக்குள்ளாகி துளிர்விட்டிருந்து, மொட்டுவிட்டு, அதன்மேல் பூப்பூத்திருந்தது. ஏனென்றால் அது ஷெக்கினா மகிமையின் பிரசன்னத்தில் கிடத்தப்பட்டிருந்தது. ஆனால் அங்கே இடையே ஒரு தொங்கின திரை இருந்தது, ஏனென்றால் ஜனங்களின் மேல் பாவம் இருந்தது. 105 ஆனால் ஓ, சகோதரனே, அது இயேசு கிறிஸ்துவின் இரத்ததினால் அந்த நாளில் தெளிக்கப்பட்டபோது, ஒரு தேவனுடைய ஆவியானது அந்த முத்திரையை மேலிருந்து கீழ்வரைக்குமாய் கிழித்து மனிதனைத் திரும்பக் கொண்டுவந்தது. அவனைத் தேவனுடையப் பிரசன்னத்திலிருந்து தடுத்துமாத்திரம் வைத்திருக்காமல், அதாவது அவனை, அவனுடைய மரித்துப்போயிருந்த ஜீவனை…திரும்பவும் தேவனுடையச் சமூகத்திற்குள்ளாகத், திரும்பவும் ஷெக்கினா மகிமைக்குள்ளாக அவர் கொண்டு வந்தார். 106 இயேசு, “பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள்” என்றார். அவர்கள் அவருக்கு, ஜீவனோடுள்ள பச்சைமரத்துக்கு அதைச் செய்திருந்தால், பாருங்கள், இப்பொழுது தேவனுடைய உக்கிரக் கோபாக்கினை ஊற்றப்படும்போது, ஜிவனேயில்லாத அந்தப் பழைய மரித்துப்போன சம்பிரதாயமான மரம் என்னவாகும்? பச்சைமரத்தையே, அது பச்சைமரத்தைக்கூட அழித்து, பாதாளத்திற்கு அனுப்பியிருக்கும்போது, பழைய மரித்துப்போன சம்பிரதாயமான மரமானது அதற்கு எப்படி நிற்க முடியும்? தேவனுடைய உக்கிரக் கோபமானது கீழ்படியாமையின் பாவத்திற்காகவே ஊற்றப்பட்டு, பச்சை மரமானது பாதாளத்திற்கு அனுப்பப்பட்டது. அப்படியானால் அது ஒரு பட்ட மரத்தை தாக்கும்போது, அது என்ன செய்யும்? “நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும், பாவியும் எங்கே நிற்பான்?” வழியைப் புறகணிக்கிற அந்த நபர், மேலானதை அறிந்திருக்கிற அந்த நபர், அவனுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்க, அவன் இன்னமும் தேவனுடைய வழியில் நடப்பதற்கு மறுக்கும்போது, அந்த நபருக்கு என்ன சம்பவிக்கும்? அது என்னவாயிருக்கப்போகிறது? ஆம், அவர் ஷெக்கினா மகிமையிலிருந்து நம்மைத் தடுத்திருந்த அந்த முத்திரையை உடைத்தார், ஏனென்றால் பாவமானது இப்பொழுது முற்றுப்பெற்றாயிற்று. 107 இப்பொழுது முத்திரை என்பது ஒரு முடிவுற்ற கிரியையின் ஓர் அடையாளமாயிருக்கிறது. நீங்கள் பெட்டிகளைக் கொண்ட ஒரு வண்டிக்கு முத்திரையிடப்போவது போன்றதே ஒரு முத்திரை என்பதை நாம் அறிவோம். அவர்கள் அதற்குள் எல்லா வேலையையும் செய்து முடித்துவிட்டு, எல்லாவற்றையும் சேர்த்து அடுக்கினப் பிறகு, அப்பொழுதே அது அதனுடைய சேருமிருடத்திற்கு செல்லும்வரை முத்திரையிடப்படுகிறது. எந்த ஒரு முத்திரையுமே ஒரு முடிவுபெற்ற கிரியையாயிருக்கிறது. நீங்கள் ஒரு பத்திரத்தை எழுதும்போது, அப்பொழுது அது முடிவிலே முத்திரையிடப்படுகிறது. அது முடிவடையும் வரைக்கும் ஒருபோதும் முத்திரையிடப்படுவதில்லை. 108 இப்பொழுது வெள்ளாடுகள் மற்றம் கிடாரிகளின் இரத்தம் முதலானவைப் பாவத்தை எடுத்துப்போடாது. ஆனால் இதுவோ கல்வாரியிலே முடிக்கப்பட்டபோது, பாவத்தை எடுத்துப் போட்டுவிட்டது. இப்பொழுது கவனியுங்கள். 109 ஏதேன் தோட்டத்தில் ஜனங்களைத் திரும்பவும் அந்த விருட்சத்தண்டை வராமல் தடுப்பதற்கு, தேவன் வீசிகொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தோடு அந்த விருட்சத்தைக் காவல்புரிய ஒரு முத்திரையாக அங்கே ஒரு தூதனை வைத்தார். அவர் தன்னுடைய ஆராதனையைச் செய்தபோது, அவன் வந்து…இப்பொழுது நினைவிருக்கட்டும், அந்த விருட்சம் யாராயிருந்தது? அந்த விருட்சமாயிருந்தது யார்? அது இயேசுவாயிருந்தது. 110 மரண விருட்சம் உங்களுடையதாயாயிருந்தது. அவளே உங்களை இங்கே ஜென்மசுபாவமான ஜீவியத்தில் கொண்டு வந்தவள். கிறிஸ்துவோ ஆவிக்குரியப் பிரகாரமான ஜீவியத்தினூடானப் பிறப்பாயிருக்கிறார். ஸ்திரியின் மூலமாய்த் தோன்றி வாழ்கிற யாவரும் மரிப்பார்கள். மனிதனிடத்திலிருந்து பிறந்திருக்கின்ற யாவரும் ஜீவிக்கிறார்கள். ஸ்திரியின் மூலமாய்த் தோன்றுகிற யாவரும் ஜென்மசுபாவமுள்ளவர்களாயிருக்கிறார்கள்; மனிதனிடத்திலிருந்து தோன்றுகிற யாவரும் ஆவிக்குரிய பிரகாரமுள்ளவர்களாயிருக்கிறார்கள். இங்கே மனிதன் அல்ல; மனுஷனாகிய கிறிஸ்து இயேசுவே! 111 அந்த விருட்சம் காவல்பண்ணப்பட்டதைக் கவனியுங்கள்; அதனண்டைத் திரும்ப வரமுடியாது, ஏனென்றால் பாவத்தை எடுத்துப் போடும்படியான தகுதிகொண்ட பொருத்தமான எந்த பலியுமே இல்லை. ஆகையால் அவர்கள் ஆராதிக்க வந்தபோது, அவர்களை முத்திரையிட்டிருந்த திரைக்குப் பின்னே ஷெக்கினா மகிமை இருந்தது. அது ஏதேன் தோட்டத்திலிருந்து அவர்களை முத்திரையிட்டிருந்தது. 112 ஆனால் பெந்தேகோஸ்தே நாள் வந்தபோது, சகோதரனே, இயேசுவானவர் அங்கே கல்வாரியில் மரித்து, கிரியையை முடித்தபோது, அவர் மனிதனை வெளியே முத்திரிக்கவில்லை. அவர் மனிதனை உட்புறத்தில் தம்மோடுதாமே முத்தரித்தார். இப்பொழுது நாம் முத்திரையிடப்பட்டு, ஷெக்கினா மகிமையின் பிரசன்னத்தில் மூடப்பட்டிருக்கிறோம். நாம் உள்ளே முத்திரையிடப்பட்டிருப்பது மட்டுமின்றி நாம் நித்தியமாக உள்ளே முத்தரிக்கப்பட்டிருக்கிறோம். ஆமென்! ஓ, நான் அதை விரும்புகிறேன், இப்பொழுது உட்புறத்தில் முத்திரையிடப்பட்டிருக்கிறோமே! “நாமெல்லாரும் ஒரே ஆவியினால், ஒரே சரீரத்திற்குள்ளாக முத்திரையிடப்பட்டிருக்கிறோம்.” அதுதான் உண்மையான ஈஸ்டர் முத்திரையாயிருக்கிறது. நீங்களோ, “பரிசுத்த ஆவி ஒரு முத்திரையாயிருக்கிறதா?” என்று கேட்கலாம். 113 எபேசியர் 4:30, “அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்” என்று கூறியுள்ளது. அதுவே அசலான, உண்மையான ஈஸ்டர் முத்திரையாயிருக்கிறது. உங்களுக்கான, பாவத்திற்கான கிரயம் செலுத்தப்பட்டிருக்கிறது என்றும், தேவன் உங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார் என்றும், நீங்கள் பரிசுத்த ஆவியினால் கிறிஸ்துவுக்குள்ளாக முத்திரையிடப்பட்டிருக்கிறீர்கள் என்பதையுமே அது காண்பிக்கிறது. பாவம் முற்றுபெற்றுவிட்டது. நித்திய முத்திரை நிறைவு செய்யப்பட்டாயிற்று. 114 இப்பொழுது இன்றைக்கு நாம் உயிரோடெழுப்பப்பட்டிருக்கிறோம். எனவே நாம் தேவனுடைய காரியங்கள் மேல் ஏன் அப்பேர்ப்பட்ட ஒரு நேரத்தை உடையவர்களாயிருக்க முடியாது? ஏனென்றால் நாம் உயிர்த்தெழுப்பப்பட்டிருக்கிறோம். “எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.” அப்படியானால் நாம் இப்பொழுது உயிர்த்தெழுப்பப்பட்டிருக்கிறோம். நாம் உட்புறத்திலிருந்து வெளியே உயிர்த்தெழுப்பப்பட்டிருக்கிறோம், வெளிப்புறத்திலிருந்து உள்ளே அல்ல. ஓ! இந்த விதமாய், வெளிப்புறத்தில் முத்திரையிடப்படவில்லை என்பதை நீங்கள் கவனிக்கிறீர்களா? ஆனால் உள்ளே முத்திரையிடப்பட்டிருக்கிறோம். ஓ! என்னே, சபையானது சற்று அதைக் காணக் கூடுமேயானால் நலமாயிருக்குமே! பாருங்கள், நாம் வெளியே முத்திரையிடப்பட்டிருக்கவில்லை, நாம் உள்ளே முத்திரையிடப்பட்டிருக்கிறோம். அவர்களுடைய நாட்களில், பாவமானது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருந்தபோது, அதை எடுத்துப்போட தகுதியானதொன்று இல்லாதிருந்தது. நாம் அதிலிருந்து விலக முத்திரையிடப்பட்டிருந்தோம். இப்பொழுதோ அது இரண்டாகக்கிழிக்கப்பட்டு, அந்த முத்திரை நம்மிடத்திலிருந்து படைக்கப்பட்ட ஒரு பாவ நிவாரணபலியினால் உடைக்கப்பட்டு, இப்பொழுது நாம் உட்புறத்தில் ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, உட்புறத்தில் முத்திரையிடப்பட்டிருக்கிறோம். நாம் உயிர்த்தெழுப்பப்பட்டிருக்கிறோம். நாம் இப்பொழுதே உயிரோடெழுப்பப்பட்டிருக்கிறோம், ஏற்கனவே உயிரோடெழுப்பப்பட்டிருக்கிறோம். உங்களுக்கு எப்படித் தெரியும்? வேதம் அவ்வண்ணமாய்க் கூறியுள்ளதே! ஆமென். நாம் இப்பொழுது உயிரோடெழுப்பப்பட்டிருக்கிறோம். நாம் இப்பொழுது ஆவிக்குரியபிரகாரமான உயிர்த்தெழுதலில் அவரோடு எழுப்பப்பட்டிருக்கிறோம். உயிர்ப்பிக்கப்படுதல் என்ற வார்த்தையின் பொருள் என்ன? உயிர்ப்பிக்கப்படுதல் என்பதன் பொருள் “உயிர்த்தெழுதல்” என்பதாகும். அது உண்மை. நாம் ஏற்கனவே உயிரோடெழுப்பப்பட்டு, கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக உன்னதங்களில் ஒன்று சேர்ந்து உட்கார்ந்து கொண்டு இப்பொழுதே, ஈஸ்டர் முத்திரையை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். ஆமென். அதுதான் தேவனுடைய உண்மையான ஈஸ்டர் முத்திரையாயிருக்கிறது. நாம் எப்படி இருக்கிறோம்? நாம் ஒரே ஆவியினால் சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானமபண்ணப்பட்டு, நித்தியமாக முத்திரையிடப்பட்டிருக்கிறோம். நாம் இப்பொழுது ஆவிக்குரிய பிரகாரமாக எழுப்பப்பட்டிருக்கிறோம். நாம் எதிலிருந்து எழும்பினோம்? ஒரு பாவ ஜீவியத்திலிருந்து, நாம் ஒரு காலத்தில் பாவிகளாய், உலகத்தின் காரியங்களை நேசித்தவர்களாயிருந்தோம். 115 இப்பொழுதோ அநேக ஜனங்கள் தாங்கள் உயிரோடெழுப்பப்பட்டிருப்பதாக அவர்களே கூறிக்கொள்ளுகிறார்கள், ஆனால் அவர்களுடைய ஜீவியமோ வித்தியாசமாக நிரூபிக்கிறது. நீங்கள் யாராயிருக்கிறீர்கள் என்பதை உங்களுடைய ஜீவியம் நிரூபிக்கிறது. இயேசு, “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்,” என்று கூறினார். அந்தக் காரணத்தினால்தான் நாம் ஒருபோதும் ஒரு மனிதன் அந்நியபாஷைகளில் பேசுவதன் பேரில், அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறான் என்று கூறவே முடியாது. நாம் அதை நம்புகிறதில்லை. அதற்கான வேதவாக்கியமே கிடையாது. இல்லை, ஐயா, மனிதர்கள் அந்நிய பாஷைகளில் பேசிவிட்டு, வெளியேப்போய், உலகத்தைப் போன்றே ஜீவிக்கிறார்கள். ஸ்திரிகள் அந்நிய பாஷகளில் பேசிவிட்டு, தங்களுடையத் தலைமுடியை குட்டையாக வெட்டிக்கொண்டு, மாதர்முக ஒப்பனையைப் பூசிக்கொள்ளுகிறார்கள். ஹீ! அது பரிசுத்த ஆவியாயிருந்தது என்று உங்களால் கூற முடியாது. நிச்சயமாக இல்லை, நிச்சயமாகக் கிடையாது, நிச்சயமாக இல்லவே இல்லை. ஒரு மனிதன் சிகெரட்டு புகைத்து, இங்கிருந்து வெளியேப் போய், அடுத்த மனிதனுடைய மனைவியோடு வாழ்ந்து சுற்றித்திரிந்து கொண்டு, அப்படியே தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால், அது பரிசுத்த ஆவி என்று கூறலாமா? இல்லை, இல்லை, “அவர்களுடையக் கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். ஒரு கெட்ட மரம் நல்லக் கனிகளைக் கொடுக்கமாட்டாது. ஒரு நல்ல மரமும் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது.” 116 நாம் பரிசுத்த ஆவியினால், தேவனுடைய உண்மையான ஈஸ்டர் முத்திரையிடப்பட்டிருக்கிறோம். நாம் கிறிஸ்துவினுடைய சரீரத்திற்குள்ளாக முத்திரையிடப்பட்டிருக்கிறோம், நித்தியமாக முத்திரையிடப்பட்டிருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி நேரத்திற்கான ஒரு முத்திரை அல்ல; ஆனால் நித்தியமாகவே, இப்பொழுது அதைப் பெற்றுக்கொண்ட அந்த நபர் மரித்தோரிலிருந்து, ஒரு பாவ ஜீவியத்திலிருந்து எழுப்பப்பட்டிருக்கிறான். அது என்னவாயிருக்கிறது? அவனுடைய ஆவியானது எழுப்பப்பட்டிருக்கிறது, அவனுடைய—அவனுடைய விருப்பக் குறிக்கோள்கள் எழுப்பப்பட்டிருக்கின்றன, அவனுடைய ஜீவியம் எழுப்பப்பட்டிருக்கிறது, அவன் ஒரு புது சிருஷ்டியாயிருக்கிறான். நாம் இந்தக் காலையில் இருப்பதுபோன்றே, அவன் பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்பட்டு, ஒருவருக்கொருவர் ஜெபிக்க, ஒருவருக்கொருவர் உதவி செய்ய, ஒருவருக்கொருவர் உற்சாகப்படுத்த, கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக உன்னதங்களிலே கூட உட்காரும்படி உடன் பிரஜைகளோடு சேர்ந்து வருகிறான். வேதமோ, “ஏனென்றால் நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது, பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறியுள்ளது. அதுதான் வேதவாக்கியமாயிருக்கிறது. இப்பொழுது நாம் ஈஸ்டர் முத்திரையினால் முத்திரையிடப்பட்டிருக்கிறோம் என்பதை நீங்கள் பாருங்கள். ஈஸ்டர் முத்திரையாகிய உயிர்த்தெழுதலை, அவருடைய ஜீவியமானது அதை உறுதிப்படுத்தினது, அவர் கூறியிருந்தது உண்மையாயிருந்தது. இப்பொழுது அது ஒரு முழுமையான பணியாயிருக்கிறது என்றும், அது ஒரு முடிவுற்ற உற்பத்தியாயிருக்கிறது என்றும் நாம் கண்டறிகிறோம். தேவனுடைய உயிர்த்தெழுதல் ஒரு முடிவுற்ற உற்பத்தியாயிருக்கிறது. பரிசுத்த ஆவி என்பது ஒரு முடிவுற்ற உற்பத்தியின் தேவனுடைய முத்திரையாயிருக்கிறது. 117 இப்பொழுது நாம் கிறிஸ்துவண்டை வருகிறோம். நாம் செய்கிற முதல் காரியம், நாம் அவர் மேல் விசுவாசங்கொள்வதன் மூலம் நீதிமான்களாக்கப்படுகிறோம். நாம் அதைச் செய்யும்போது அப்பொழுது நாம் தவறு செய்திருக்கிறோம் என்பதை நாம் அறிந்து கொண்டு, நம்மை பரிசுத்தமாக்கும்படி, நாம் தேவனிடத்தில் வேண்டிக்கொள்கிறோம். மார்டின் லூதர், நீதிமானாகுதலே அவருடைய செய்தியாகும். அதன்பின்னர் வெஸ்லி பரிசுத்தமாகுதலோடு வந்தார். அப்பொழுது அவை யாவும் முடிவுறும்போது, அவருடைய சபை முழுமையடைகிறது. அடுத்தக் காரியம் என்ன? ஒரு முடிவுற்ற கிரியை. சபையானது முழுமையடைந்துவிட்டது என்ற ஒரு முடிவுற்ற கிரியையே முத்திரையாயிருக்கிறது. 118 கூர்நுனி கோபுரத்தில் உள்ளதைப் போன்றேயாகும். ஒரு டாலர் நோட்டின் மேல் கவனித்துப்பாருங்கள். நான் இதைக் குறிப்பிட்டுக் கூறியிருக்கிறேன். நான் அதை இங்கே கூடாரத்தில் எப்போதாவது கூறினேனா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியாது. நீங்கள் ஒரு டாலர் நோட்டின் மேல் கவனித்துப் பாருங்கள். அது “மகத்தான முத்திரை” என்று அழைக்கப்படுகிறது. இப்பொழுது ஐக்கிய நாடுகள் எகிப்தில் உள்ள அதை அடையாளங்கண்டுகொள்ள முடிந்து, அவர்கள் அந்த மகத்தான முத்திரையை உடையவர்களாயிருக்கிறார்கள் என்பதையும், இங்கே மற்றொரு பக்கத்தில் கழுகை ஐக்கிய நாடுகளின் முத்திரையாக கொண்டிருப்பதும் எப்படி என்று உங்களால் கூற முடியுமா? ஏன் அவர்கள் அந்த ஒரு மகத்தான முத்திரையை, மகத்தான முத்திரையைச் செய்யும்படி பலவந்தம்பண்ணப்பட்டனர்? காரணமென்னவெனில், நீங்கள் கவனித்துப் பார்த்தால், சரியாக பின்னால், கூர்நுனி கோபுரத்திற்கு மேலே ஒரு சிறு இடம் உள்ளது, அந்த சிறு இடமே தலைக்கல்லாய் உள்ளது. அந்த தலைக்கல்லோ கூர்நுனி கோபுரத்தின் மேல் ஒருபோதும் வைக்கப்படவேயில்லை. அது மேலே மூடாமல் திறந்து உள்ளது. நீங்கள் எப்போதாவது அங்கு சென்றிருந்தால் நலமாயிருக்கும். தேவனுடையக் கிருபையினால் நான் அங்கு சென்றிருக்கிறேன். எனவே அங்கே—அங்கே கூர்நுனிகோபுரத்தின்மேல் மேல்பாகமே இல்லாமலிருக்கிறது. அது என்னவாயிருக்கிறது? ஏனோக்கு ஜலப்பிரளயத்திற்கு முன்னர் அதைக் கட்டினான். அது ஒரு ஞாபகச் சின்னமாயிருந்தது, அந்தக் காரணத்தினால் ஜலப்பிரளய நேரத்தின்போது அது ஒருபோதும் அழிக்கப்படவேயில்லை. அது எந்த ஒன்றினாலும் அழிக்கப்படவில்லை, ஏனென்றால் அது ஒரு ஞாபகச் சின்னமாயிருக்கிறது. 119 இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களேயானால், அது கீழே அடிபாகத்திலே அகன்றும், அதன்பின்னர் ஒரு சிறுபான்மையான உருவங்கொண்டதாகி, அதன்பின்னர் இன்னும் சற்று சிறுபான்மை உருவமாகி, பின்னர் அது தலைக்கல்லிற்குச் செல்கிறது. அதுதான் லுத்தரன் காலம், சபையில் நீதிமானாகுதல்; பரிசுத்தமாக்குதல்; அதன்பின்னர் பரிசுத்த ஆவியின் அபிஷேகம். ஆனால் அது மேல் நோக்கிச் செல்லும் உருவங்கொண்டதாகி வரும்போது, அது லுத்தரன் காலத்திலிருந்து வெஸ்லி காலத்திற்கும், பெந்தேகோஸ்தே காலத்திற்கும் தொடர்ந்து செல்கிறது. ஆனால் அது பெந்தேகோஸ்தே காலத்தை விட்டப்பிறகு, அது ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைய வேண்டிய அளவிற்கு மேலே, ஒரு சவரகன் கத்தியைப் போன்றே அளவிற்கு…அந்தக் கற்கள் அவ்வளவாய் சாணையில் தீட்டப்படுவதுபோல செதுக்கப்பட்டுள்ள அளவிற்கு உருவங்கொண்டதாகி மேலே செல்கிறது. 120 அவைகள் அங்கே மேலே பல டன்கள் எடை கொண்டவைகளாய் இருக்கின்றன. எப்படி அவைகளை அவர்கள் மேலே தூக்கி வைத்தனர் என்பது இன்னமும் அது மனிதனுக்கு ஓர் இரகசியமாகவே உள்ளது. ஆனால் அவர்கள் இந்த சவரகன் கத்தியை எடுத்து, அந்தக் கற்களுக்கு இடையே சாந்து பூசியிருக்கவேண்டிய இடத்தில் நுழைத்துப் பார்க்க முடிந்தால், அதுவோ உங்களால் ஒரு சவரகன் கத்தியைக் கூட உள்ளே நுழைக்க முடியாத அளவிற்கு அது அவ்வளவு பரிபூரணமாய்த் தீட்டப்பட்டு செதுக்கப்பட்டதாயிருக்கிறது. அந்தவிதமாகத்தான் அந்தக் கற்கள் பரிபூரணமாய் ஒன்று சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்தவிதத்தில், கற்கள் சரியாகப் பொருந்தியிருக்க, ஒரு விதமான கோணங்களில் அந்தத் தலைக்கல் வந்து ஒரு முனையில், அதற்குள் அமரும்படியான விதத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது…அதற்கு எந்த சாந்தும் தேவைப்படாது, அது பரிபூரணமாகப் பொருந்தும். 121 இப்பொழுது அதைத்தான் தேவன் தம்முடைய சபைக்கு செய்துகொண்டிருக்கிறார். அவர் சிறுபான்மையினராய், கூர்மையாக்கிகொண்டே வந்து, அதை அப்படிப்பட்டதான ஒரு பரிபூரண வழியில் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அதாவது தலைக்கல்லான கிறிஸ்து வருகிறபோது அதுவே கட்டிடத்தை ஒன்று சேர்த்து இணைக்கிறது. அப்பொழுது ஒரு முழுமையான உயிர்த்தெழுதல் உண்டாக, சபையானது மேலே செல்கிறது. தலைக்கல்லாயிற்றே! 122 இப்பொழுது நாம் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக உன்னதங்களில் ஒன்று சேர்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். இப்பொழுது இயேசு, இயேசுவின் சரீரமானது உயிர்த்தெழுதலிலிருந்து மேலே எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதை நாம் தெளிவாக உணருகிறோம். இப்பொழுது மூன்று வானங்களைக் குறித்து வேதம் பேசுகிறது என்பதை நாம் அறிவோம். நாம் அதை முதலாம் வானம், இரண்டாம் வானம், மூன்றாம் வானம் என்று அறிவோம். பவுல் மூன்றாம் வானம் வரைக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டு, பேசப்படாத வாக்குக்கெட்டாத காரியங்களைக் கண்டு, அவைகளைக் குறித்து அவன் பேச முடியாதவனாயிருந்தான். இப்பொழுது வேதாகமத்தில் முதலாம் வானம் மேகங்களைப் போன்றுள்ளது என்றே அழைக்கப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால் கீழே இங்கே பூமிக்குரிய பிரகாரமான முத்திரை என்று அழைக்கப்படுகிறது. இப்பொழுது மேலே மேகங்களிலிருந்து உண்டாகும் சூழ்நிலையானது கீழே சபைக்குள்ளாக மாறி அது ஓர் உன்னத ஸ்தலமாயிருக்கிறது. அதன் பின்னர் இரண்டாம் வானம் கதிரவன் மண்டலம் என்று எண்ணப்படுகிறது. மூன்றாம் வானமோ அதற்கு அப்பாலே செல்லுகிறது. 123 இப்பொழுது நாம் சற்று சிந்திக்க நேரிடும், எனவே இதை அப்படியே ஒரு நிமிடம் கவனித்துப் பார்ப்போம். இப்பொழுது ஐன்ஸ்டீன் விஞ்ஞானத்தின் மூலம் நிரூபித்தார். அதாவது இரண்டு கார்கள் சாலையில் பக்கத்திற்கு பக்கமாக வந்து கொண்டிருப்பது போல, இரண்டு பொருள்கள் ஒன்றுக்கொன்று பக்கத்திற்கு பக்கமாக வந்து கொண்டிருந்தால், அவைகள் போதுமான அளவிற்கு வேகமாய் வந்து கொண்டிருந்தால் (இப்பொழுதோ அவைகள் ஒரு வினாடிக்கு கோடிக்கணக்கான மைல்கள் வேகத்தைப் போன்று, உண்மையாகவே அவ்வளவு வேகமாய் இருக்க வேண்டும்) ஆனால் அவைகள் ஒன்று மற்றொன்றைச் சரியாக கடந்து செல்லக்கூடும், எந்த ஒரு காரியத்தையும் ஒருபோதும் தொல்லைப்படுத்தாது. வேகம் அதைச் செய்யும், அது எந்தக் காரியத்தையும் தொல்லைப்படுத்தாமலேயே ஒன்று மற்றொன்றை சரியாகக் கடந்து செல்லும். 124 இப்பொழுது, இப்பொழுது நீங்கள் கவனிப்பீர்களேயானால், நான் இங்கே அண்மையில் கலிபோர்னியாவில் உள்ள பால்மோர் மலையில் நின்றுகொண்டிருந்தேன். அப்பொழுது என்னால் தூரதரிசின கண்ணாடியின் மூலம் அங்கே நூற்றிருபது கோடி ஒளி ஆண்டுகளின் விண்வெளி தூரத்தைக் காணமுடிந்தது. இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள், நூற்றிருபது கோடி ஒளி ஆண்டுகளின் விண்வெளி தூரம், அங்கு செல்ல எத்தனை மைல்கள் வேகத்தில் செல்ல வேண்டியதாயிருக்கும் என்று கணக்கிட்டுப் பாருங்களே! புரிகின்றதா? 125 ஆனால் அதேசமயத்தில் பரலோகம் கோடான கோடிக்கணக்கான ஒளி ஆண்டுகளின் தூரத்திற்கு அப்பால் உள்ளது. அதை நினைத்துக்கூட பார்க்க கூடாத அளவிற்கு தூரமாய் உள்ளது. நாம் எப்படி அங்கே செல்வோம்? அது பயணமாயிருக்கிறது. அது சிந்தையைப்போன்று அவ்வளவு வேகமாய்ச் செல்வதாயிருக்கும். அது மிகவும் வேகமாக இருக்கும். உங்களால் பரலோகத்தைக் குறித்து நினைத்துப்பார்க்கக் கூடுமானால், அந்தவிதமாகத்தான் அவ்வளவு துரிதமாக நீங்கள் அங்கே இருப்பீர்கள். இயேசுவானவர், அவர் உயிர்த்தெழுந்த பிறகு, சுவர்களினூடாக வந்தார், சரியாக கதவுகளினூடாக வந்தார், வந்து நின்று பொரித்த மீனையும், தேன் கூட்டுத் துணிக்கையையும் புசித்தார். அல்லேலூயா. வேகமாயிற்றே! இந்தச் சரீரத்தைவிட்டு ஜீவன் வெளியேறினவுடனே, நாம் அப்பால் உள்ள தேவனுடையப் பிரசன்னத்தில் இருக்கிறோம். நாம் அடி, அங்குலங்கள், கெஜங்கள், மைல்கள் போன்றவற்றை மாத்திரமே அறிந்துள்ளோம். நாம் இந்த நிலவுலகத் தொடர்புடைய முறைமையில் இருக்கிறோம். ஆனால் சகோதரனே, நாம் இங்கிருந்து செல்லும்பொது, ஓ, என்னே, என்ன ஒரு நேரமாயிருக்கும்! 126 அன்றொரு இரவு ஆபிரகாமின் பேரிலும், அவனுக்குப் பிறகு அவனுடைய வித்தின் பேரிலும், எப்படியாய் தேவன் ஆபிரகாமினூடாக அதைக் காண்பித்தார் என்பதன் பேரிலும் பேசிக்கொண்டிருந்தேன். எப்படி அவர் ஆபிரகாமை நீதிமானாக்கினார், ஆதியாகமம் 12-ம் அதிகாரம், இந்த…கீழே 16- வது அதிகாரம், எப்படி அவர் பரிசுத்தமாகுதலினூடாக உடன்படிக்கையை உறுதிப்படுத்தினார். 17-ம் அதிகாரத்தில், அவனுக்குத் தன்னுடைய மார்பிலிருந்து பாலூட்டும்படி பரிசுத்த ஆவிக்குள்ளாக இழுக்கிறார். அதன்பின்னர் அவர் அவனை உறுதிப்படுத்தினார் இல்லை ஸ்தானத்தில் வைத்தார். (நீங்கள் அவருக்கு செவிகொடுங்கள் என்று நான் பிரசங்கித்திருக்கிற செய்தியை நீங்கள் கேட்டிருக்கிறது போலவே), அவர் ஆபிராகமை அழைத்து, அவனுடைய பெயரை ஆபிராமிலிருந்து ஆபிரகாமுக்கு மாற்றி, தன்னுடைய பெயரின் பாகத்தை எலோஹிம், ஹாம் என்பதை (h-a-m) அவனுக்கு அளிக்கிறார். அதன்பின்னரே, அவர் ஆபிரகாமுக்குத் தரிசனமானார் என்பதை நாம் கண்டறிகிறோம். 127 இப்பொழுது அவருடைய வித்திற்கு, எப்படி அவர் அவனுடைய வித்திற்கும் அதேவிதமாகச் செய்திருக்கிறார் என்பதைக் கவனியுங்கள். ஆபிரகாமுடைய வித்தானது நீதிமானாகுதலினூடாகவும், பரிசுத்தமாகுதலினூடாகவும், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினூடாகவும் வருகிறது; அவருடைய நாமத்தின் வெளிப்படுத்துதல், அவர் யாராயிருக்கிறார் என்பதைக் குறித்து வெளிப்படுத்தல். (அது யாரைக் குறித்த வெளிப்பாடு? இயேசு கிறிஸ்துவையே), அவருடைய நாமத்தில் ஞானஸ்நானம், அதைப் போன்றவை, அந்த வெளிப்பாடு, தம்முடைய நாமத்தை தம்முடைய சபையோடு பகிர்ந்துகொண்டு அவர்களை வெளியே அழைத்தார். அதன்பின்னர் அவர் என்ன செய்தார்? அதே சபையில் அவர் தம்முடைய நாமத்தை, இயேசுவின் நாமத்தை அழைத்தார். அவர் என்ன செய்தார்? அவர் தனக்கு பின்பக்கமாக நடந்ததை ஆவியில் பகுத்தறியக்கூடியவராயிருந்து, அவர் ஆபிரகாமுக்கு செய்த அதே ரூபத்தில் தரிசனமானார். புரிகின்றதா? அதே நாமத்தில், அதேக் காரியத்தில், அதே ரூபத்தில் தரிசனமானாரே! நாம் பாதையின் முடிவில் இருக்கிறோம். 128 இப்பொழுது என்ன சம்பவித்தது என்று கவனியுங்கள். அவர் அதைச் செய்தபோது, ஆபிரகாமுக்கும் சாராளுக்கும், சபைக்கும் மாற்றம் உண்டாகும் முன்னர் அதுவே அவர் சபைக்கு அளித்த கடைசி அடையாளமாயிருந்தது. இப்பொழுது தூதன் இரகசியத்தைக் கூறினபோது, ஸ்திரியானவள் (சபையை அது சுட்டிக்காட்டினது), அவளால் அதை விசுவாசிக்க முடியவில்லை, எனவே அவள் தனக்குள்ளே நகைத்துக் கொண்டாள். பாருங்கள், அவள் நூறு வயதானவளாயிருந்தாள், கணவனாகிய ஆபிரகாம் மனைவியாகிய அவளோடிருக்கும்படியான உண்ர்வு இழக்கப்பட்டிருந்தது. நான் எதைப் பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள், குடும்ப உறவு முறைகள், அநேகமாக இருபது வருடங்களுக்கு முன்னர் தொடர்பிருந்திருக்கலாம்; நல்லது, எனவே அவர்கள் அந்த வகையில் மரித்துப்போயிருந்தனர். சாராளும், ஆபிரகாமும் சரீரப்பிரகாரமான உணர்வுகளில் மரித்துப்போயிருந்தனர். சாராளுடைய கர்ப்பமும் மரித்துப்போயிருந்தது. ஆனால் என்ன நடந்தது? என்ன சம்பவித்தது? அவள், “என் ஆண்டவனும் நானும் அவ்வளவு முதிர்வயதுள்ளவர்களாயிருக்கையில் என்னால் எப்படி முடியும்? நாங்கள் அங்கே வருடங்களாகவே அந்த விதமான உறவு முறைகளிலிருந்து முடிவுற்றுப்போனவர்களாய் இருந்து வருகிறோம். அது அவருக்கு கூடாத காரியமாயிருக்கிறது. அது எனக்கும் கூடாதகாரியமாயிருக்கிறது. என்னால் அதை எப்படிச் செய்ய முடியும்?” என்று கூறிக்கொண்டாள். அவள் தன் உள்ளத்திலே நகைத்துக் கொண்டாள். 129 அப்பொழுது தூதனானவரோ, “அவள் ஏன் நகைத்தாள்? அவள் ஏன் தன்னுடைய உள்ளத்திலே அவ்வாறு எண்ணினாள்? ஏன் அவள் இதைக் கூறினாள்?” என்று கேட்டார். இப்பொழுது கவனியுங்கள், ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் ஏதோ காரியம் சம்பவிக்கும் முன்னர் அதுவே கடைசி அடையாளமாயிருந்தது. 130 இப்பொழுது தேவன் அவர்களை மீண்டுமாக வாலிப மனிதனாகவும், வாலிபப் பெண்மணியாகவும் மாற்றினார் என்று உங்களிடம் கூறி இங்கு ஒருமுறை நான் பிரசங்கித்தேன். அதை நிரூபிக்கும்படியாக, அவள் அங்கு சென்றாள். அவர்கள் ஒரு சிறுபயணம் மேற்கொண்டு, கேராருக்குச் சென்றிருந்தபோது பெலிஸ்திய இராஜாவாகிய அபிமெலேக்கு சாராளோடு காதல் கொண்டு, அவளை மணந்துகொள்ள விரும்பினான். உண்மையாகவே அவள் மீண்டும் ஓர் அழகான வாலிபப் பெண்மணியாயிருந்தாள். கவனியுங்கள், அவர் ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய வேண்டியதாயிருந்தது, அவர் அவளை மாற்ற வேண்டியதாயிருந்தது. அவர் அவளை, அவனையும், அவர் வெறுமென ஒரு வாலிப மனிதனாகவும், வாலிப ஸ்திரியாகவும் மட்டும் மாற்றவில்லை. அவர் அதை மாத்திரம் செய்யவில்லை; ஏனென்றால் அவர்கள் அவ்வாறு இருந்திருந்தால், அதேக்காரியம்தான் காணப்பட்டிருந்திருக்கும். பாருங்கள், அவர்கள் வந்து…ஏனென்றால் அவள் ஏறக்குறைய பதினாறு வயதாயிருந்தபோதே அவன் அவளை விவாகம்பண்ணியிருந்தான். அப்பொழுது அவன் ஒரு வாலிப மனிதனாக இருந்தான். அவர்கள் தங்களுடைய வாழ்நாள் முழுவதுமே பிள்ளையேயில்லாமல் வாழ்ந்து வந்தனர். எனவே அவர் அவர்களை மீண்டும் அந்நிலையில் வைத்திருந்தால், அவர்களுக்கு மீண்டும் அதேக் காரியமே நடந்திருக்கும். ஆனால் அவர் வித்தியாசமான ஏதோ ஒரு காரியத்தைச் செய்ய வேண்டியதாயிருந்தது; அவர்கள் பெற்றுக்கொள்ளப் போவதாயிருந்த வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட குமாரனை, இந்த வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட குமாரனைப் பெற்றுக் கொள்ளும்படியாக அவர் அவர்களை மாற்ற வேண்டியதாயிருந்தது. ஆனால் அவர் அவர்களுடைய முழு அமைப்பையும் மாற்ற வேண்டியதாயிருந்தபடியால், குமாரனைப் பெற்றுக்கொள்ள அவர்களைத் திரும்ப மீண்டும் வாலிபமாக்கி, அவர்களை மாற்ற வேண்டியதாயிருந்தது. 131 அதேக் காரியத்தையே அவர் அடுத்து செய்யப் போகிறாரே, அதற்குப்பிறகு…நினைவிருக்கட்டும், ஆபிரகாமுக்கும் அவனுடைய குழுவிற்கும் அந்த அடையாளம் முழுமையாக வெளிப்படுத்தப்பட்ட பிறகு, அதன்பின்னர் வருகிற அடுத்தக் காரியம் அந்த மாற்றமாயிருந்தது…புரிகின்றதா? இப்பொழுது அவர், “சோதோமின் நாட்களில் நடந்ததுபோல மனுஷ குமாரன் வருகையிலும் அப்படியே இருக்கும்” என்று கூறினது போலவே, நாம் நீதிமானாகுதலினூடாக, பரிசுத்தமாகுதலினூடாக, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினூடாக, குமாரனை ஸ்தானத்தில் வைத்தலினூடாக, அவரைக் குறித்த அடையாளங்கள் மற்றும் அற்புதங்களினூடாக இருதயத்தின் நினைவுகளை வகையறுக்கும்படியான அவருடைய பிரசன்னத்தில் இருந்துகொண்டுடிருத்தலினூடாக, மற்றும் இது போன்றவைகளினூடாகச் செய்யப்பட்ட ஒவ்வொரு காரியத்தையும் பார்த்திருக்கிறோம். அது இப்பொழுது சம்பவிக்கிறதை நாம் காண்கிறோமே! அடுத்தக் காரியம் என்னவாயிருந்ததூ? சரீர மாற்றம். இப்பொழுது, இது எதிர்ப்பார்க்கப்பட்ட குமாரனுக்காகவே நாம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையே காண்பிக்கிறது. மகிமை! அது உண்மைதானே? நாம் இந்தச் சரீரங்களில் அவரைச் சந்திக்க முடியாது. நாம் திரும்பவும் வாலிப மனிதர்களாகவும் ஸ்திரிகளாகவும் மாற்றப்பட்டாலும், இன்னமு நம்மால் அவரைச் சந்திக்க முடியாது, ஏனென்றால் நாம் அவரை ஆகாயத்தில் சந்திக்க வேண்டும். நம்மைத் திரும்பவும் வாலிப மனிதர்களாகவும் ஸ்திரிகளாகவும் மாற்றுவதல்லாமல் வேறே ஏதோ காரியம் செய்யப்பட வேண்டியதாயிருக்கிறது. நாம் மாற்றப்பட்டு, ஆகாயத்தில் அவரைச் சந்திக்கும்படி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். வருகிற அடுத்தக் காரியம் கர்த்தராகிய இயேசுவை ஆகாயத்தில் சந்திக்கும்படியான சபையின் எடுத்துக்கொள்ளப்படுதலும், நித்திரையாயிருக்கும் பரிசுத்தவான்களின் சரீர மாற்றமுமேயாகும். 132 ஓ, ஈஸ்டரின் ஞாபகச் சின்னமாய், அவர்கள் பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்பட்டிருக்கிறார்களே! இப்பொழுது ஏதேனின் வாசலில் மனிதன் தேவனிடத்திலிருந்து முத்திரையிடப்பட்டு, பெந்தேகோஸ்தேயில் தேவனுக்குள்ளாக அவன் நித்தியமாக முத்திரையிடப்பட்டான். அவன் இனி ஒருபோதும் உள்ளேயோ அல்லது வெளியேயோ செல்லுகிறதில்லை. அவன் நன்மையாக அங்கேயே இருக்கிறானே! பாருங்களேன்! ஒரே ஆவியினால், “நாம் பரிசுத்த ஆவியினால் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம்.” அது சரிதானே? அப்படியானால் நாம் எவ்வளவு காலம் வரையில் நாம் முத்திரையிடப்பட்டிருக்கிறோம்? உங்களுடைய மீட்பின் நாள் வரைக்குமே! அவன் இனி ஒருபோதும் உலகத்தின் காரியங்களுக்காக வெளியேச் செல்லுகிறதில்லை. “ஏனென்றால் நீங்கள் மரித்தீர்கள், உங்களுடைய ஜீவன் பரிசுத்த ஆவியினால் முத்திரையிடப்பட்டு, கிறிஸ்துவினூடாக தேவனுக்குள் மறைந்திருக்கிறது.” ஓ, என்ன ஓர் அழகான வேதவாக்கியம், பரிசுத்த ஆவியினால் கிறிஸ்துவுக்குள் முத்திரையிடப்பட்டிருக்கிறதே! 133 அதன்பின்னர் இயேசுவானவர் மரித்தோரிலிருந்து எழுந்தபோது, “அவர் எழுந்தாரா அல்லது அவர் எழுந்திருக்கவில்லையா?” என்ற தங்களுடையத் தீர்மானத்தைச் செய்ய மனிதர் மீண்டும் பலவந்தம்பண்ணப்பட்டனர். அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் அந்த பரியாசமான வழக்கு விசாரனையிலும், அரசியலும், சபையிலும் சேர்ந்து செய்த அதேக் காரியத்தையே இவர்களும் செய்தனர்; ஏனென்றால் அவர்கள் அப்பொழுது செய்ததுபோன்றே அரசியலும், மதமும் அதே மாதிரியாகவே ஒன்று சேர்ந்துள்ளன. 134 அவர்கள் வருங்காலத்திலும் அதையே செய்யப் போகிறார்கள், இப்பொழுதும் அதையே செய்யப் போகிறார்கள், இப்பொழுதும் அதையே செய்து கொண்டிருக்கிறார்கள், அரசியலும் மதமுமே! ஆகாப் ஒரு நல்ல அழகான நபராய் இருந்தான், ஆனால் யேசபேலை, அவன் அவளை மணந்துகொண்டான். ஜனாதிபதி கென்னடி ஒரு நல்ல மனிதனில்லையென்று நான் கூறவில்லை, ஆனால் அவர் அந்த யேசபேல் முறைமையை மணந்துகொண்டார். அது ஆகாப் அதைச் செய்தான் என்பதாயிருக்கவில்லை, அது யேசபேல் சிங்காசனத்திற்கு பின்னேயிருந்து, அதனை கட்டுப்படுத்தினதாயிருந்தது. அந்த யேசபேல் முறைமையே இங்கே தீங்கு செய்யப் போவதாயுள்ளது. அவன் செய்ய வேண்டியதாயிருக்கிறது. ஏனென்றால் அவன் அவளை மணம்புரிந்திருக்கிறான். அவன் அதை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. அவன் அதைச் செய்ய வேண்டியதாயிருக்கிறது. அவன் அவளை மணம்புரிந்திருக்கிறான். ஓ, என்ன! ஜனங்களே வேதம் என்ன செய்துகொண்டிருக்கிறது என்பதை உங்களால் காண முடியவில்லையா? நாம் இங்கே இந்தக் கடைசி நாட்களில் எங்கே நின்றுகொண்டிருக்கிறோம் என்பதை உங்களால் காணமுடியவில்லையா? 135 இப்பொழுது உயிர்த்தெழுதலுக்குப் பிறகு மனிதனைக் கவனித்துப் பாருங்கள். அந்தப் பரியாசமான வழக்கு விசாரனையானது, சபையானது என்னச்செய்யும் என்பதை அறிந்து, சபையினண்டை அது திருப்பிவிடப்பட்டது. இந்த சேவகர்கள் பயமடைந்து ஓடினபோது, என்ன சம்பவித்தது? சபையானது இந்தச் சேவகர்களை கூலிக்கு அமர்த்தி, “அவருடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து அவரைத் தூக்கிச் சென்றுவிட்டனர்” என்று கூறுவதற்குப் பணம் கொடுக்கப்பட்டது. 136 ஆகையால் நான் உங்களைக் கேட்க விரும்புகிறேன். சீஷர்கள் இராத்திரியிலே வந்து அவரைக் கொண்டு சென்றுவிட்டிருந்தால், ஏன் அவர்மேல் இருந்த வஸ்திரத்தை அவர்கள் கொண்டுச் செல்லவில்லை? அவர்கள் திருடர்களாய் இருந்திருந்தால், களவாடியிருந்தால், பின்னை ஏன் அவர்கள் வஸ்திரத்தையுங்கூடக் கொண்டு செல்லவில்லை? ஆனால் அங்கேயே அவருடைய முகத்தின்மேல் சுற்றியிருந்த சீலையோடு சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய சரீரத்தின்மேல் சுற்றியிருந்த சீலையும் அங்கேயே கிடந்தது. அவர் அவை எல்லாவற்றினூடாகவும் கடந்து உயிர்த்தெழுதலுக்கு சென்றுவிட்டார். ஒரு காரியமும் தொந்தரவுப் படுத்தவில்லை; அந்தவிதமாகவே அவர் வைக்கப்பட்டிருந்தார். அவர் அதேவிதமாகவே வைத்து வைக்கப்பட்டிருந்தார், ஆனால் அவர் சீலையிலிருந்து வெளியே புறப்பட்டுச் சென்றுவிட்டிருந்தார். ஆமென். 137 பாருங்கள், ஆனால் மீண்டும் ஒரு பரியாசமான வழக்கு விசாரனை, ஒரு—ஒரு—ஒரு பொய்யானக் குற்றச்சாட்டு. காரணம் ஏன்? அவர்கள் பலவந்தம்பண்ணப்பட்டிருந்தனர். அவர்கள் ஒரு தீர்மானத்தைச் செய்ய பலவந்தம்பண்ணப்பட்டனர். மனிதன் ஒரு தீர்மானத்தைச் செய்ய வேண்டியதாயிருந்தது. சபையானது, “அவர் மரித்தோரிலிருந்து எழுந்துவிட்டார்”, அல்லது “அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவில்லை” என்று கூற வேண்டியதாயிருந்தது. ஆமென் 138 ஓ, நாம் இப்பொழுது நம்முடைய செவித்திறனின் பேரில் புரிந்து கொள்வோமாக, ஆவிக்குரியப்பிரகாரமான செவித்திறனுதவியை நீங்கள் உள்ளே பொருத்திக் கொள்ளுங்கள். கவனியுங்கள், அது அந்த அதேக் காரியத்திற்கே வந்துள்ளது. மனிதர் நம்முடைய கூட்டங்கள் போன்றவற்றை பின் தொடர முயன்றுகொண்டு…கூறிக் கொண்டிருக்கின்றனர். நான் சபைகளிலும் கூட கேள்விப்பட்டிருக்கிறேன், அதாவது கிறிஸ்துவின் சபையார் என்றழைக்கப்படுபவர், “நான் ஒரு உயிர்த்தெழுதலின் ஓர் அடையாளத்தைக் காண்பிக்கக்கூடிய எந்த மனிதனுக்காகவும் அல்லது சுகமடைந்துள்ள ஒரு மனிதனுக்காகவும் ஆயிரம் டாலர்கள் கொடுப்பேன்” என்று கூறியுள்ளனர். நான் மருத்துவர்களை அவர்களண்டைக்குக் கொண்டு சென்றிருக்கிறேன். அவர்கள் அதையும்கூட நம்ப மனதில்லாதிருக்கின்றனர். ஏன்? அவர்கள் ஒரு தீர்மானத்தைச் செய்ய பலவந்தம்பண்ணப்படுகின்றனர். அவர்கள் தங்களைத்தாமே வெளிப்புறத்தில் காயீனோடும், மார்க்கரீதியான கோட்பாடுகளோடு முத்திரையிட்டிருக்கின்றனர். உண்மையான சிறு தேவனுடைய சபையானது சிறுபான்மையாயிருக்கிறது. ஆனால் எப்பொழுதுமே அந்தவிதமாகவே செயல்பட்டது, ஆனால் அவள்…எப்படியாய் அவள் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளாக இருளின் காலங்களில் பாடுபட்டாள்? 139 அவர்களோ, “ரோம சபையாயிற்றே!” என்று கூறுகிறார்கள். நிச்சயமாகவே, ரோம சபையே முதல் பெந்தேகோஸ்தே சபையாய், கத்தோலிக்க சபையாய் இருந்தது. அது பெந்தேகோஸ்தேவில் துவங்கினது, ஆனால் அதன்பின்னர் அது ஸ்தாபனமாக விருப்பங்கொண்டது. 140 இந்தப் பெந்தேகோஸ்தே சபையானது மற்றொரு இரண்டாயிரம் ஆண்டுகளாக நிற்குமானால், அவைகள் இப்பொழுது உள்ள கத்தோலிக்க சபையைக் காட்டிலும் மோசமானதாயிருக்கும். அவைகள் ஒவ்வொரு காரியத்திலிருந்தும் அவ்வளவு தூரமாய் விலகிச் சென்று கொண்டிருக்கின்றனவே! அன்றொரு நாள் என்னிடம், “நீர் இந்த இடத்திற்கு வந்தால், பெண்கள் அலங்கரித்துக்கொள்ளும் முக ஒப்பனையின் பேரிலும், அவர்கள் குட்டைக்கால்சட்டைகளை அணிந்துகொள்ளக் கூடாது என்பதன் பேரிலும் நீர் பிரசங்கிக்கப் போகிறீரா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நானோ, “அப்படியானால் என்னைக் கேட்க வேண்டாம், வேண்டாம் ஐயா. என்னை வரும்படி கேட்டுக்கொள்ளாதீர்கள்” என்று கூறிவிட்டேன். “நீர் அதைப் பிரசங்கிக்கப் போகிறீரோ?” அவர்கள், “அதைக் குறித்த உம்முடைய வேலை என்ன?” என்றுகூட கேட்டனர். அதற்கு நானோ, “அது கர்த்தருடைய வேலையாயிருக்கிறது. நான் அவருடைய வேலையைக் குறித்தே இருக்கிறேன்” என்றேன். அது முற்றிலும் சரியே. முற்றிலுமாக! ஆகையால் நான்…வெறுமெனக் கூறினேன்… “அதற்காக நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இன்றைக்கு மற்றக் காரியங்கள் இருக்கவில்லையா?” நானோ, “ஆம், ஆனால் அவர்கள் அதைச் செய்யட்டும், அப்பொழுது நாங்கள் மற்ற காரியங்களின்பேரில் பேசுவோம். நீங்கள் பாருங்கள். புரிகின்றதா? பாருங்கள், நாம்—நாம்—நாம் அஸ்திபாரம் போட்டு வைப்போமாக”, என்றேக் கூறினேன். 141 அதுதான் காரியமாயுள்ளது. நீங்கள் இன்னமும் அடியில் இருக்க வேண்டியதாயிருக்கும்போது, நீங்கள் ஏணியின் உச்சிமேல் குதித்து ஏற முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். புரிகின்றதா? இங்கே கீழே இருந்து துவங்குங்கள், சுத்தப்படுத்தி, சரியாக துவங்குங்கள், அப்பொழுது நாம் அதன்மேல் கட்ட முடியும். வேறுவிதமாகக் கூறினால், உங்களால் கட்ட முடியாது. ஏனென்றால் கிறிஸ்துவின் மூலக் கோட்பாடுகளின் மேல் கட்டப்பட்டிராத எந்த அஸ்திபாரமும் விழுந்துவிடும். வேதமோ, அது, “ஒரு ஸ்திரி ஒரு புருஷனுடைய உடையைத் தரிப்பது அருவருப்பாயிருக்கிறது” என்று கூறியுள்ளது. அது ஒரு துணுக்கு அளவுகூட மாறியிருக்கவில்லை. தேவன் மாறியிருக்கவில்லை. அவர் நித்தியமானவராய் இருக்கிறார். அவருடைய நேற்றைய சிந்தனைகள் இன்றைக்கும் மாறாமல் அதேவிதமாகவே இருக்கின்றன, என்றென்றைக்கும் அவ்வண்ணமேயிருக்கும். அவருடைய ஆவியானது நேற்றும் இன்றும் என்றும் மாறாததாயிருக்கிறது. அவருடைய கிரியைகள் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவைகளாயிருக்கின்றன. அவருடைய மீட்பு நேற்றும் இன்றும் என்றும் மாறாததாயிருக்கிறது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அதற்கு சுற்றிக்கொண்டு செல்லும் வழியேக் கிடையாது. இப்பொழுது புசிப்பதாலே தெரியும் பணியாரத் திறம். நாம் அதை அறிந்துள்ளோம். அது சரிதானே? அது அவ்வாறு இருந்ததை தேவனேக் கூறினார். 142 மனிதன் ஒரு தீர்மானத்தைச் செய்ய பலவந்தம்பண்ணப்பட்டான். கிறிஸ்துவின் நாட்களில் அவர்கள் முதலில் என்னதிற்கு பலவந்தம்பண்ணப்பட்டனர்? என்ன செய்யும்படி அவர்கள் பலவந்தம்பண்ணப்பட்டனர்? அவர்கள் முதலில் அவரை ஏற்றுக்கொள்ள பலவந்தம்பண்ணப்பட்டனர். அவர் மேசியாவாயிருந்தார் என்ற தம்முடைய அடையாளத்தையும், தம்முடைய முத்திரையையும், அவர் அவர்களுக்குக் காண்பித்திருந்தாரே! அவர் அதை எப்படிக் காண்பித்தார்? அவர் என்ன செய்வார் என்று வேதம் கூறியிருந்ததோ சரியாக அதன் மூலமாகவேக் காண்பித்தார். அவர் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தார். அவர் அவர்களுடைய சிந்தையில் இருந்த நினைவுகளைப் பகுத்தறிந்தார். அவர்களோ, “அவர் ஒரு பிசாசாய், பெயல்செபூலாய் இருக்கிறார்” என்றே கூறினார். அவர்கள் ஒரு தீர்மானத்தைச் செய்ய பலவந்தம்பண்ணப்பட்டனர். அவர்களால் அதை நீண்ட நேரமாக தீர்மானிக்காமல் காத்திருக்க முடியவில்லை. 143 பெந்தெகோஸ்தே சபையினாலோ அல்லது பாப்டிஸ்டினாலோ அல்லது பிரஸ்பிடேரியனாலோ ஒருபோதும் முடியவில்லையே! பரிசுத்த ஆவியானவர்…கிறிஸ்துவானவர் எழுந்துள்ளாரே, அவர் சபையில் இருக்கிறார். அவர்களோ, “இந்த மனிதன் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கிறார். நீங்கள் பரிசுத்த ஆவிக்காக அந்நிய பாஷைகளில் பேச வேண்டியதில்லையென்றும், அது போன்ற காரியங்களை, அதுவல்ல அதற்கு ஆரம்ப அத்தாட்சி என்று அவர் நினைக்கிறார். அவர் ஸ்திரீகளை நம்முடைய பெண்மனிகள் எல்லோருமே தங்களுடைய முடியை இந்த விதமாக பின்னியிருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதற்கு இதனோடு எவ்வித சம்மந்தமும் கிடையாது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறுகின்றனர். அப்படியானால் தேவன் இதுதான் சத்தியம் என்று ஏன் ரூபகாரப்படுத்திக் கொண்டிருக்கிறார்? அது எங்கே இருக்கிறது என்பதைக் கண்டறியுங்கள். அவர் மேசியாவாயிருந்தார் என்று அவர் அவர்களுக்குக் காண்பித்தபோது, அவர்கள் அவருடைய மேசியாத் தன்மையைப் புறக்கணித்தனர். அவர்கள் ஏதோ ஒரு காரியத்தைக் கூற பலவந்தம்பண்ணப்பட்டனர். 144 இன்றைக்கும் அவர்கள் அதேவிதமாகவே அதைப் புறக்கணித்துவிட்டு, அதற்கு ஆதரவளிக்காமல், அதிலிருந்துத் தங்களுடைய கரங்களைக் கைகழுவிக்கொண்டிருக்கிறார்கள். தீர்மானமே அவர்கள் மேல் பலவந்தம்பண்ணப்பட்டிருக்கிறது. மத்தியப் பாதை இல்லையே! நாம் முடிவு நேரத்தில் இருக்கிறோம். மனிதனோ அதை ஏற்றுக்கொள்ள அல்லது அதைப் புறக்கணிக்க பலவந்தம்பண்ணப்படுகிறான். நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அதைப் புறக்கணிக்க வேண்டும். அது அமெரிக்காவின் மேல் பலவந்தம்பண்ணப்பட்டிருக்கிறது. அது பிரான்ஹாம் கூடாரத்தின் மேல் பலவந்தம்பண்ணப்பட்டிருக்கிறது. அது பெந்தேகோஸ்துக்கள் மேலும், மெத்தோடிஸ்டுகள் மேலும் பலவந்தம்பண்ணப்பட்டிருக்கிறது. அது எங்கும் பலவந்தம்பண்ணப்பட்டிருக்கிறது. நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது அதை விட்டுவிட வேண்டும். தேவன் தம்முடைய அடையாளங்களைக் காண்பித்து, அவருடைய ஊழியத்தை ஆதரித்து, அவர் என்னவாயிருக்கிறார் என்பதை சரியாகக் காண்பித்து, அவர் தேவனாயிருக்கிறார் என்று நிரூபிப்பதன் மூலம் அவருடைய வார்த்தையை உறுதிபடுத்தியிருக்கிறார். இயேசு, “நான் என் பிதாவின் கிரியைகளை செய்யாதிருந்தால், அப்பொழுது என்னை விசுவாசிக்காதீர்கள்” என்றார். அது உண்மை. “ஆனால் நான் என் பிதாவின் கிரியைகளைச் செய்வேனேயானால், அப்பொழுது கிரியைகளை விசுவாசியுங்கள்.” அங்குதான் காரியம். பாருங்கள், அவர்களால் முடியவில்லை, அவர்கள்—அவர்கள்—அவர்களால் அதில் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை, ஏனென்றால் அது உண்மையாயிருந்தது. பின்னை ஏன் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை? ஸ்தாபனத்தின் காரணமாகவே, அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஆகையால் அவர்கள் இப்பொழுது ஒரு பலப்பரீட்சை செய்யும்படி பலவந்தம் பண்ணப்பட்டிருக்கின்றனர். 145 ஒரு சில நாட்களுக்கு முன்னர் ஒஹையோவில், அதே சபைகளே என்னை ஒரு வருடத்திற்கு ஆதரித்தனர்; ஏனென்றால் நான் அதைத் தாக்கினேன், அது தவறாயிருந்தது என்று காண்பித்தேன், அவைகளில் ஒன்றுமே சரியாய் இல்லாமலிருந்தது, ஆனால் ஒரு சபை, சகோதரன் சில்வான் ஒத்துழைப்புக் கொடுக்க மனதாயிருந்தார். நானோ, “நான் இன்னமும் அதேக் கரத்தை உடையவனாய், நான் இன்னமும் அதேப் பாதத்தை உடையவனாய், நான் இன்னமும் அதேச் செய்தியை உடையவனாய், நான் இன்னமும் சகோதரன் பிரான்ஹாமாய் இருக்கிறேன். என்னோடு உள்ள காரியம் என்ன?” என்றேன். அது நானல்ல, பரிசுத்த ஆவியானவரே இன்னமும் பேசுகிறார், பரிசுத்த ஆவியானவரே இன்னமும் அதேக் கிரியைகளைச் செய்கிறார். அவர் இன்னமும் அதைக் காண்பிக்கிறார். ஆனால் நீங்களோ பலவந்தம் பண்ணப்படுகின்றீர்களே! அது உண்மை, அவர்கள் பலவந்தம்பண்ணப்பட்டிருக்கிறார்கள். மகத்தான பரிசுத்த ஆவியானவரே அவர்களின் மத்தியில் விழுந்து, வார்த்தைகளைப் பேசி, அப்பொழுது அவர் கூறினக் காரியங்களைக் கூறுகிறார். ஆகையால் அவர்கள்…இன்னமும்… 146 அன்றொரு நாள் இங்கே கலிபோர்னியாவில் பாருங்கள், என்னால் அதை இங்கே கண்டறிய முடியும் என்று நான் எண்ணுகிறேன். இதோ அது உள்ளது. நான் காலைச்சிற்றுண்டி அருந்த கிளிப்டனுடைய சிற்றுண்டி சாலையில் இருந்தேன். அங்கே ஒரு பாப்டிஸ்டு சகோதரன்…நான் சபைகளைச் சின்னாபின்னமாக குற்றப்படுத்தியப்பிறகு, அதாவது அவர்கள் எப்படி பொல்லாங்கு செய்து கொண்டிருந்தனர் என்பதையும், அவர்கள் செய்துகொண்டிருந்தக் காரியங்களையும், தேவனைப் புறக்கணிப்பதையும் அவர்களிடமே கூறியிருந்தேன். அப்பொழுது இந்தப் பாப்டிஸ்டு சகோதரன் தன்னுடையக் கரங்களை என் மீது போட்டு ஜெபிக்கும்படி இங்கு மேலே வந்தார். அவர் வந்தபோது, அவர் அந்நிய பாஷைகளில் பேசுவதுபோலப் பேசத் தொடங்கினார். அவர்…இப்பொழுது, அவர் ஒரு பாப்டிஸ்டாய் இருந்தார், அதைக் குறித்தோ அவர் ஒரு பாப்டிஸ்டாய் இருந்தார், அதைக் குறித்தோ ஒன்றுமே அறியாதிருந்தார். அவர் பேசின…அவர் சொன்னார்… 147 அப்பொழுது லூசியானாவிலிருந்து வந்த ஒரு பெண்மணி அங்கே பின்னால் உட்கார்ந்துகொண்டிருக்க, ஒரு பிரெஞ்சு மனிதனோ, “அது அந்நிய பாஷையாயிருக்கவில்லை, ஒரு பிரெஞ்சு மொழியாய் இருந்தது” என்றார். இதோ சுவிட்சர்லாந்திலிருந்து வந்திருந்த மற்றொரு பெண்மணி அமர்ந்திருந்தாள், லூஸ்ஸார்ன் (Luzern) என்னுமிடத்தில் பிரெஞ்சு மொழி பேசுகின்றனர், (நான் அங்கு சென்றிருந்திருக்கிறேன்) இவள் அதைச் சரியாக மொழிபெயர்த்தாள் என்று அவள் கூறினாள். அப்பொழுது ஒரு வாலிப மனிதன் அங்கே நடந்து வந்தார், (நான் அவரை ஒருபோதும் கண்டதில்லை, எவருமே அவரைக் கண்டதேயில்லை), அவர் ஐ.நா.விற்கான பிரெஞ்சு மொழி மொழிபெயர்ப்பாளராயிருந்தார், அவரும், “அது முற்றிலும் சரியாயிருக்கிறது” என்றார். 148 இந்த மனிதன் கூறுகிறார், இந்த மனிதனை நீங்கள் அறிவீர்கள். நான் இன்னும் ஒரு நிமிடத்தில் அவருடையப் பெயரைத் தெரிவிப்பேன். அவருடைய பெயர் ஹென்றி என்பதாயிருந்தது. அவருடைய கடைசிப் பெயரை இன்னும் ஒரு நிமிடத்தில் கூறிவிடுவேன், அது இங்கே எழுதி வைக்கப்பட்டுள்ளது என்றே நான் நினைக்கிறேன். எனக்குத் தெரியவில்லை. அது வர்த்தகப் புருஷர்களுடைய சத்தம் என்ற இதழில் உள்ளது, அது இருக்கவில்லையா? ஆனால் அவர்…ஓ, ஆம், “டானி ஹென்றி.” இப்பொழுது அது…அந்த சினிமா நட்சத்திரத்தைக் குறித்து என்னால் நினைவிற்கு கொண்டு வரமுடியவில்லை. [யாரோ ஒருவர் “மார்லின் மன்றோவா?” என்று கூறுகிறார்.—ஆசி.] இல்லை, அது மார்லினாயிருக்கவில்லை. மேடா, என்ன…? ஜேன் ரஸ்ஸல், ஜேன் ரஸ்ஸ்லினுடைய உடன்பிறந்தவரின் மகன். அவர் மேலே வந்து எனக்கு விளக்கவுரையளிக்க தன்னுடையக் கரங்களை என் மீது போட்டு, இதோ அவர் கூறின வார்த்தைகள் என்று கூறினார். அவர், “அந்தச் செய்தி வெளிப்படுத்தின விசேஷ புத்தகத்திற்குள் சேர்க்கப்பட முடியும்” என்று கூறினார். மேலும், “அது சரியே” என்று கூறிவிட்டு, அதன்பின்னர் அவர், “சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நான் உங்களுக்காக ஜெபிக்க விரும்புகிறேன்” என்றார். அப்பொழுது அவர் தன்னுடையக் கரத்தை என் மீது போட்டு, பிரெஞ்சு மொழியில் பேசத் துவங்கினார், ஆனால் அதைக் குறித்து ஒன்றுமே அறியாதிருந்தார். 149 இதுவே அந்த மொழிபெயர்பாயிருந்தது, அவர் அதை எழுதி வைத்திருந்தது ஆதாரச் சான்றாக படிவத்தில் கொண்டு வரப்பட்டது. அது, “நான், விக்டர். டி—டெள—க்—ஸ்” பிரெஞ்சு பெயர், “நான் ஒரு பிரெஞ்சு மனிதன்,” “நான் அங்கிருந்த போது டானி” நீங்கள் அதை என்னவென்று அழைக்கிறீர்கள், “டானி ஹென்றி, என்பவர் இந்தச் செய்தியில் சகோதரன் பிரான்ஹாமுக்கு பிப்ரவரி மாதம், பதினோராம் தேதியிலே, 1961-ல் கூறினார்” என்றே எழுதப்பட்டிருந்தது. அவர் லாஸ் ஏஞ்சல்ஸ் 64-ல் உள்ள 809 வடக்கு இராஜாக்கள் சாலையில் வசிக்கிறார். அதை வாசிக்கையில் கவனியுங்கள்-கவனியுங்கள். நீ நெருக்கமான பாதையைத் தெரிந்து கொண்டபடியால்… இப்பொழுது, நீங்கள் பாருங்கள், அது சரியாயிருக்கிறது என்று நான் அறிந்துகொள்கிறேன். அதனுடையப் பகுதி என்னிடத்தில் இல்லை. நீ நெருக்கமான பாதையையும், கடினமான வழியையும் தெரிந்து கொண்டிருக்கிறாய்; நீ உன்னுடைய சொந்தத் தெரிந்து கொள்ளுதலின்படி நடந்துள்ளாய். 150 பாருங்கள், அது சரியாயிருக்கிறது என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. பாருங்கள், நீயாகவே அதைத் தெரிந்து கொண்டாய். மோசே தன்னுடைய சொந்த தெரிந்து கொள்ளுதலைச் செய்தான். அவன் அதைச் செய்திருக்க வேண்டியதில்லை. நானும் இந்தப் பாதையைத் தெரிந்துகொண்டிருக்க வேண்டியதில்லை. அவர்களில் சிலர் பெற்றுள்ளதைப் போன்று அதோ அந்தப் பெரியக் கட்டிடங்களை உடையவனாயிருந்திருக்க முடியும். என்னாலும் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பியிருக்கக் கூடும். ஆனால் அவர்களுடைய அஸ்திபாரத்தையே சின்னாபின்னமாக்கும்போது, யார் என்பேரில் ஆதரவு அளிப்பார்? ஆனால் ஒரு காரியம், நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு எவருடைய பாதத்திற்கும் தாழப் பணிய வேண்டியதில்லை. அது உண்மை. ஆம், வேதம் கூறுகிறதையே நான் பிரசங்கிக்கிறேன். நான் அவர்களுடைய ஸ்தாபனங்களோடு ஒப்புரவாக வேண்டியதில்லையே, ஏனென்றால் நான் அவர்களுக்குச் சொந்தமானவன் அல்ல. நான் தெரிந்துகொள்ளுதலைச் செய்துவிட்டேனே. அவர் அங்கே, “நான் மோசேயோடு இருந்ததுபோல, நான் உன்னோடு இருப்பேன்” என்று கூறினது போல சரியாக அதேவிதமாகவே இருக்கிறதே. அவர் மோசேக்கு நிரூபிக்கும்படியாக இரண்டு அடையாளங்களின் உறுதியை கொடுத்தார். பாருங்கள், மோசே தன்னுடையச் சொந்த தெரிந்துகொள்ளுதலைச் செய்தான். எனவே அது அதனைப் புரிந்துகொள்ள சுலபமாயிருக்கிறது. பாருங்கள், “நீ தெரிந்துகொண்டாயே…” நீ நெருக்கமான பாதையைத் தெரிந்துகொண்டுள்ளக் காரணத்தால், கடினமான வழியைத் தெரிந்துகொண்டபடியால்; நீ உன்னுடைய சொந்த தெரிந்துகொள்ளுதலின்படியே நடந்துள்ளாய். இங்கே இப்பொழுது, இப்பொழுது இந்த மனிதன், இப்பொழுது அது எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதைக் கவனியுங்கள், அது அந்நிய மொழியின் வார்த்தைகளில் எழுதப்பட்டுள்ளதை உங்களால் காண முடியும். நீ சரியானதைத் தெரிந்தெடுத்து, சரி நுட்பம் வாய்ந்த தீர்மானத்தைச் செய்திருக்கிறாய், அது என்னுடைய வழியாயிருக்கிறது. தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக! அவர் “அது என்னுடைய வழியாயிருக்கிறது” என்றார். இந்தப் பெருஞ்சிறப்பு வாய்ந்த தீர்மானத்தின் காரணமாக, பரலோகத்தின் ஒரு மிகப்பெரிய பகுதி உனக்குக் காத்திருக்கிறது. அவர் அந்தத் தரிசனத்தைக் குறித்து ஒருபோதும் கேட்டதேயில்லை, நீங்கள் பாருங்கள், இதைக் குறித்தான அந்த தரிசனம்…உங்களுக்கு நினைவிருக்கும்… பரலோகத்தின் மிகப்பெரிய பகுதி உனக்குக் காத்திருக்கிறது. என்னே ஒரு மகிமையான தீர்மானத்தை நீ செய்திருக்கிறாய்! புரிகிறதா? இது தன்னிலையிலேயே… இப்பொழுது இதோ உள்ளது, இங்கிருந்து தொடர்கிறது, எனக்குப் புரியவில்லை. இது அதனுடையதிலே…அது (அதைச் சுற்றிப் பெரிய அடைப்புக் குறிகள் உள்ளன)…அது தெய்வீக அன்பில் ஒரு வல்லமையான வெற்றியை அளித்து, நிறைவேறச் செய்யும். 151 எனக்கு, “இது நிறைவேறச் செய்யும்” என்பது எதைப் பொருட்படுத்துகிறது என்றுத் தெரியவில்லை. ஒருவேளை இந்நாட்களில் ஒன்றில் அந்தச் சிறு கூடாரத்தில், அப்பால் அமைந்துள்ளதில், அவர் அதைத் தெரியப்படுத்துவார். 152 ஏன்? நாம் அதைச் செய்ய வேண்டியிருந்தக் காரணத்தினால் அல்ல. அந்தக் காரணத்தால் அல்ல, அது—அது, இது—இது ஒரு சுலபமான வழியாயிருக்கிறது என்ற காரணத்தினால் அல்ல. நீங்கள் புகழ்பெற்றவர்களாயிருக்க முடியும், ஒவ்வொருவரும் உங்களை முதுகின்மேல் தட்டிக் கொடுத்திருக்கலாம், வானொலி அல்லது தொலைக்காட்சி போன்ற நிகழ்ச்சிகளுக்காக எல்லாவிடங்களிலிருந்தும் உங்களுக்கு பணம் பெருக்கெடுத்து வந்திருக்கலாம். அவர்கள் இதை எடுத்து, இதனைத் தொலைக்காட்சி வழியாக, நிகழ்ச்சியாய் ஒலிபரப்பலாமே என்று அவர்கள் கூறினர். தேவனுடையக் காரியங்களை எடுத்து, அவைகளை உலகத்தின் அப்பேர்ப்பட்ட இழிவானக் காரியத்தோடு அவைகளை ஒலிப்பரப்புவதை நான் சரியென்று எண்ணுவதில்லை. நான் இந்த எல்லா கூப்பாடுபோட்டு ஆர்ப்பரிக்கும் காரியத்திலும் இல்லாத ஏதோ ஒன்றை உருவாக்குவதையும் சரியென்று எண்ணுகிறதில்லை. நான் அதை எந்தத் தலையீடுமின்றி செய்யும்படி காத்திருப்பதிலேயே நம்பிக்கைக் கொண்டுள்ளேன். தேவன், அவர் தேவனாயிருக்கிறார், அவர் என்னச் செய்ய விரும்புகிறாரோ, அதனோடு அவர் அதைச் செய்யட்டும். நாம் ஊழியக்காரர்களாயிருக்கிறோம், கர்த்தரைச் சேவித்து தேவன் கூறினவிதமாக அப்படியே செய்வோம். இதைக் குறித்த எல்லாவற்றின் மத்தியிலும் மனிதன் ஒரு தீர்மானத்தை எடுக்க பலவந்தம்பண்ணப்படுகிறான். 153 கிறிஸ்துவானவர் பூமியின் மேலிருந்தபோது, அவர்கள் ஒரு தீர்மானத்தைச் செய்ய பலவந்தம்பண்ணப்பட்டனர், ஏனென்றால் அவர் மேசியாவாயிருந்தார் என்பதை அவர் அவர்களுக்கு நிரூபித்தார். அது சரிதானே? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] அவர்கள் பலவந்தம்பண்ணப்பட்டனர். அவர்கள் அவரை என்னவென்று அழைத்தனர்? “பெயல்செபூல், ஒரு குறிசொல்பவர்” என்றழைத்தனர். அதன் பின்னர் ஈஸ்டரிலே தேவன் தம்முடைய அடையாளத்தினால், முத்திரையினால், தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதை, அவர் அதை நிரூபித்தார். இந்த மற்றெல்லா காரியங்களுக்குப் பிறகும், அவர் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரே! 154 இப்பொழுது சபையானது பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று உரிமை கோருகிறது, அது நீங்கள் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறீர்கள் என்பதற்கு, அதைக் குறித்த தேவனுடைய நிரூபணமாயிருக்கிறது, ஏனென்றால் பழையக் காரியங்கள் ஒழிந்துபோயின, காரியங்கள் உங்களுக்குப் புதிதாக மாறியிருக்கின்றன. அது உயிர்த்தெழுதலின் தேவனுடைய நிரூபணமாயிருக்கிறது. நீங்கள் வழக்கமாயிருந்ததைப் போல இப்பொழுது நீங்கள் இருக்கவில்லை, நீங்கள் மாற்றப்பட்டிருக்கிறீர்கள்! நீங்கள் வழக்கமாக தேவனுடைய வார்த்தையை சந்தேகித்து வந்தீர்கள்; தேவனுடைய வார்த்தையானது ஒவ்வொரு வார்த்தையையும் பேசுகிறபோது, நீங்கள், “ஆமென்” என்கிறீர்களே! பாருங்கள், ஏதோக்காரியம் உங்களுக்குச் சம்பவித்துள்ளது. அதுவே உயிர்த்தெழுதலின் முதலாம் ரூபமாய், உட்புறத்தில் உள்ள ஆவியாயுள்ளது. 155 இப்பொழுது பெந்தேகோஸ்தே, பெந்தேகோஸ்தேவிற்குப் பிறகு, இந்த ஜனங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டபோது, “அது தேவனுடையதாயிருக்கிறதா அல்லது அது தேவனுடையதல்லாததாய் இருக்கிறதா?” என்ற ஒரு தீர்மானத்தைச் செய்ய மனிதன் மீண்டும் பலவந்தம்பண்ணப்பட்டான். அவர்கள் என்னக் கூறினர்? “அவர்கள் மதபேதமுள்ளவர்கள். அது பைத்தியமாயிருக்கிறது. அவர்கள் வஞ்சகத்தில் இருக்கின்றனர்” அக்கிரிப்பாவுங்கூட பவுலை, “நீர் பைத்தியக்காரனாயிருக்கிறீர்” என்றான். பைத்தியம் என்பது “கிறுக்குப் பிடித்த மனநிலை மாற்றம்” என்று பொருள்படுகிறது. 156 பவுல் என்ன சொன்னான்? “மதபேதம் என்றழைக்கப்படுகின்ற வழியில், அந்தவிதமாகவே நான் தேவனை ஆராதிக்கிறேன்.” அவன் ஈஸ்டர் முத்திரையை உடையவனாயிருந்தானே! ஏதோக் காரியம் சம்பவித்தபோது, அவன் அங்கே இருந்திருந்தான். நான் இந்தக் காலையில் அவனோடு கரங்களைச் சேர்த்து, இருதயத்தில், “பவுலாயிற்றே!” என்று கூறுவதற்கு மகிழ்ச்சியடைகிறேன், ஏன்? நாம் அதே வார்த்தையை பிரசங்கிக்க வேண்டும். அவர்கள் வேறுவகையான வார்த்தைகளில் ஞானஸ்நானம்பண்ணப்பட்டிருந்த பிறகு, பவுல் அவர்கள் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று கட்டளையிட்டான். அவன், “வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறேதேனும் காரியத்தைக் கூறியிருந்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்” என்றான். அவன் தெய்வீக சுகமளித்தலைப் பிரசங்கித்தான். அவன் உயிர்த்தெழுதலின் வல்லமையைப் பிரசங்கித்தான். அவன் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று பிரசங்கித்தான். தரிசனங்களும், வல்லமைகளும், ஆவியின் வெளிப்படுத்துதல்களும் அவனைப் பின்தொடர்ந்தன. 157 நீங்கள் அதே செய்தியையும், அதேக் காரியத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும். ஒரு வேத சாஸ்திரத்தை அல்ல, சில சபை செயல்முறைகளையல்ல; ஆனால் தேவனுடைய வல்லமையை, பெந்தேகோஸ்தேயையும் மற்றும் அதே முத்திரையும் பெற்றுக்கொள்ள வேண்டும். பரிசுத்த ஆவியின் முத்திரை. தேவனுடைய உண்மையான ஈஸ்டர் முத்திரை ஒரு மனிதனுடைய நம்பிக்கையூட்டுவதற்குரிய ஆதாரச் சான்றுகளாயிருக்கின்றன. சரியே! அது உங்களுடையப் பிறப்புரிமையாயிருக்கிறது. அது நீங்கள் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறீர்கள் என்பதற்கு ஒரு நம்பிக்கையூட்டும் ஆதாரச் சான்றாயுள்ளது. தேவன் கர்த்தராகிய இயேசுவிற்கு செய்தவிதமாகவே, அவர் உங்கள் மூலமாக கிரியை செய்து கொண்டிருக்கிறார், ஏனென்றால் அது உங்களுடைய நம்பிக்கையூட்டும் ஆதாரச் சான்றாயுள்ளது. “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும். நீங்கள் உலகமெங்கும் போய்”, ஈஸ்டருக்குப் பிறகு, பெந்தேகோஸ்தேவிற்குப் பிறகு, உயிர்த்தெழுதலைக் குறித்த ஈஸ்டர் முத்திரை அளிக்கப்பட்ட பிறகு, அது என்னவாயிருந்தது? கிறிஸ்துவுக்குள்ளிருந்து எழுப்பின ஜீவனானது வந்து அவருடைய சபையை உயிர்ப்பித்திருக்கிறது, அது அடையாளங்களைச் செய்யும்படி சபையில் ஜீவிக்கிறது. 158 இது உங்களுடைய தலைக்கு மேலேச் செல்லவில்லை என்று நான் நம்புகிறேன். நான் பொருட்படுத்திக் கூறும் சந்தோஷத்தை நீங்கள்—நீங்கள் பெற்றுக்கொள்ளாதபடிக்கு நான் உங்களை அவ்வளவு நேரமாக பிடித்து வைத்துக்கொண்டிருக்கவில்லை என்றே நான் நம்புகிறேன். இது கடமையாயுள்ளதையும், ஜனங்களாகிய நீங்கள் நின்றுகொண்டிருப்பதையும் நான் அறிவேன். தயவு செய்து, அப்படியே, உங்களால் முடிந்தால் வெறுமென ஒரு சில நிமிடங்கள் இருக்க முயற்சியுங்கள். பாருங்கள், நண்பனே, நீ இந்த மையக் கருத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் அந்தச் சிறு மூலைக்கல்லை அங்கே மூலையில் நாட்டினது முதற்கொண்டே இங்கே முப்பத்தியொரு வருடங்களாக என்ன இருந்து வருகிறது என்பதையும், என் இருதயத்தில் என்ன உள்ளது என்பதையும் நீங்கள் காணவேண்டும் என்று நான் விரும்புகிறேன். பாருங்கள், சத்தியம் ஒன்று உண்டு, நான் அதற்காக நிற்க முயற்சித்திருக்கிறேன். அதிலிருந்து எல்லாவிதமான காரியங்களும் புறப்பட்டுச் சென்றிருக்கின்றன். அது சத்தியமாய் உள்ளது. ஆனால் அதுவோ எப்பொழுதும் அதேவிதமாகவே இருந்து வருகிறது. 159 நான் மார்ட்டின் லூத்தரைக் குறித்து படித்துக் கொண்டிருந்தேன், அதில், “அவரால் கத்தோலிக்க சபையை எதிர்த்து கண்டன போராட்டம் நடத்தி, அதைக்கொண்டு வெற்றியடைய முடிந்தது என்பதை நம்புவது ஒரு கடினமான காரியமாயிருந்தது. அது ஒரு மகத்தான காரியமாயிருந்தது. ஆனால் மகத்தான காரியம் என்னவெனில், அவருடைய எழுப்புதலைப் பின்தொடர்ந்த மதத்தீவிரவாதத்திற்கு மேலாக அவரால் தன்னுடையத் தலையை நிமிர்த்த முடிந்ததும், வேதாகமத்தில் உண்மையாய் தரித்திருக்க முடிந்ததுமே மிகவும் மகத்தான காரியம்” என்று கூறப்பட்டிருந்தது. தேவன் என்னக் கூறுகிறாரோ அதையேக் கூறுங்கள், வேறெந்தக் காரியத்தையும் கூறாதிருங்கள். அப்படியே அதனோடு சரியாகத் தரித்திருங்கள், சரியான ஒழுங்கில், பிழையற்றத் தேவனுடையத் தீர்மானத்தில் நடவுங்கள். அதற்குப் பதிலாக…தேவன் அது இந்த வழியாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தால், நாம் அதனோடு சரியாகத் தரித்திருப்போமாக. அதுவே அவருடைய தீர்மானமாயிருக்கிறது. ஆமென். ஆம், ஐயா. ஆம், ஐயா. 160 பெந்தேகோஸ்தே முத்திரை என்பது விசுவாசி மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்ற அவனுடைய நம்பிக்கையூட்டும் ஆதாரச் சான்றாயிருக்கிறது, ஏனென்றால் அவன் பெந்தேகோஸ்தே ஆசீர்வாதத்தை, அவருடையக் குமாரனுக்கானத் தேவனுடைய ஈஸ்டர் முத்திரையைப் பெற்றிருக்கிறான். அவர் தம்முடைய முதலாம் குமாரனைப் பரிசுத்த ஆவியினால் முத்தரித்தார். அது உண்மைதானே? உண்மை. அவர் தம்முடைய மற்றெல்லாக் குமாரர்களையும் பரிசுத்த ஆவியினால் முத்தரித்தார். 161 இப்பொழுது முடிவின் நேரம் நெருங்கிக்கொண்டிருக்கிற காரணத்தால், இப்பொழுது இந்த நேரத்திலே நாம் அந்த முத்திரையிடுதலை இங்கே கண்டறிகிறோம். இப்பொழுது ஒரு தீர்மானத்தைச் செய்ய வேண்டிய ஒரு நிலைமைக்கு பலவந்தம்பண்ணப்பட்டிருக்கிற காயீனுடைய குமாரர்களை, குமாரர்களைக் குறித்து நான் எடுத்துரைக்க வேண்டிய ஒரு நிலைமை இங்கே உண்டு. பாருங்கள், அதைச் செய்வது அவர்களுக்கு கடினமானதாயிருக்கிறது, ஏனென்றால் அவர்கள் அதைச் செய்வார்களேயானால், அப்பொழுது அவர்கள் தங்களுடைய ஸ்தாபன உரிமைகளை விட்டுவிட வேண்டியதாயிருக்கும். புரிகின்றதா? பரிசேயர்களும் அவ்வண்ணமே செய்தனர். இயேசுவானவர் மேசியாவாயிருந்தார் என்பதை அவர் நிரூபித்தபோது, பரிசேயர்கள் இயேசுவின் பேரில் ஒரு தீர்மானத்தைச் செய்தனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். பரிசுத்த ஆவியானவர் மதபேதம் என்றழைக்கப்படுகின்ற இந்த வழியை நிரூபித்திருக்கிறபோது, அது பரிசுத்த ஆவியாயிருக்கிறது என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறபோது, மனிதன் ஒரு தீர்மானத்தைச் செய்ய வேண்டியவனாயிருக்கிறான். அவர்கள் அப்படியே செயலற்று நிற்க முடியாது. 162 இங்கே அன்றொரு இரவு நாள் சுகவீனமுள்ள ஒரு பெண்மணிக்காக ஜெபிக்க வெளியே சென்றிருந்தேன். நான் அங்கு சென்றபோது, யாரோ ஒருவர், “பில்லி” என்று கூச்சலிட்டு அலறுவதைக் கேட்டேன். அப்பொழுது நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். அது இங்குள்ள நம்முடைய சகோதரர்களில் ஒருவராய் இருந்தது. இதோ அவர் வருகிறார், ராய் ஸ்லாட்டர். அவர் என்னிடத்திலிருந்து சற்றுத் தூரமாய் இருந்த நீண்ட பொது அறையில் நின்றுகொண்டிருந்தார், அப்பொழுது அவர், “என்னுடைய சகோதரனுடைய மனைவி சுகவீனமாயிருக்கிறாள். எனவே பில்லி, நீர் அவளுக்காக ஜெபிக்க உள்ளே செல்வீரா?” என்று கேட்டார். அதற்கு நானோ, “நிச்சயமாக” என்றேன். 163 அப்பொழுது அங்கு உள்ளே சென்றேன். அங்கு மற்றொரு வயோதிகப் பெண்மணி ஏறக்குறைய அறுபது வயதுடையவள் படுத்துக் கொண்டிருந்தாள், அவளுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தது அவளுடைய குமாரனைப் போன்று காணப்பட்டது. நான் அவர்களிடம் சற்று நேரம் பேசினப் பிறகு, நான் “நாம்…முடியுமா…நாங்கள் ஜெபம் செய்யப் போகிறோம்” என்றேன். அவள், “அந்தத் திரையை இழுத்துவிடுங்களே!” என்றாள். அப்பொழுது நான் “சரி” என்றேன். மேலும் நான், “நீங்கள் ஒரு விசுவாசியா?” என்று கேட்டேன். அதற்கு அவளோ “நான் ஒரு மெத்தோடிஸ்டு” என்றாள். அப்பொழுது நான், “உங்களிடத்தில் நான் கேட்டது அதுவல்லவே” என்றேன். தொடர்ந்து நான், “நீங்கள் ஒரு விசுவாசியா?” என்று கேட்டேன். அதற்கு அவளோ, “நான் ஒரு மெத்தோடிஸ்டு. நாங்கள் மெத்தோடிஸ்டுகள். அப்படியே அந்தத் திரையை இழுத்துக் கொள்ளுங்களே!” என்றேக் கூறினாள். 164 நான் அதைச் செய்யவில்லை. நான் எப்படியோ ஒருவகையில் ஜெபித்தேன், அவளுக்காக ஜெபித்தேன், எனவே தேவன் அவளை இரட்சிக்க வேண்டும் என்று நான் ஜெபித்தேன். ஆனால் அதுதான், பாருங்கள், நீங்கள் ஒரு கிறிஸ்துவரல்ல, நீங்கள் ஒரு மெத்தோடிஸ்டாயிருக்கிறீர்கள், பாருங்கள், நீங்கள்—நீங்கள் ஒரு விசுவாசியாயிருக்கவில்லை, நீங்கள் ஒரு மெத்தோடிஸ்டாய் இருக்கிறீர்கள். உங்களுடைய சொந்த சாட்சியே அதைக் கூறுகிறது. இரக்கம், தயவு, உங்களால் எந்த அளவிற்குத்தான் வேதத்திலிருந்து இடறிவிழ முடியும்? விசுவாசிகளாயிற்றே! “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடருமே!” 165 நீ ஒரு கிறிஸ்தவனா? “நான் ஒரு மெத்தோடிஸ்டு”. அது நீ ஒரு கிறிஸ்தவன் அல்ல என்பதைக் காண்பிக்கிறது. நீங்கள் ஒரு கிறிஸ்தவரா? “நான் ஒரு கிறிஸ்துவின் சபைக்காரன்.” (Church of Christ) அது நீங்கள் ஒரு கிறிஸ்தவன் அல்ல என்பதைக் காட்டுகிறது. 166 நீங்கள் ஒரு விசுவாசியாயிருக்கின்ற காரணத்தால், நீங்கள் ஒரு கிறிஸ்தவனாயிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு விசுவாசியாயிருந்தால், இயேசு மாற்கு 16-ம் அதிகாரத்தில், “ஈஸ்டர் முத்திரையைப் பெற்றுக்கொள்பவர்களை உலகத்தின் முடிவு பரியந்தம் இந்த அடையாளங்கள் பின் தொடரும்,” என்றார். அது உண்மை, நீங்கள் ஒரு விசுவாசியாயிருக்கிறீர்கள். 167 ஜனங்கள் பலவந்தம்பண்ணப்படுகின்றனர், அவர்கள் இப்பொழுது பலவந்தம்பண்ணப்படுகின்றனர். அந்தக் காரியம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள அல்லது அதைக் குற்றப்படுத்த பலவந்தம்பண்ணப்படுகின்றனர். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அதைக் குற்றப்படுத்துகின்றனர். 168 ஆனால் அவனால் அதை முன்னர் பெந்தேகோஸ்தே காலத்தில் செய்ய முடியவில்லை, ஏனென்றால் பெந்தேகோஸ்தே திரும்பவுமாக ஸ்தாபனமாகி வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் எந்தக் காரியத்திலிருந்து வெளியே இழுக்கப்பட்டார்களோ அதற்குள்ளாகவே தங்களை ஸ்தாபனமாக்கிக் கொள்ளப் போகிறார்கள். பெந்தேகோஸ்தேவே வெளியே வா. பெந்தேகோஸ்தே ஒரு ஸ்தாபனம் அல்ல, பெந்தேகோஸ்தே ஒரு விசுவாசிக்கு உண்டாகிற அனுபவமாயிருக்கிறது. ஆனால் அவர்கள் அதிலிருந்து ஸ்தாபனத்தை உண்டாக்கினர். அவர்கள் வெளியேற்ற அவ்வளவு கடினமாய் சண்டையிட்ட அதேக் காரியத்தையே திரும்பி ஸ்தாபனமாக்கிக் கொண்டுள்ளனர். 169 அதேக் காரியத்தையே தேசமும் அரசியலும் செய்தது, பண்டைய வேசியான கத்தோலிக்க உபதேசத்திலிருந்து, மார்க்க ரீதியான சுதந்திரத்திற்காகவே இங்கே வந்தனர்; மீண்டும் திரும்பிச் சென்று அரசியல் குருட்டுத்தனத்தினால், அவர்களுடைய தலையாய மனிதன் ஒருவரை, ஒரு கோடீஸ்வரரை, மதுபானத்தாலும், குப்பைக்கூளத்தாலும், உலகப் பொருட்களினாலும் ஒரு கோடீஸ்வரராக்கப்பட்டவரை தேர்ந்தெடுத்தனர். எப்படி அவர் ஒரு கோடீஸ்வரரானார்? அவரை வெள்ளை மாளிகையின் சிங்காசனத்தில், அதற்கு பின்னே கத்தோலிக்க முறைமையோடு அமரவைத்தனர். அதே சமயத்தில் அவர் ஆறு மாதங்கள் கூட இல்லாதிருந்ததே, அது சரியென்று நிரூபணமாகிவிட்டது. 170 பெந்தேகோஸ்தே சபையானது ஸ்தாபனத்தைவிட்டு வெளியே வந்து, அவைகளைக், “குளிர்ந்து போனதும், சம்பிரதாயமானதும்” என்றும், அவர்களுடைய பெண்கள், அவர்கள் செய்தவிதம், மற்றும் புருஷன், அவர்கள் செய்த விதத்தை அவ்வாறு அழைத்தனர். ஆனால் பெந்தேகோஸ்தேவே ஸ்தாபனமாகி, அந்த ஆவியையே ஏற்றுக்கொண்டு, அதற்குள் திரும்பிச் சென்றுவிட்டது. ஏன்? ஆகையால் அந்தத் தேவனுடைய உண்மையான சபையானது தன்னுடைய பலத்திலும், தன்னுடைய மகிமையிலும் இருப்பதைக் காண்பிக்கக் கூடியதாயிற்று. நீங்கள் விசுவாசிக்கப் பலவந்தம் பண்ணப்படுகின்றீர்கள். நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள அல்லது அதை மறுதலிக்க பலவந்தம்பண்ணப்படுகின்றீர்கள். தேவனுக்கே மகிமை! அது உங்களுக்கு முன்பாகவே உள்ளது, உங்களால் அதை மறுதலிக்க முடியாது. நீங்கள், “ஆம்” அல்லது “இல்லை” என்று கூறத்தான் வேண்டும். அதிலிருந்து வெளியேற வழியேக் கிடையாது. ஆம், ஐயா. ஆம், அவர்கள் பலவந்தம்பண்ணப்படுகின்றனர். நடுத்தரமான நிலையேக் கிடையாது. முழு உலகமும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அதை மறுதலிக்க வேண்டும். அந்தவிதமாகத்தான் அது இன்றைக்கு நிற்கிறது. 171 இப்பொழுது நாம் ஈஸ்டருக்குப் பிறகு, இயேசு, மாற்கு 16-ல் அவர்களிடம், “உலகமெங்கும் போய், சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள், இந்த அடையாளங்கள் பின்தொடரும்” என்றார் என்பதை கண்டறிகிறோம். மனிதன்…தேவன் அதன்பின்னர் அந்தச் செயல் முறையை அந்த ஜனங்களுக்கு பலவந்தப்படுத்தினார். அவர்கள் அந்த ஜனங்கள் ஏதோ ஒன்றை உடையவர்களாயிருந்ததை அவர்களிடம் காண வேண்டியதாயிருந்ததே! அது கிறிஸ்துவின் மரணத்திற்குப் பிறகு முந்நூற்று அறுபது ஆண்டுகளாக நீடித்தது. அதன்பின்னர் சபைக்குள்ளாக என்ன வந்தது? அவர்கள் கத்தோலிக்கர்களாயிருந்தனர், சரியாக, பெந்தெகோஸ்தே கத்தோலிக்கர்களாயிருந்தனர். கத்தோலிக்கம் என்ற வார்த்தை “உலகளாவிய” என்று பொருள்படுகிறது. முழு சபையும் உலகளாவியதாயிருக்கிறது. அவர்கள் பெந்தேகோஸ்தேக்களாய் இருந்தனர். அதன்பின்னர் அவர்கள் என்ன செய்தனர்? அவர்கள் வர்த்தக புருஷரண்டையில் சென்று, மற்றவர்களை மாற்றி, அவர்களை உள்ளேக் கொண்டு வந்தனர். அவர்கள் பெரிய தோழமைக் கருத்துக்களை உடையவர்களாயிருந்தனர். 172 வேதத்தில் முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியும். அதாவது ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளாக அது ஓர் உபதேசமாய் இருக்கும் இல்லை அது முதலில் ஒரு நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளாயிருக்கும் என்றும், அதன்பின்னர் முடிவிலே ஓர் உபதேசமாக மாறும் என்றும், அது சம்பவிப்பதற்கு முன்னே இயேசுவானவர் அவனிடத்தில் கூறினார் என்று நாம் ஏழு சபைக் காலங்களை போதித்தபோது நாம் நம்முடைய உபதேசத்தில் கண்டறிந்தோம். அப்பொழுது அவர்கள் அதைச் செய்தபோது, அவர், “நான் அதை வெறுக்கிறேனே!” என்றார். பெந்தேகோஸ்தேக்கள் என்ன செய்தனர்? பெந்தேகோஸ்துகள் ஏற்றத்தாழ்வுகளோடு, ஆசார நுணுக்கம் வாய்ந்த பிரிவினராய் ஸ்தாபித்துக் கொண்டு, கத்தோலிக்க சபையை முதல் தாய் ஸ்தாபனமாக உருவாக்கிவிட்டனர். 173 சொற்பளவுள்ள சிறுபான்மையினராயிருந்தவர்கள் ஒரு பக்கமாக வந்துவிடும்படி பலவந்தம்பண்ணப்பட்டனர். அதுமுதற்கொண்டே அது எப்போதும் அந்தவிதமாகவே இருந்து வருகிறது. அவர்கள் ஆயிரத்து ஐநூறு வருடங்களாக இழிநிலையை அடைந்து, அந்தச் சொற்ப அளவுள்ள சிறுபான்மையினர் அதில் தொடர்ந்து நீடித்து நிலவி வந்திருந்தனர். ஆமென்! 174 அன்றொரு நாள் யாரோ ஒருவர் கூறினார். அதாவது, “கத்தோலிக்க சபையைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், எத்தனைப் பெரிய யுத்தங்களில் அது தொடர்ந்து நீடித்து நிலவி வந்துள்ளது” என்றார். பெரிய யுத்தங்களா? நிச்சயமாகவே, சட்டம் அவள் பட்சத்தில், தேசம் அவள் பட்சத்தில், அரசியலும் அவள் பட்சத்திலேயே உள்ளதே! 175 பரிசுத்த ஆவியைத் தவிர வேறு ஒன்றுமேயில்லாதிருந்த அந்தச் சிறு பெந்தேகோஸ்தேவைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள், ஆனால் அவள் அதில் தொடர்ந்து நீடித்திருந்தாள். இந்தக் காலையில் சரியாக இங்கே அவள் இன்னமும் ஜீவிக்கிறாள், அவள் என்றென்றைக்குமாய் ஜீவிப்பாள் என்ற ஜீவனுள்ள அத்தாட்சியால் இருக்கிறாள், ஸ்தாபனமாய் அல்ல; பெந்தேகோஸ்தே விசுவாசிகளாய், அசலானவர்களாகவே! அது உண்மை. 176 இப்பொழுது, ஈஸ்டருக்குப் பிறகு இது செய்யப்பட்டு, ஒரு தீர்மானம் செய்யப் பலவந்தம்பண்ணப்பட்டது. மனிதன் ஒரு தீர்மானத்தைச் செய்ய வேண்டும். அவர்கள் அதை இப்பொழுது செய்ய வேண்டும் (நான் இந்த விளக்கவுரைகளை ஒரு தொகுப்பாக எடுத்து கூறிக் கொண்டிருக்கிறேன்) இடைப்பட்ட நிலைமையேயில்லையே! 177 சாத்தானின் புத்திரர்கள் இந்தக் கடைசி நாட்களில் முத்திரையிடப்படுவார்கள். இப்பொழுது ஒரு நேரம் உண்டு, அதாவது வேதம் அதைக் குறித்து உரைத்துள்ளது. அதாவது தேவனுடைய முத்திரையைப் பெற்றுக்கொள்ளாத எல்லோருமே மிருகத்தின் முத்திரையைப் பெற்றுக் கொண்டனர். மிருகத்தின் முத்திரை அவிசுவாசமாயிருக்கிறது என்பதை நாம் அறிவோம். முதல் முறையாக…“மிருகத்தின் முத்திரை எங்கேத் துவங்கினது என்று நீங்கள் கூறுவீர்களா? ஏதேன் தோட்டத்தில். மிருகத்தின் முத்திரையும், தேவனுடைய முத்திரையும் ஏதேன் தோட்டத்தில் கையாளப்பட்டது. சரியாக, அது ஈஸ்டரினூடாக, ஆபேலின் மரணத்திற்காக சேத்தை பிறப்பித்ததினூடாக கையாளப்பட்டது.” அது உண்மை, கவனியுங்கள். 178 காயீன் சாத்தானின் புத்திரனாயிருந்தான். அவன் ஏவாள் வஞ்சித்த மிருகத்தின் புத்திரனாயிருந்தான். நீங்கள் அதை விரும்புகிறபிரகாரமாய் எதுவாய் வேண்டுமானாலும் அழைக்கக் கூடும். அவன் சாத்தானின் புத்திரனாயிருந்தான். அவன் என்ன செய்தான்? தேவன் அவன் மேல் ஓர் அடையாளத்தைப் போட்டு, அவனைத் தேவனுடைய சமூகத்திலிருந்து வெளியே அனுப்பிவிட்டார். அது சரிதானே? அவன் தனக்கு ஒரு மனைவியைத் தெரிந்து கொண்டான், தேவனுடைய மந்தையிலிருந்து அல்ல; ஆனால் அவனுக்கு ஒரு மனைவியை மற்றொரு தேசத்தில், நோத் தேசத்திலிருந்து தெரிந்து கொண்டான். 179 ஸ்தாபனம் என்ன செய்தது? அது ஸ்தாபித்துக் கொண்டபோது, உண்மையான பெந்தேகோஸ்தே விசுவாசத்தை விட்டுவிட்டு, ஸ்தாபனத்திலிருந்து ஒரு மனைவியைத் தெரிந்து கொண்டது. அது முற்றிலும் உண்மையே. இப்பொழுது அவள் என்னெ செய்திருக்கிறாள்? பெந்தேகோஸ்தே மனைவி எப்படி செய்யத் துவங்குகிறாள் என்பதைப் பாருங்கள், அவள் என்னக் கூறிக்கொண்டிருக்கிறாள் என்றும், அவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்றும், அவளுடைய செய்கையையும் நோக்கி பாருங்கள், எப்படி என்று பாருங்கள். சரியாகப் பின்னால் நின்று இப்பொழுது துண்டிக்க முயற்சிக்கிறாள். அவள் முதலில் ஏற்று நின்ற அதேக் காரியத்தை, அவள் அதை வெட்டி வீழ்த்த, அதை செயலிழக்கச் செய்து வெளியேற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறாள். ஏனென்றால் அது அவளுடைய கோட்பாடுகளுக்கு விரோதமாயுள்ளது. அது அங்கிருந்ததைப் போன்றே, ஆனால் அவளோ மீண்டும் ஒரு தீர்மானத்தைச் செய்யப் பலவந்தம் பண்ணப்பட்டாள். அவள் அதைச் செய்ய வேண்டியதாயிற்று. அவள் அதை செய்தாக வேண்டியதாயிற்று. 180 தேவனே, எனக்கும் என்னோடு நிற்கவுள்ள என் சகோதரகளுக்கும் உதவி செய்யும். தேவனே உதவி செய்யும், அங்கே தீரமுள்ளவர்களாய் நிற்க எங்களுக்கு உதவி செய்யும். அது இரத்த சாட்சியினுடைய இரத்தமாயிருந்தாலும் கவலைப்படாமல் அங்கேயே நிற்போமாக! “நான் ஆளுகை செய்ய வேண்டுமானால், நான் சண்டையிட வேண்டுமே, கர்த்தாவே என் தைரியத்தை வர்த்திக்கச் செய்யுமே!” 181 அவருடையப் பரிசுத்த ஆவியானது ஜனங்களுக்கு மத்தியில் அசைவாடி, அதேக் காரியங்களைச் செய்கிறதை நான் காணும்போது, அவர் உயிர்த்தெழுந்த அதே இயேசு கிறிஸ்துவாயிருக்கிறார் என்று நான் அறிந்து கொள்கிறேனே! ஆமென். நான் அறிந்துள்ள வரையில் அதுவே அதைத் தீர்த்துவைக்கிறது, புரிகின்றதா? ஆமென். ரோமர் 4:25-ல் முடிவாக ஆபிரகாமைக் குறித்துப் பேசப்படுகிறது. “அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.” 182 எபேசியர் 4:30 பரிசுத்த ஆவி நித்தியத்திற்காக நம்மை முத்திரையிடுகிற தேவனுடைய ஈஸ்டர் முத்திரையாயிருக்கிறது. ஆமென். நித்தியத்திற்காக நம்மை முத்திரையிடுகிறது, தேவனுடையப் பரிசுத்த ஆவியாயிற்றே! ஓ, நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறீர்களா? நீங்கள் ஈஸ்டருக்காக மகிழ்ச்சியாயிருக்கிறீர்களா? நீங்கள் இந்த அனுபவத்திற்காக மகிழ்ச்சியாயிருக்கிறீர்களா? முத்திரையிடப்பட்டு, ஓர் இரகசியமான இடத்தில் தேவனோடு உள்ளே அடைபட்டிருங்கள், அவருடையத் தெய்வீகக் கிருபையினால், தேவனோடு உள்ளே அடைபட்டிருங்கள், நம்முடைய மீட்பின் நாள்வரைக்கும் முத்திரையிடப்பட்டிருக்கிறோம். அதுவே உண்மையான, உண்மையான ஈஸ்டர் முத்திரையாயிருக்கிறது. 183 நாம் எந்த நேரத்தை அடைந்துள்ளோம்? நடுப்பகல், பன்னிரெண்டிற்கு ஐந்து நிமிடங்கள் உள்ளன. நீங்கள் விசுவாசித்துக் கொண்டிருக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கிறார்கள்—ஆசி.] நீங்கள் எல்லாருமே விசுவாசிக்கிறீர்களா? நாம் சற்று நேரம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோமாக. 184 எங்களுடையப் பரலோகப் பிதாவே, நான் என்னக் கூறுவேன் என்பது முக்கியமல்ல, அதே சமயத்தில் மனிதன் இந்த வார்த்தையை விசுவாசிக்க வேண்டும், ஏனென்றால் அது இங்கே எழுதப்பட்டிருக்கிறது. எங்குமுள்ள மனிதர் உம்மை இப்பொழுதே அவர்களுடைய ஈஸ்டர் முத்திரையாக, உயிர்த்தெழுதலின் முதற்பலனாக, அவர்கள் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றே நான் ஜெபிக்கிறேன்; எங்கே மரணம் ஒரு காலத்தில் மிதித்து நடைபோட்டதோ அங்கே இப்பொழுது ஜீவன் அதனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டுள்ளது. நீர் இன்னமும் அற்புதங்களைச் செய்கிறவர் என்றும், காரியத்தை நிகழ்த்துகிறவர் என்றும், நீர் இன்னமும் இயேசுவாயிருக்கிறீர் என்றும் இந்தக் காலையில், இந்த சபையோருக்கு நீர் காட்ட வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். அந்தத் தூதனானவர் தன்னுடைய முதுகைக் கூட்டத்தாருக்கு இல்லை சாராளுக்குக் காண்பித்து, அவள் என்னக் கூறிக்கொண்டிருந்தாள் என்றும், சிந்தித்துக் கொண்டிருந்தாள் என்றும் கூறித் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு உறுதிப்படுத்தப்பட்டது போலவே, நான் சற்றுமுன்பு கூறினதை அறிந்து கொள்வார்களாக. ஓ தேவனே! நாங்கள் அதை அடிக்கடி பார்த்திருக்கிறோமே! நாங்கள் உறுதிசெய்தலையும், குமாரனை ஸ்தானத்தில் பொருத்துவதையும், பெயர் அளிப்பதையும் கண்டிருக்கிறோம். கர்த்தாவே, இந்தக் காரியங்கள் யாவும் சம்பவிக்கிறதை நாங்கள் கண்டிருக்கிறோம். நாங்கள் முடிவுகாலத்தில் இருக்கிறோம் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். இது ஓர் ஈஸ்டராயிருக்கிறது. அநேகர் நின்று கொண்டிருக்க, கால்களிலோ சுளுக்குபோன்று பிடிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. 185 இப்பொழுதோ பிதாவே, என்னால் கூற முடிந்த யாவும், நீர் உரைத்துள்ளதற்குப் பிறகு, அது நீர் கூறுகிறதின்படியாய் இருந்தாலொழிய அது ஒரு காரியத்தையும் பொருட்படுத்தாதே, நான் உம்முடைய வார்த்தையை உரைத்திருப்பேனேயானால், அப்பொழுது, பிதாவே நீர் அந்த வார்த்தையை உறுதிபடுத்தும் தேவனாயிருக்கிறீர் என்றே நான் விசுவாசிக்கிறேன். நீரே அதை அருள வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே, உம்முடைய ஆவியானது ஜனங்களுக்கு மத்தியில் வந்து, ஜனங்களுக்கு இதை உறுதிபடுத்துவதாக. 186 நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், எங்கும் ஒருவேளை சுகவீனமாயிருப்பவர்கள் இங்கிருக்கலாம், ஆனால் இங்கே ஜனங்களுக்கு மத்தியில் சுகவீனம் உண்டு என்பதில் சந்தேகமேக் கிடையாது. சுகவீனமாயிருந்து பட்டணத்திற்கு வெளியிலிருந்து இங்கே வந்திருப்பவர்கள் எத்தனைபேர் என்பதை நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன், பட்டிணத்திற்கு வெளியிலிருந்து வந்திருப்பவர்கள் உங்களுடையக் கரத்தை உயர்த்துங்கள். நல்லது, அவர்கள் அப்படியே எங்குமிருக்கின்றனர். 187 சரி, நீங்கள் உங்களுடையத் தலையை உயர்த்தலாம். நீங்கள் காணும்படி நான் அதை உங்களிடத்தில் கேட்கப்போகிறேன். பட்டிணத்திற்கு வெளியிலிருந்து வந்துள்ள யாவரையுமே, நான் அறியேன், அதாவது பட்டினத்திற்கு வெளியிலிருந்து வந்துள்ளவர்களை எனக்குத் தெரியாது. எனவே நீங்கள் உங்களுடையக் கரத்தை உயர்த்தி, “நான் சுகவீனமாயிருக்கிறேன்” என்று கூறுங்கள், நான் இப்பொழுது ஒரு பொதுவான யோசனையைப் பெற்றுக்கொள்ளும்படியாக, எங்கும் உங்களுடையக் கரத்தினை உயர்த்துங்கள். இங்கே, இங்கே இந்த மூலையினூடாக, பின்னாக பின்னால் சரி. இப்பொழுது, இங்கே ஒரு சவால் உள்ளது: நான் பிரசங்கித்துள்ள இது சத்தியமாயுள்ளதா? அப்படியானால், அதை நிகழ்த்த தேவன் கடமைபட்டுள்ளார். 188 அவர் இதைக் காத்துக்கொள்ளவில்லையென்றால், அப்பொழுது உயிர்த்தெழுதலே இல்லை. அவர் அதைக் காத்துக் கொள்வாரேயானால், அப்பொழுது அது உயிர்த்தெழுதலின் உறுதியாயிருக்கிறது. அவர் மரிக்கவில்லை என்றும், ஆனால் அவர் ஜீவனுள்ளவராயிருக்கிறார் என்ற ஈஸ்டர் முத்திரையையே அது காண்பிக்கிறது. அப்படியானால் அதை இகழ்வது பரிசுத்த ஆவிக்கு விரோதமான தூஷணமாயிருக்கும், அது மன்னிக்க முடியாததாயிருக்கிறது. இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் இந்தக் கூட்டத்திற்குள் வருவாரானால்… 189 நாம் ஜனங்களைச் சற்று மேலே எழும்பி நிற்கச் செய்யலாம் என்று நான் எண்ணினேன், ஆனாலும் நம்மால் ஒரு ஜெபவரிசையை அமைக்க முடியாது. இங்கே பாருங்கள், இங்கே நெருக்கமடைந்து காணப்படுகின்றனர், பீடத்தின் மேலும், எங்கும் சிறு பிள்ளைகள் உள்ளனர். எனவே நம்மால் ஒரு ஜெபவரிசையை அமைக்க முடியாது. 190 ஆனால், பாருங்கள், நான் உங்களை ஒரு காரியம் கேட்கவிரும்புகிறேன். அவர் ஓர் இடத்தில் இருக்கிறாரா அல்லது அவர் சர்வவியாபியாயிருக்கிறாரா? அவர் எங்குமிருக்கிறார். நான் உங்களை அறியேன் என்றும், நீங்கள் இங்கு அந்நியர்களாயிருக்கிறீர்கள் என்பதற்கும் நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்தியிருந்தீர்கள் என்றும் என்னால் எப்படி அறிந்துகொள்ள முடியும்? கூடாரத்திலுள்ள எவரும் எனக்கு இப்பொழுது வேண்டியதில்லை, பாருங்கள், நான் உங்களைப் பின்னர் பார்ப்பேன். ஆனால் வெறுமென இந்த ஜனங்கள், அதாவது இது நான் அறியாத ஜனங்கள், பட்டிணத்திற்கு வெளியிலிருந்து வந்துள்ளவர்களை நீங்கள் காணலாம். அது சரியா அல்லது இல்லையா என்று பரிசுத்த ஆவியானவரே பேசட்டும். அவரே பேசட்டும், அப்பொழுது என் வார்த்தைகள் ஒரு காரியமாயிருக்கும்; அது தேவனுடைய வார்த்தையாயிருந்தால், தேவன் அந்த வார்த்தையைக் காத்துக்கொள்வார். 191 இப்பொழுது நினைவிருக்கட்டும், பெந்தேகோஸ்தேக்கள், அசலான, தேவனுடைய உண்மையான விசுவாசிகள் எப்பொழுதுமே சிறுபான்மையினவராகவே இருந்து வந்துள்ளனர். அவர்கள் எள்ளி நகைக்கப்பட்ட, பரியாசம் பண்ணப்பட்ட ஒரு கூட்டமாய் இருக்கிறார்கள். ஜனங்கள் அந்த வழியைத் தெரிந்துகொள்ள விருப்பமுடையவர்களாய் இருப்பதில்லை. அவர்கள் லூத்தரன்களாக இருந்தபோது, தேவன் அவர்களுக்கு நீதிமானாக்கப்படுதலை அளித்தார், அவர்கள் துன்பப்படுத்தப்பட்டு, பரிகசிக்கப்பட்டு, இரத்த சாட்சிகளாவுங் கூடக் கொல்லப்பட்டனர். 192 ஆனால் லூத்தருடைய காலம் சென்றப் பிறகு, மார்டின் லூத்தரின் மரணத்திற்குப் பிறகு அது ஸ்தாபனமாகிவிட்டது. லூத்தர் எந்த சபையை ஸ்தாபனமாக்கவில்லை. இல்லை ஐயா. அவருக்குப் பின் வந்த ஜனங்கள் சபையையும் ஸ்தாபனமாக்கினர். வெஸ்லி ஒருபோதும் எதையுமே ஸ்தாபனமாக்கவில்லை. இல்லை ஐயா. அது அவருக்குப் பின் வந்த ஜனங்கள் செய்ததாயிருந்தது. இப்பொழுது, பெந்தேகோஸ்தேக்களுக்குப் பிறகு, பெந்தேகோஸ்தேக்கள் எதிலிருந்து வெளியே வந்தார்களோ, அதற்குள்ளேயே ஸ்தாபனமாகி வந்து விட்டனர். பார்த்தீர்களா? 193 ஆனால் அங்கு தான் நாம் நம்முடைய கோட்பாடுகளுக்குள்ளாக திரும்பிச் செல்கிறோம், பாருங்கள், தேவன்…ஒரு ஸ்தாபனத்தை ஏற்றுக்கொள்ளுகிற எந்த சபையும் அந்த நிமிடத்திலேயே மிருகத்தின் முத்திரையை தரித்துக் கொள்கிறது. (நான் அதை வேதாகமத்தின் மூலம் நிரூபிக்க முடியும்.) சபையில் உள்ள தனிப்பட்ட நபர்கள் அல்ல, ஆனால் சபை முறைமை, ஏனென்றால் சபை முறைமை கத்தோலிக்கமாயுள்ளது. கத்தோலிக்கம்: அது உலகளாவிய, ஒவ்வொரு காரியத்தையும் அதற்குள் இழுத்துக் கொள்ளச் செய்கிறது. புரிகிறதா? அவள் ஒரு வேசி என்றும், அவருடைய குமாரத்திகளும் விபச்சாரிகள், வேசிகள் என்று வெளிப்படுத்தின விசேஷம் 17-ம் அதிகாரத்தின் மூலம் என்னால் நிரூபிக்க முடியும். ஒவ்வொரு ஸ்தாபனமும்…அது ஒரு வேசியின் போக்கை ஏற்றுக் கொள்ளும்போது, சரியாக அவள் என்ன செய்துள்ளாள் என்று கவனித்தால், அவளுடைய தாய் செய்த விதமாகவே சரியாக அதை செய்துவிட்டிருப்பாள். எனவே அவள் துரிதமாக…இப்பொழுது, சபையில் உள்ள ஜனங்கள் அல்ல. மெத்தோடிஸ்டுகள் உண்மையான ஜனங்களாய் உள்ளனர். 194 நியாயத்தீர்ப்பு பூமியைத் தாக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்க்கும்போது, இப்பொழுது நம்மை எதிர் நோக்கியுள்ள இந்த மகத்தான நேரத்தில் அந்த சபைக்கு என்ன சம்பவிக்கும் என்பதை கர்த்தர் உரைத்துக் காண்பித்தார் என்பதை நீங்கள் ஒலிநாடாவில் கேட்டு புரிந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன். 195 ஆனால் அவளுடைய தலையான புருஷன் மரித்துப் போய்விட்டிருந்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால்…எலியா தன்னுடைய வனாந்திர பிரயாணத்திலிருந்து திரும்பி வந்த போது, அவள் ஒரு விதவையாயிருந்தாள்; அவள் ஒரு விதவையாயிருந்தாள். எலியா அவளிடத்தில் அனுப்பப்பட்டான், அவளுடைய தலையான புருஷன் மரித்தப் பிறகு, அப்பொழுது அவள் அந்த தீர்க்கதரிசி கூறுவதைக் கேட்க மகிழ்ச்சியாயிருந்தாள். பாருங்கள். அவளுடைய ஸ்தாபனம் சபைகளின் சங்கத்திற்குள்ளாக சேர்ந்துவிட்டது, அவள் எங்கேயிருந்தாள் என்பதை அவள் கண்டாள், என்ன நிறைவேறும் என்று தீர்க்கதரிசி கூறியிருந்தானோ அதை ஏற்றுக்கொள்ள சித்தமுள்ளவளாயிருந்தாள். தேவன் அவளை அப்பொழுதும் நேசித்து, தீர்க்கதரிசியை அங்கே அனுப்பி, அவன் யோர்த்தானை கடக்கும் வரை, பஞ்சம் முற்று பெறும்வரை அவளை உயிரோடே காத்துக்கொண்டார். ஆம், அது உண்மையே. 196 அங்கே எலியாவில் கர்த்தருடைய வருகையைக் குறித்து என்னே ஒரு அழகான காட்சி உள்ளது. பரிபூரணம். இந்த செய்தி கடைசி நாட்களில் எலியா தீர்க்கதரிசியின் மூலமாக கொடுக்கப்பட வேண்டியதாயுள்ளது என்பது நினைவிருக்கட்டும்; அவனுடைய ஆவி சபையின் மேல் இருக்கும். சரியாக, உண்மையே. எலியா என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்று உங்களுக்குத் தெரியுமா? சரி. இப்பொழுது, நாம் ஜெபம் செய்வோமாக. பரிசுத்த ஆவியானவர் தாமே… 197 ஜனங்களே நான் உங்களை ஒரு காரியம் கேட்க விரும்புகிறேன். இப்பொழுது, நீங்கள் பாருங்கள், தேவன் ஒரு ஜீவனுள்ள தேவனாயிருக்கிறாரா? அவர் தற்பொழுது இருக்கிறாரா? அப்படியானால், அவர் இப்பொழுது இருப்பாரானால், நான் உங்களை ஒரு காரியம் கேட்க விரும்புகிறேன். இப்பொழுது நான் கூறியிருப்பதற்குப் பிறகு, இங்கு எத்தனை பேர் அது…சத்தியமாயிருக்கிறது என்று விசுவாசிக்கிறீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்—ஆசி.] இங்கே எவரேனும், “சகோதரன் பிரான்ஹாம், நான் ஒரு கிறிஸ்தவன் அல்ல, நான் கிறிஸ்தவனாயிருக்க விரும்புகிறேன், எனக்காக ஜெபியுங்கள்” என்று கூற விரும்புகிறீர்களா? என்னால் இங்கே மேலே எந்த பீடத்திலும் அழைப்பு விடுக்க இயலாது, ஏனென்றால் என்னால்—என்னால் முடியவில்லை. எனவே அப்படியே உங்களுடையக் கரங்களை உயர்தி “எனக்காக ஜெபியுங்கள்” என்று கூறுங்கள். இந்தக் கட்டிடத்தில் எவரேனும் இருக்கிறீர்களா? தேவன் உங்களை, உங்களை, உங்களை, உங்களை ஆசீர்வதிப்பாராக. அது அருமையாயிருக்கிறது. சரி, தேவன் சுற்றிலும் எங்குமுள்ள உங்களை ஆசீர்வதிப்பாராக. சரி. நல்லது. சரி. 198 இப்பொழுது இதைப் போன்ற ஒரு செய்திக்குப் பிறகு உங்களுக்கு ஒரு உரிமை உண்டு. நீங்கள் என்னைக் கூப்பிட உரிமையுண்டு. அதாவது “சகோதரன் பிரான்ஹாமே, நீர் எங்களுக்கு ஏதோ ஒரு காரியத்தை பிரசங்கித்திருக்கிறீர். அதாவது இந்தக் கடைசி நாட்களில் நீர், அவர் அதை நிகழ்த்தினபோது, அவர் தேவனாயிருந்தார் என்று காண்பித்தபோது அதுவே கடைசி அடையாளமாயிருந்தது” என்று கூறினீரே எனக் கூறலாம். 199 ஒரு யூத பிரசங்கியார் அன்றொரு நாள் கூறினதை நான் கேட்டேன், வெறுமென…நான் இருந்தேன்…“சிவப்பான கிடாரி” என்பதன் பேரிலானப் பலியைக் குறித்த என்னுடைய செய்தியின் மூலம் அந்த மனிதன் ஒரு சபையிலிருந்து வெளியே வந்து கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார். அவர் அநேக வருடங்களாக ரபிகளின் ஒரு வழிமரபினூடாக, முற்காலத்தில் நானூறு அல்லது ஐநூறு ஆண்டுகளாக இருந்து வந்த எல்லா ரபிகளைப் போன்றும் வளர்க்கப்பட்டிருந்தார். அந்த மனிதர் என்னுடைய செய்தியைக் கேட்டவுடனே, ஒரு கூட்டத்திற்குள்ளாக நழுவி வந்து, “சிவப்பு கிடாரி” என்பதை கேள்விப்பட்டு, அதன் மூலம் கிறிஸ்தவ மார்க்கத்திற்குள்ளாக மன மாற்றமடைந்தார். அன்றொரு நாள் ஒரு சபையில் நின்று, “ஒன்றுக்கு பதிலாக மூன்று தேவர்கள் இருந்தனர் என்பதை எவருமே விசுவாசிக்கமாட்டார்கள்…” என்று கூறினாரே! அவர் அந்த நேரம் வரையில் ஒரே தேவனில் விசுவாசங் கொண்டவராயிருந்தார். அவர் வேறேதோ ஒரு காரியத்தைச் செய்வதற்குப் பதிலாக பின்மாற்றமடைந்துப் போனார். ஆபிரகாமிடம் அவர்கள் மூவரும் வந்த போது, அதாவது பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற மூவரும் ஆபிரகாமிடம் வந்தனர் என்று அவர் கூறினார். 200 இப்பொழுது இதைக் கவனிக்க வேண்டும் என்றும், நீங்கள் ஒரு காரியத்தை நினைவில் வைத்துக்கொள்ளும்படி நான் விளக்க விரும்புகிறேன். அவர்கள் மூவரும் ஒன்று சேர்ந்து வருவதை ஆபிரகாம் கண்டபோது, அவன், ஆண்டவன்மார்களே என்று கூறாமல், “ஆண்டவரே” என்றேக் கூறினான். ஆனால் லோத்து, அவனுடைய ஸ்தாபன சகோதரன், அவன் அவர்களில் இருவரைக் கண்டபோதே, அவன், “ஆண்டவன்மார்களே” என்று கூறினான். அதுவே நீங்கள் எங்கேயிருக்கிறீர்கள் என்பதைக் காண்பிக்கிறது. புரிகிறதா? லோத்து அவர்களை ஆண்டவன்மார்களே என்று அழைத்தான். ஆபிரகாம் அவர்கள் மூவரையும் கண்டபோது, “ஆண்டவரே” என்று அழைத்தான். அந்த முவர்களில் ஒரே ஒருவர் மாத்திரமே ஆண்டவராயிருந்தார். அது உண்மை. ஏலோஹிம். 201 அதன்பின்னர் அங்கு சென்ற அந்த இரண்டு தூதர்களும் செய்தியாளர்களேயன்றி வேறொன்றுமில்லை; லோத்து, அந்த பெரிய திரித்துவ சகோதரன் அவர்களை தன்னுடைய ஆண்டவன்மார்கள் என்று அழைக்க விரும்பினான். உங்களுக்குத் தெரியும், “உள்ளே வாருங்கள்” என்றான். உலகத்தின் காரியங்களோடு அவன் அங்கே இருந்த காரணத்தால் அவன் என்ன நிலைமைக்குள்ளாயிருந்தான் என்று பார்த்தீர்களா? அவனுடைய மனைவியும், அங்கிருந்த அவனுடைய எல்லா குமாரத்திகளும் மற்ற உலகத்தாரைப் போன்றே தங்களுடைய குளிர்ந்த, சம்பிரதாயமான சபையில் இருந்தனர். அந்தவிதமாகவே நீங்கள் இருக்கிறீர்கள். 202 தூதன் என்ன செய்தார்? அவர் தேவனாகிய கர்த்தராயிருந்தார் என்பதை அவர் நிரூபித்தார். இப்பொழுது, நான் பேசிக்கொண்டிருக்கிற இந்த பரிசுத்த ஆவியானவரைக் குறித்து, அவர் இன்னமும் தேவனாகிய கர்த்தராயிருக்கிறார் என்று அவரே நிரூபிக்கட்டும். அந்த ஒருவராய் இருந்தது அவரே என்று அவரே நிரூபிக்கட்டும். 203 இப்பொழுது, நீங்கள் ஜெபியுங்கள். இப்பொழுது, நீங்கள்…நான் மீண்டும் கேட்கட்டும். இங்குள்ள எத்தனை பேர், நாம் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு சிறு பகுதியினரை எடுத்துக் கொள்வோம், இங்குள்ள எத்தனை பேர், இங்கே சுகவீனமாயிருக்கிற நீங்கள், உங்களை எனக்குத் தெரியாது—உங்களை அறியேன், நீங்கள் அந்நியர்களாயிருக்கிறீர்கள், தேவன் உங்களை குணப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களா? உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். இப்பொழுது, இப்பொழுது, இங்கே இந்த கூட்டத்தாரினூடாக நாம் நோக்கிப் பார்ப்போமாக. சரி, சரி. இப்பொழுது, ஒரு நிமிடம் உங்களுடைய கரங்களை கீழே தொங்கவிடுங்கள். 204 தேவனே பேசட்டும். இப்பொழுது நான் என்னுடையக் கரத்தை உயர்த்தினேன். எனக்கு அவர்களைத் தெரியாது, அவர்களை அறியேன். இப்பொழுது அவர் இன்னமும் தேவனாயிருப்பாரானால், அப்பொழுது அவர் அதேக் காரியத்தைச் செய்யமாட்டாரா? அந்த ஸ்திரி அந்த அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்… 205 ஸ்திரீகளாகிய உங்களில் சிலர் அல்லது உங்களுடையக் கரத்தை உயர்த்தியிருந்த உங்களில் சிலர், அங்கு எங்கோ ஒரு பெண்மணி இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். எங்கே? கடைசியில் உள்ள அந்த சிறுபெண்மணி, நீங்கள் உங்களுடையக் கரத்தை உயர்த்தினீர்களா? சரி. நீங்கள் உயர்த்தியிருந்தீர்களா? சரி, நான் உங்களுக்கு ஓர் அந்நியனாயிருக்கிறேன். நான் உங்களை அறியேன். சரி. 206 அவர் இன்னமும் உங்களுடையப் பலவீனங்களைக் குறித்துப் பரிதபிக்கக்கூடிய பிரதான ஆசாரியராய் இருப்பாரேயானால், நீங்கள் சற்றுப் பாருங்கள். நான் உங்களை என்னுடைய ஜீவியத்தில் ஒரு போதும் கண்டதேயில்லை. நீங்கள் எனக்கு ஓர் அந்நியராயிருக்கிறீர்கள். எனக்கு உங்களைக் குறித்து ஒன்றுமேத் தெரியாது. தேவன் உங்களை அறிந்திருக்கிறார். அவர் தம்முடைய பரிசுத்த ஆவியினால் எனக்கு வெளிப்படுத்தக் கூடுமானால், உயிர்த்தெழுந்த கிறிஸ்துவானவர் இங்கு வந்து, என்னுடைய ஆவியில் ஒரு தற்காலிக உயிர்த்தெழுதலை எனக்குத் தருவாரானால், அப்பொழுது அந்த என்னுடைய ஆவியானது இப்பொழுது விலகிச் செல்ல, அவருடைய ஆவியானது உள்ளே வருகிறது. அப்பொழுது அவர் உயிரோடிருக்கிறாரா அல்லது இல்லையா என்று உங்களை அறிந்துகொள்ளும்படிச் செய்கிறார். இப்பொழுது எனக்கு உங்களைத் தெரியாது. அது நான், எனக்கு என்னுடைய ஆவியில் நான் உங்களை அறியேன். ஆனால் அவர் உங்களை அறிந்திருக்கிறார். ஆனால் அவர் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவாயிருக்கிறார் என்று நிரூபிக்கும்படியாக என்னுடைய சரீரத்தைக் கடனாக வாங்க விரும்புகிறார். நான் அதை அவருக்கு கடனாக அளிக்க, அவருக்கு அதை அளிக்க, அவ்வளவு மகிழ்ச்சியாயிருக்கிறேன். அவரால் அதிலிருந்து எந்தக் காரியத்தையும் செய்ய முடியும். 207 நீங்கள் இங்கு என்னத்திற்காக இருக்கிறீர்கள் என்பதை தேவன் என்னிடம் கூறுவாரேயானால், நீங்கள் என்னை விசுவாசிப்பீர்களா? [அந்த பெண்மணி, “ஆம்” என்கிறார்.—ஆசி.] நீங்கள் விசுவாசிப்பீர்கள். உங்களுக்கு நாளப்புடைப்புச் சார்ந்த நரம்புக் கோளாறு உள்ளது. அது உண்மையானால் உங்களுடையக் கரத்தை உயர்த்துங்கள். உங்களுக்கு அதைவிட வேறொன்றும் உண்டு; ஒரு குடலிறக்க நோயும் உள்ளது. அது உண்மை. நீங்கள் இந்த பட்டிணத்திலிருந்து வரவில்லை. நீர் ஓஹையோவில் உள்ள லைமாவிலிருந்து வருகிறீர். உங்களுடைய பெயர் திருமதி.ஸ்டாட்டர்ட். [“ஆம்.”] அது உண்மை. உங்களுடைய கணவர் உங்களுக்கு பின்னாக உட்கார்ந்துகொண்டிருக்கிறார். [“ஆம்.”] அது உண்மை. அவருடைய தொல்லை என்னவென்று தேவனால் எனக்குக் கூற முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவருக்கு அவருடைய முதுகிலே கோளாறு உண்டு. அவர் தன்னுடைய முதுகு வலியினால் அவதியுற்றுக் கொண்டிருக்கிறார். [“ஆம்.”] அது உண்மையானால், ஐயா, உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? 208 இங்கே கீழே உள்ள மற்ற யாரோ ஒருவர் தன்னுடைய கரத்தை உயர்த்தியிருந்தவர், இங்கே கீழே உள்ளவர், இதோ, அங்கே அந்தப் பெண்மணி. சரி. நான் உங்களை அறியேன். அது அங்கே உங்களுக்கு பக்கத்தில் அமர்ந்து கொண்டிருக்கிற உங்களுடைய கணவர். உனக்கு தேவையாயிருந்து கொண்டிருக்கிற காரியம் பரிசுத்த ஆவியின் அபிஷேகமாயுள்ளது. அது உண்மையானால், உன்னுடைய கரத்தை உயர்த்து. அது உண்மை. சரி, கர்த்தரின் மேல் விசுவாசமாயிரு, சந்தேகப்படாதே. 209 தொலைவிலிருந்து யாரோ ஒருவர் வருவதைக் கண்டேன், ஆனால் அது எங்கிருந்து என்று என்னால் கூற முடியவில்லை. ஆம், இங்கு ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், நான் அவரை இப்பொழுது காண்கிறேன். அவரும் கூட எனக்கு ஒரு அந்நியராயிருக்கிறார். உங்களுக்கு பித்தப்பை கோளாறும், எலும்பு உட்புழை கோளாறும் உள்ளது. நீங்கள் இந்த இடத்திலிருந்து வரவில்லை. நீங்கள் ஜியார்ஜியாவிலிருந்து, ஜியார்ஜியாவில், ஹம்பர்மில்லைப் போன்று அழைக்கப்படும் ஒரு இடத்திலிருந்து வருகிறீர்கள். சரி, இப்பொழுது விசுவாசித்து, வீட்டிற்கு திரும்பிச் சென்று சுகமடையுங்கள். 210 நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? இங்கே சரியாக பின்னால், பின்னால் ஒருவர் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், அந்த ஒளியானது அந்த நபரின் மீது நின்று கொண்டிருக்கிறது. அவர்கள் இரட்சிக்கப்படாமல், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ள அன்பான ஒருவருக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். விசுவாசியுங்கள், விசுவாசமுடையவர்களாய் இருங்கள், சந்தேகப்படாதீர்கள். 211 நான் அப்படியே கவனித்துக் கொண்டிருக்கிறேன். இதோ அது இங்கேயே முடிந்துவிட்டது. அந்தப் பெண்மணி தன்னுடையத் தலையைத் தொங்கவிட்டுக்கொண்டு ஜெபித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அவளுடைய பாதத்திலும், அவளுடைய முழுங்கால்களிலும் கோளாறு உள்ளது. எனக்கு உங்களைத் தெரியாது, எனக்குத் தெரியுமா? நாம் அந்நியர்களாயிருக்கிறோம், உங்களுடையக் கரத்தை உயர்த்துங்கள், நீங்கள் திரும்பி…நியூ ஹாம்ப்ஸியரில் உள்ள உங்களுடைய இல்லத்திற்குச் செல்லுங்கள், அங்கிருந்துத்தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள். விசுவாசியுங்கள், கர்த்தர் உங்களைச் சுகப்படுத்துவார். 212 ஒரு பெண்மணி அங்கே பின்னால் ஒரு சிறு பெண்ணோடு அமர்ந்து அவளுக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள்; சிறுநீர்ப்பிருக்கத் தொல்லையோடு அங்கே பின்னால் அமர்ந்திருக்கிறாள். அவளும் கூட ஜியார்ஜியாவிலிருந்து வந்திருக்கிறாள். திருமதி காசன், நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிப்பீர்களேயானால் நலமாயிருக்குமே! நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளுகிறீர்களா? சரி, அப்படியானால் வீட்டிற்குப்போய், குணமடையுங்கள், எனக்கு அந்த ஸ்தீரியைத் தெரியாது, அவளை என் ஜீவியத்தில் ஒரு போதும் கண்டதேயில்லை. நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருந்தால், பெண்மணியே உன்னுடையக் கரத்தை அசைத்துக் காட்டு. அது சரி. 213 இதோ இன்னொருவர், ஒரு மனிதன் இங்கே பின்னாக அமர்ந்திருக்கிறார். அவரும் கூட ஜியார்ஜியாவிலிருந்து வந்திருக்கிறார். அவரை எனக்குத் தெரியாது. அவரை ஒருபோதும் கண்டதேயில்லை. ஆனால் நான் அவர் அந்தப் பீச் தேசத்திலிருந்து வருகிறதைக் கண்டேன். சரி. அவருக்கு ஈரலில் ஒரு கோளாறு உள்ளது, அது உண்மை, மற்றும் மூட்டுவலியும் உள்ளது. அவர் பின்னால் உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டிருக்கிறார். ஐயா, நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? சரி, திரும்பிச் சென்று சுகமடைவீர்களாக. 214 உங்களுக்குப் பக்கத்தில் யாரோ ஒருவர் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். ஒரு பெண்மணி, பின்னால் உள்ள பிந்தின வரிசையில் இருக்கிறார். இல்லை, அது அவளுக்காக அல்ல. அவள் தன்னுடையப் பிள்ளைக்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அது உண்மை. பெண்மணியே, உங்களுடைய மகனோடு உள்ளக் காரியம் என்னவென்பதை தேவனால் எனக்குச் சொல்ல முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் உங்களுக்கு ஓர் அந்நியனாயிருக்கிறேன், ஆனால் தேவன் உங்களை அறிந்திருக்கிறார். குடற்புண் மற்றும் மனநிலைப் பாதிப்புக் கோளாறு, அவன் இங்கில்லை; ஒஹையாவில் உள்ள டேய்டனில் இருக்கிறான். அது உண்மையானால், உன்னுடையக் கரத்தை உயர்த்து. இப்பொழுது விசுவாசியுங்கள். 215 அவர் ஜீவிக்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா? அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறாரா? குறைந்தபட்சம் எட்டு அல்லது பத்துபேர் உள்ளனர். நான் அவர்களை என் ஜீவியத்தில் ஒருபோதும் கண்டதேயில்லை. அது உண்மைதானே? இப்பொழுது பரலோகத்தின் தேவன்தாமே, இப்பொழுது இங்கிருக்கிறவர் இவர்களை சுகப்படுத்தி, நலமடையச் செய்வாராக. நல்லது, அது பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திலிருந்து வருகிறது, என்னிடத்திலிருந்து அல்ல. சிந்தனைகளை பகுத்தறியக்கூடிய தேவன் தாமே, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை அவர்தாமே நிரூபிக்கும்படியாக, அவரே முன்வந்து வியாதியஸ்தரை சுகப்படுத்துவாராக. அவர் என்றென்றைக்குமாய் தேவனாயிருக்கிறாரே! நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது எத்தனைபேர் அவரை இப்பொழுதே விசுவாசித்து, அவரை இரட்சகராக, சுகமளிப்பவராக, ஒரு அபிஷேகிப்பவராக, வரப்போகும் ஓர் இராஜாவாக ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்? இயேசுவின் நாமத்தில், ஓ, அல்லேலூயா! என்ன? ஈஸ்டர் முத்திரை, பிழையற்ற ஈஸ்டர் முத்திரையாயிற்றே! 216 அடுத்தக் காரியம் என்ன? வரப்போகும் குமாரனைச் சந்திப்பதற்கு இந்த சரீரத்தின் மறுரூபமாகுதல். நாம் ஒரு நிமிடத்திலே, ஓர் இமைப்பொழுதிலே நாம் மறுரூபமாக்கப்படுவோம். உங்களுக்கு வேண்டுமானால் எல்லா முத்திரைகளையும் உங்களுடையத் தாளில் வைத்துக்கொள்ளுங்கள்; ஆனால் உண்மையான ஈஸ்டர் முத்திரை மனித இருதயத்தில் உள்ள பரிசுத்த ஆவியாயிருக்கிறதே! நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளுகிறீர்களா? அவருடைய உயிர்த்தெழுதலில் நீங்கள் விசுவாசங்கொண்டிருக்கிறீர்களா? அவர் என்றென்றைக்குமாய் உயிரோடிருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர் இங்கே இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவரை உங்களுடைய இரட்சகராக, உங்களுடையச் சுகமளிப்பவராக, உங்களுடையத் தேவனாக, வருகின்ற உங்களுடைய இராஜாவாக இப்பொழுதே நீங்கள் ஏற்றுக்கொள்ளுகிறீர்களா? உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசியுங்கள். 217 இந்த உறுமால்களை, தேவனே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அவைகளின் மேல் ஜெபிக்கிறோம். அநேக ஜனங்கள் அவைகளை அபிஷேகிக்கின்றனர். அவர்கள் பவுலின் சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் எடுத்துப்போட்டபோது அவர்கள் சுகமாக்கப்பட்டனர் என்று நான் நம்புகிறேன். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? 218 இப்பொழுது இன்னும் இங்கே சுகவீனமாயிருக்கிறவர்கள் எத்தனைபேர்? இப்பொழுது கூடாரத்தைச் சார்ந்த ஜனங்கள், இங்கே இந்த நகரரைச் சுற்றிலும் உள்ளவர்கள், இங்கே சுற்றிலும் இருக்கிறவர்கள், இங்கே சுற்றிலும் இருக்கிற நீங்கள் இப்பொழுது உங்களுடையக் கரங்களை உயர்த்துங்கள். அவர் இங்கிருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பரிசுத்த ஆவியானவர் இங்கிருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, காத்திருங்கள், நாம் ஏன் வேறேதோக் காரியத்திற்காகக் காத்திருக்கிறோம்? அவர் இங்கிருக்கிறார், ஆகையால் நாம் அதன்பேரில் செயல்படுவோமே! சார்லி, நீ என்ன நினைக்கிறாய்? ஆமென். அல்லேலூயா! ஓ, அது சம்பவிக்க வேண்டியதாயுள்ளதே! 219 என்னால் எவரையும் சுகப்படுத்த முடியாது. என்னால் அதைச் செய்ய முடியாது. சுகப்படுத்த எனக்குள் ஒன்றுமே கிடையாது. ஆனால் இப்பொழுது என்மேலிருக்கிற இந்த ஆவியை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களேயானால், அதை இனி ஒருபோதும் உங்களைச் சந்தேகிக்கும்படிச் செய்ய பாதாளத்தில் போதுமான பிசாசுகள் இருந்தாலும் கூட முடியாதே, நீங்கள் சுகமடைந்தாக வேண்டும். நான் சுகமளிப்பவன் அல்ல; அவர் சுகமளிப்பவராயிருக்கிறார். என்னால் தரிசனங்களைக் காணமுடியாது; அவரே பேசுகிறவராயிருக்கிறார். இது வெறுமென அவர் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிற என்னுடைய சரீரமாயிருக்கிறது. 220 இப்பொழுது அந்த மாறாத தேவன், “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்” என்றார். இங்கே எத்தனைபேர் விசுவாசிகளாயிருக்கிறீர்கள்? நீங்கள் ஒரு விசுவாசியாயிருக்கிறீர்கள் என்ற நிச்சயமுடையவர்களாயிருக்கிறீர்களா? நல்லது, அவர், “விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன; அவர்கள் வியாதியஸ்தர்மேல் கைகளை வைத்தால், அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்றார். அது சரிதானே? இப்பொழுது நீங்கள் உங்களுடையக் கரங்களை ஒருவர் மற்றொருவர் மீது வையுங்கள், உங்கள் ஒவ்வொருவருக்காகவும் நான் ஜெபிக்கட்டும். ஓ தேவனே! ஓ, சகோதரனே! ஏதோக் காரியம் சம்பவித்தாக வேண்டியதாயிருக்கிறது. ஏதோக் காரியம் அப்படியே சம்பவித்தாகத் தான் வேண்டியதாயிருக்கிறது. 221 ஓ, மகத்தான ஈஸ்டர் முத்திரையே, நீர் குட்டையில் உள்ள லீலிபுஷ்பமாயிருக்கவில்லை, ஆனால் பள்ளத்தாக்கில் லீலியாயிருக்கிறீரே! நீர் அன்றொரு நாள் அந்தப் பையனினூடாக உரைத்தீர். நீர் உம்முடைய வார்த்தையின் மூலமே வந்திருக்கிறீர். நீர் சத்தியமாயிருக்கிறீர் என்று நீர் வெளிப்படுத்தினீர். கர்த்தாவே நீர் சத்தியமாயிருக்கிறீரே, நீர் உயிர்த்தெழுதலாயிருக்கிறீர். நீர், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான். நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்றீர். “நான் இருக்கிறேன்;” “நான் இருப்பேன், நான் இருந்தேன்” என்றல்ல; “நான் இப்பொழுதே உயிர்த்தெழுதலும், ஜீவனுமாயிருக்கிறேன்.” 222 இந்த அற்புதங்களை நிகழ்த்தின அதே ஒருவர்தான் இந்த வார்த்தையை பிரசங்கித்தவராயிருக்கிறார். கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசிக்கு உண்டானது என்று வேதம் கூறவில்லையா? அந்நாட்களில் அவர்கள் உண்மையான தேவனுடைய வெளிப்பாட்டை கண்டறிய யாரிடத்தில் சென்றனர்? தீர்க்கதரிசியினிடத்திலாயிருந்தது. அவன் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான் என்று அவர்கள் எப்படி அறிந்துகொண்டனர்? காரணம் அவன் ஒரு தீர்க்கதரிசியின் அடையாளத்தை, தீர்க்கதரிசியின் முத்திரையை உடையவனாயிருந்தான். அப்படியானால் தீர்க்கதரிசி யாராயிருக்கிறார்? பரிசுத்த ஆவியாயிருக்கிறார். 223 பரிசுத்த ஆவியானவர் வார்த்தையை எழுதினார், பரிசுத்த ஆவியானவரே. நான் இல்லையே! அவரே! அந்த ஒருவரே! நான் சற்றுமுன் உங்களுக்குக் கூறினேன், அவர் என்னுடைய சரீரத்தை எடுத்துக் கொண்டார். அவர் என்னுடைய நாவை எடுத்துக்கொள்கிறார், என்னுடைய கண்களை எடுத்துக்கொள்கிறார், ஏனென்றால் நான் அதை அவரிடத்தில் சமர்ப்பிப்பேன் என்று அவர் அறிந்திருந்தார், எனவே அவர் வந்து, நான் அதைச் செய்யும்படிச் செய்தார். எனவே அது நானல்லவே! அது அவராயுள்ளதே! அங்கே வெளியே உங்களோடிருப்பது நானல்ல, அங்கே வெளியே உங்களோடிருப்பது அவராகும். அவரே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார். ஓ, தேவனே, தேவனே; அதை விசுவாசியுங்கள். ஓ, ஜனங்களே; அவரை விசுவாசியுங்கள். அவரை விசுவாசியுங்கள். அவர் இங்கே இருக்கிறார். 224 இப்பொழுது, அங்கே நின்று கொண்டிருக்கிற நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய சொந்த ஜெபத்தில் விசுவாசமுடையவர்களாயிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் என்னக் கூறப்போகிறேன் என்பதிலும் நீங்கள் விசுவாசமாயிருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் உங்களை சுகப்படுத்தும்படி நான் கேட்டுக் கொள்ளப் போகிறேன். ஒவ்வொரு பாவத்தையும் அவர் மன்னிக்கும்படி நான் கேட்டுக்கொள்ளப் போகிறேன். பாவம் என்றால் என்ன? அவிசுவாசம். 225 இங்குள்ள உங்களில் சிலர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஒருபோதும் ஞானஸ்நானம் பண்ணப்படாதிருந்தால், தண்ணீர் தொட்டி ஆயத்தமாயுள்ளது. நீங்கள் பெற்றிருக்கவில்லையென்றால, உங்களைத் தடுக்கின்ற ஒரேக் காரியம் அவிசுவாசமாயுள்ளது. நீண்ட காலமாக அதை ஏன் ஏற்றுக்கொள்கிறீர்கள்? அந்த காரியத்தை பகிரங்கமாக கண்டனம் செய்யுங்கள். தேவனுடைய ஆவியை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா? தேவனுடைய கிரியைகளை உங்களால் காண முடியவில்லையா? 226 அந்த ஸ்தாபனங்களை விட்டு வெளியேறுங்கள். கர்த்தராகிய இயேசுவுக்குள்ளாக வாருங்கள், அதன்பின்னர் உங்களுடைய ஸ்தாபனத்திற்கு திரும்பிச் சென்று வெளிச்சத்தை பிரகாசியுங்கள். கவலைப்படாதீர்கள், அப்பொழுது அங்கே நீங்கள் நீண்ட காலம் இருக்கமாட்டீர்கள். அவர்கள் உங்களை…செய்துவிடுவார்கள். அது என்ன செய்யும்? அது உங்களுடைய சொந்த சபையில் ஒரு தீர்மானத்தை செய்ய வேண்டும் என்ற ஒரு இடத்திற்கு கொண்டு வரும். 227 நான் பாப்ஸ்டிஸ்டு சபையிலிருந்து வந்தபோது இங்கே நின்றேன், அப்பொழுது சபைகள் ஒரு தீர்மானத்தை செய்ய வேண்டியதாயிருந்தன, எனவே அவைகள் என்னை வெளியேற்றிவிட்டன. அது உண்மை. நான் தொடர்ந்து வெளியேற்றப்பட வேண்டுமென்றே எதிர்பார்க்கிறேன். ஆனால் ஒரு நாள் நான் யோர்தானை கடக்கும்போது நான் ஏற்றுக்கொள்ளப்படுவேன். உண்மை. நீங்கள் வெளியேற்றப்படுவீர்கள், ஆனால் நீங்கள் யோர்தானை கடக்கும் போது “நான் அந்த ஆற்றினை தனியே கடக்க வேண்டியிராது என்று என்னை உற்சாகப்படுத்துகிற, என் இருதயத்தை மகிழ்ச்சியாக்குகிற ஒரு எண்ணம் உண்டு.” அந்த ஒரு காரியம் உண்டு. என்றோ ஒரு நாள் நான் ஆற்றண்டை வருவேன், அப்பொழுது நான்…வேண்டியிராது. என்னை வாழ்த்த…அங்கே ஒருவராக அவர் காத்திருப்பார். நான் உண்மையாய் அங்கே இருப்பேன். 228 இங்கே அவர் தம்முடைய வார்த்தையினூடாக பேசினார், அவர் ஒவ்வொரு காரியத்தினூடாகவும் பேசுகிறார், ஒவ்வொரு காரியமும் வார்த்தையினூடாக பரிபூரணமாக கிரியை செய்து கொண்டிருக்கிறது. அதற்கு எதிராக எந்தக் காரியத்தையும் எவருமே கூற முடியாது. அது ஜனங்களுக்கு முன்பாக இருந்து கொண்டிருக்கிறது. ஜனங்களே, இந்த சத்தம் சீக்கிரத்தில் அமைதியாக்கப்படும். எனக்கு செவிகொடுங்கள். எனக்கு செவிகொடுங்கள். சீக்கிரத்தில் இனி இங்கே ஒருபோதும் அது பேசாது. அது உரைக்கப்படாது, அப்பொழுது நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆனால் உங்களால் கேட்க முடியும்போதே கீழ்படியுங்கள். 229 ஓ தேவனே, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, இந்த ஜனங்கள் ஒருவருக்காக ஒருவர் ஜெபித்துக் கொண்டிருக்கின்றனர். நீர் ஈஸ்டர் காலையன்று எழுந்தபோது, நீர் மேசியாவாயிருந்தீர் என்பதை நீர் நிரூபித்தீர். நீர் எழும்புவதற்கு முன்பே, நீர் மேசியாவாயிருந்தீர் என்று நீர் நிரூபித்தீர். நீர் மேசியாவின் அடையாளத்தினால் தேவனுடைய முத்திரை உமக்குள் இருந்தது என்பதை நீர் நிரூபித்தீர். தேவன் கூறினதைத் தவிர வேறொன்றும் செய்யாதபடி நீர் அவரோடு முத்திரையிடப்பட்டிருந்தீர். நீர் “நான் எப்பொழுதும் பிதாவுக்குப் பிரியமானதையேச் செய்கிறேன்” என்று கூறியிருந்தீர். அது அவருடைய வார்த்தையைக் காத்துக்கொள்ளுதலாய் இருக்கிறது. ஏனென்றால் தேவனுக்குப் பிரியமாயிருக்க, நாம் அவருடைய வார்த்தையை விசுவாசித்து, அவருடைய வார்த்தையைக் காத்துக்கொள்ள வேண்டும். ஆகையால் பிதாவே, அது இன்றைக்கும் அவ்வண்ணமே உள்ளதே, அதாவது ஒவ்வொரு தேவனுடையக் குமாரனும், ஒவ்வொரு தேவனுடையக் குமாரத்தியும் தேவனைப் பிரியப்படுத்தும்படித் தேவனுடைய வார்த்தையை காத்துக்கொள்ள வேண்டும். தேவனே இப்பொழுது நாங்கள் ஒருவர்மேல் ஒருவர் கரங்களை வைப்பதன் மூலம் உம்முடைய வார்த்தையை நாங்கள் கடைபிடித்துக்கொண்டிருக்கிறோம். நான் இந்தக் கூட்டத்தினருக்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறேன். 230 வார்த்தையானது பிரசங்கிக்கப்பட்டதை நாங்கள் கேட்டப்பிறகு, அந்நியர்கள் தங்களுடையக் கரங்களை உயர்த்துகிறதைக் கண்டோம். பாருங்கள், மகத்தான பரிசுத்த ஆவியானவர் அங்கேச் சென்று, அவர்களுடைய இருதயத்தின் நினைவுகளைப் பகுத்தறிந்து அவர்கள் யார் என்றும், அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்றும், என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது என்பதையும், அதைக் குறித்து எல்லாவற்றையும் அவர்களிடம் கூறும்போது, ஜனங்களால் எப்படி இனிமேலும் சந்தேகப்பட முடியும்? தேவனே, இக்காலையில் இங்கே இந்தப் பெரிய சபையின் சுவர்களைச் சுற்றிலும் நின்றிருக்கின்ற இவர்களுக்காக ஒரு மகத்தான பலன் உள்ளதே. 231 ஜீவனுள்ள தேவனின் ஓர் அடையாளத்தைக் காணும்படி…அவர்களுடையக் கைக்கால்கள் வலித்துக்கொண்டிருக்க, சிறு தாய்மார்கள் தங்களுடையக் குழந்தைகளோடும், வயோதிக தகப்பன்மார்களும் மற்றும் எல்லோருமே காத்துக்கொண்டும், விழித்துக் கொண்டும், கவனித்துக்கொண்டுமிருக்கின்றனர். அப்பொழுது அவர் காட்சியில் அசைவாடி, அவர் யேகோவாயிருக்கிறார் என்றும், அவர் இயேசுவாய், உயிர்த்தெழுந்த ஒருவராயிருக்கிறார் என்றும் நிரூபிக்கிறதையும் காண்கின்றனர். அது, “நான் சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், மரணத்திற்கும், பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்” ஏனென்றால் அவர் அதனுடைய முத்திரையை உடைத்துப்போட்டார். அவர் மரணத்தின் முத்திரையை உடைத்துப்போட்டார். அவர் கல்லறையின் முத்திரையை உடைத்துப் போட்டார். அவர் பாதாளத்தின் முத்திரையை உடைத்துப்போட்டார். அவர் பிரேதக் குழியின் முத்திரையை உடைத்துப்போட்டார். அவர் ஜீவ விருட்சத்திற்கு முத்திரையைத் திறந்து, அந்த ஜீவவிருட்சத்திற்குள்ளாக நம்மை அவருடையப் பரிசுத்த ஆவியினால் அபிஷேகித்து, நம்மை தேவனுடையக் குமாரரும், தேவனுடையக் குமாரத்திகளுமாக்கி, “விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின்தொடரும்; அவர்கள் வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்” என்று ஒருவர் மீது ஒருவர் கரங்களை வைக்கும்படி நமக்கு கட்டளையிட்டார். பிதாவாகிய தேவனே அது நடைபெற வேண்டியதாயுள்ளதே. 232 இங்குள்ள ஒவ்வொரு சுகவீனமான நபரைவிட்டும், துன்பப்படுகின்ற ஒவ்வொரு நபரைவிட்டும் பிசாசு செல்ல வேண்டும் என்றும், தேவனுடைய வல்லமையானது அவர்களது நல்ல ஆரோக்கியத்திற்கும், பெலனிற்கும் இந்த ஈஸ்டர் ஆராதனையின் ஒரு ஞாபகச் சின்னமாக எழுப்ப வேண்டும் என்று நான் சுவிசேஷத்தின் வல்லமையைக் கொண்டும், என்னை நியமித்து, சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்படி என்னை அனுப்பின பரலோகத்தின் தேவனைக் கொண்டும், வார்த்தையை எழுதின தேவனைக் கொண்டும், அந்த வார்த்தையை உறுதிப்படுத்த இப்பொழுதிருக்கிற தூதனைக் கொண்டும் நான் அறிவிக்கிறேன். நான் ஜனங்களிடத்தில் கொண்டிருக்கிற விசுவாசத்தின் காரணமாகவே நான் அதைக் கூறுகிறேன். சாத்தானே வெளியே வா. நீ தோற்கடிக்கப்பட்டிருக்கிறாய். இயேசு ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உன்னை ஜெயங்கொண்டுவிட்டார். நீ தோற்கடிக்கப்பட்டுள்ளாய். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜனங்களை விட்டு வெளியே வா. சரி, டாக்டர் நெல்சன். ஆமென். 233 சரி, சகோதரன் நெவில். உங்களில் எத்தனைபேர் விசுவாசிக்கிறீர்கள்? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். எத்தனை பேர் இதைக் கூறுவீர்கள், இதனோடு சேர்ந்து கூறுங்கள்: [சபையோர் சகோதரன் பிரான்ஹாம் கூறினபிறகு திருப்பிக் கூறுகிறார்கள்.—ஆசி.] நான் இப்பொழுதே அந்த இயேசு கிறிஸ்துவை, ஒரு உயிர்த்தெழுந்த தேவ குமாரனாக ஏற்றுக் கொள்கிறேன். அவர் என்னுடைய இரட்சகராயிருக்கிறார், அவர் என்னுடைய இராஜாவாக இருக்கிறார், அவர் என்னுடைய சுகமளிப்பவராக இருக்கிறார். நான் இப்பொழுதே குணமாக்கப்பட்டிருக்கிறேன். நான் இரட்சிக்கப்பட்டிருக்கிறேன். எனக்காக மரித்த அவருக்காக நான் ஜீவிப்பேன். எனக்காக உயிர்த்தெழுந்த அவருக்காக என்னால் மிகச் சிறந்த முறையில்…பணியாற்றும்படி புறப்பட்டுப்போக புதிதான ஜீவனோடு இங்கிருந்து நான் எழும்புவேன். அல்லேலூயா. ஜீவனுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. 234 இப்பொழுது, நீங்கள் உங்களுடைய முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? பாவ நிவிர்த்தியின் அடிப்படையின் பேரில் அதை ஏற்றுக்கொள்ளும் யாவரும்…இப்பொழுது நினைவிருக்கட்டும், ஒரு சமயம் சாத்தான் உங்களை பிழிந்தெடுத்திருந்தான், ஆனால் இயேசுவோ தானிய மணியை பதரிலிருந்து இழுத்து பிரித்தெடுப்பது போன்று அந்த காரியத்தை இழுத்தெடுத்துவிட்டார். அவர் அதில் பதரை பிரித்தெடுத்துப் போட்டுவிட்டார்; அவர் என்ன செய்தார், அவர் சாத்தானை வெளிப்படுத்தினார். அவர் ஈஸ்டர் காலையில் உயிர்த்தெழுந்தபோது (அல்லேலூயா!) அவர் பிசாசின் மேல், சுகவீனத்தின் மேல், மரணத்தின் மேல், சத்துருவின் ஒவ்வொரு வல்லமையின் மேலும் வெற்றிச் சிறந்துவிட்டார், சத்துருவுக்கு இனிமேல் எந்த வல்லமையுமேக் கிடையாது. அவன் ஒரு பொய்யுரைத்து ஏமாற்றுபவனாய் இருக்கிறான். அவன் உங்களிடத்தில் கூறும் பொய்யுரைத்தலை நீங்கள் கேட்டுவிட்டால், அவ்வளவுதான். ஆனால் அவன் உங்களிடத்தில் கூறும் பொய்யுரைத்தலை கேட்க மறுத்துவிட்டால் அப்பொழுது அவனுடைய பொய்யுரைத்தலை நீங்கள் ஜெயங்கொண்டு விடுவீர்கள். 235 இப்பொழுதே உங்களால் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள முடியும். இப்பொழுதே நீங்கள் அவருடைய ஆவியினால் நிரப்பப்பட முடியும். நீங்கள் அவனுடைய பொய்யுரைத்தலை ஏற்றுக்கொள்ளாவிட்டால், இப்பொழுதே நீங்கள் சுகமடைய முடியும். “விருப்பமுள்ளவன் எவனோ, இலவசமாய் ஜீவ ஊற்றிலிருந்து தண்ணீரை பருகும்படி வரக்கடவன்.” நீங்கள் இதை விசுவாசித்தால், நீங்கள் ஒவ்வொருவரும் எழும்பி நில்லுங்கள். உங்களுடைய கரங்களை உயர்த்தி, பரிசுத்த ஆவியையும், அவருடைய சுகமளித்தலின் வல்லமையையும் நீங்கள் இயேசுவின் நாமத்தில் பெற்றுக்கொள்ளுங்கள்.